இசுபைடர் மேன் திரைப்படம்
இசுபைடர் மேன் திரைப்படம் (இசுபைடர் மேன் திரைப்படம்) என்பது ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோரால் உருவாக்கப்பட்டு மற்றும் மார்வெல் வரைகதை வெளியீடுகளில் இடம்பெற்ற வரைகதை புத்தக கற்பனையான மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் பல மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தோன்றியுள்ளது.
முதல் முதலில் 1977 ஆம் ஆண்டில் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் நடிகர் 'நிக்கோலஸ் ஹம்மண்ட்' என்பவர் பீட்டர் பார்க்கர் / இசுபைடர் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இரண்டு முறை இந்த கதாபாத்திரம் மூலம் வெவ்வேறு திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். 1981 ஆம் ஆண்டில் ஜப்பான் மொழியில் ஜப்பான் டோய் நிறுவனம் 'இசுபைடர் மேன்' என்ற தொலைக்காட்சித் தொடரை உருவாக்கியது. 'ஷின்ஜி டோட் டக்குயா' என்பவர் யமாஷிரோ / ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த கதாபாத்திரத்திற்கான திரைப்பட உரிமையைப் பெற்று 2014 வரை இரண்டு திரைப்படத் தொடர்களை உருவாக்கியது. நடிகர் தோபி மக்குயர் என்பவர் நடிப்பில் இசுபைடர்-மேன் (2002), இசுபைடர்-மேன் 2 (2004), இசுபைடர்-மேன் 3 (2007) மற்றும் நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்ட் நடிப்பில் தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (2012), தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 (2014) போன்ற திரைப்படங்கள் வெளியானது.
பிப்ரவரி 2015 இல் டிஸ்னி,[1] மார்வெல் ஸ்டுடியோஸ்[2][3] மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இசுபைடர் மேன் திரைப்பட உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள ஓர் ஒப்பந்தம் செய்தன. இது ஸ்பைடர் மேனின் புதிய வாழ்க்கை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு[4] மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.[5][6] இந்த ஒப்பந்தம் சோனி பிக்சர்ஸ் தனி இசுபைடர் மேன் படங்களின் சொந்த நிதி, விநியோகம் மற்றும் இறுதி ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க அனுமதித்தது. மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் இப்படங்களை விநியோகித்தது.
இந்த புதிய பதிப்பில் நடிகர் டாம் ஹாலண்ட் என்பவர் ஸ்பைடர் மேனாக சித்தரிக்கப்பட்டார்.[7] மேலும் இவர் நடிப்பில் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[8][9] முதல் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) வரை ஐந்து படங்களில் தோன்றியுள்ளார்.[10] செப்டம்பர் 2019 இல் டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்கள் ஹாலண்டின் நடிப்பில் குறைந்தது இரண்டு தோற்றங்களை உருவாக்க ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டன: அவை தனி படம் மற்றொரு தனி படம் மற்றும் குழு படம் ஆகும்.
-
நிக்கோலஸ் ஹம்மண்ட் (1977-1981)
-
தோபி மக்குயர் (2002-2007)
-
ஆண்ட்ரூ கார்பீல்ட் (2012-2014)
-
டாம் ஹாலண்ட் (2016-2021)
இயங்குபடம் செய்யப்பட்ட ஸ்பைடர் மேன் படத்திற்கான திட்டங்கள் சோனி நிறுவனத்தால் ஏப்ரல் 2015 இல் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அவை சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் நிறுவனத்திடமிருந்து 'இசுபைடர் மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்சஸ்' (2018) என்ற படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஷமீக் மூர் என்பவர் மைல்ஸ் மோரல்ஸ் / ஸ்பைடர் மேன் ஆகியோருக்கு குரல் கொடுத்துள்ளார். இது பீட்டர் பார்க்கரின் கதாபாத்திரத்தில் இருந்து வேறுபட்டு புதிய காதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டது.
இசுபைடர் மேன் படங்கள் பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றன. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அவை மொத்தமாக $6.3 பில்லியனை வசூலித்துள்ளன. 2019 ஆம் ஆண்டு வெளியான இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் என்ற திரைப்படம் உலகளவில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல் செய்தது. இதுவே ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த முதல் படமாகவும் மற்றும் சோனி நிறுவனத்தின் மிக அதிக வசூல் செய்த படமாகவும் திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு வெளியான இன்டூ தி ஸ்பைடர்-வெர்சஸ் என்று இயங்குபடம் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதுதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால தொலைக்காட்சி படங்கள்
தொகுதி அமேசிங் ஸ்பைடர் மேன் தொடர் (1977–1981)
தொகுபடம் | வெளியான திகதி | இயக்குநர் | திரைக்கதை எழுத்தாளர் | தயாரிப்பாளர் (கள்) |
---|---|---|---|---|
இசுபைடர் மேன் | செப்டம்பர் 14, 1977 | ஸ்வாகேமர் | ஆல்வின் போரெட்ஸ் | சார்லஸ் டபிள்யூ. புரைஸ், டேனியல் ஆர். குட்மேன், எட்வர்ட் ஜே. மாண்டாக்னே |
இசுபைடர் மேன் ஸ்ட்ரிக்ஸ் பாக் | மே 8, 1978 | ரான் ஸ்டேட்லோப் | ராபர்ட் ஜேன்ஸ் | |
இசுபைடர் மேன்: தி டிராகன் சல்லேங்ஸ் | மே 9, 1981 | லியோனல் ஈ. சீகல் |
இசுபைடர் மேன் 1977
தொகு1977 ஆம் ஆண்டில் 'தி அமேசிங் ஸ்பைடர் மேன்' என்ற பெயரில் தொலைக்காட்சி படமாகவும், அமெரிக்காவிற்கு வெளியே கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனம் 'ஸ்பைடர் மேன்' என்ற பெயரிலும் வெளியிட்டது. இந்த திரைப்படம் ஸ்வாகேமர் இயக்கத்தில் ஆல்வின் போரெட்ஸ் எழுத்தில் உருவாக்கப்பட்டது. இந்த படம் சிபிஎஸ்ஸில் செப்டம்பர் 14, 1977 அன்று திரையிடப்பட்டது, 1980 இல் விஎச்எஸ் வெளியீட்டைப் பெற்றது.
ஜப்பானிய படம்
தொகுபடம் | வெளியான திகதி | இயக்குநர் | திரைக்கதை எழுத்தாளர் | கதை | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|---|
இசுபைடர் மேன் | சூலை 22, 1978 | காய்ச்சி டக்கீமோடோ | சுசுமு தாகாகு | சபுரோ யட்சுதே | சுசுமு யோஷிகாவா |
சாம் ரெய்மி திரைப்படங்கள் (2002-2007)
தொகுபடம் | வெளியான திகதி | இயக்குநர் | திரைக்கதை எழுத்தாளர் | கதை | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|---|
இசுபைடர்-மேன் | மே 3, 2002 | சாம் ரைமி | டேவிட் கோயப் | லாரா ஜிஸ்கின், இயன் பிரைஸ் | |
இசுபைடர்-மேன் 2 | சூன் 30, 2004 | ஆல்வின் சார்ஜென்ட் | ஆல்பிரட் கோப், மைல்ஸ் மில்லர், மைக்கல் சாபன் | லாரா ஜிஸ்கின், அவி ஆராட் | |
இசுபைடர்-மேன் 3 | மே 4, 2007 | சாம் ரெய்மி, இவன் ரெய்மி, ஆல்வின் சார்ஜென்ட் | சாம் ரெய்மி, இவன் ரெய்மி | லாரா ஜிஸ்கின், அவி ஆராட், கிராண்ட் கர்டிஸ் |
மார்க் வெப் திரைப்படங்கள் (2012–2014)
தொகுபடம் | வெளியான திகதி | இயக்குநர் | திரைக்கதை எழுத்தாளர் | கதை | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|---|
தி அமேசிங் ஸ்பைடர்-மேன் | சூலை 3, 2012 | மார்க் வெப் | ஜேம்ஸ் வாண்டர்பில்ட், ஆல்வின் சார்ஜென்ட், ஸ்டீவ் குலவ்ஸ் | ஜேம்ஸ் வாண்டர்பில்ட் | லாரா ஜிஸ்கின், அவி ஆராட், மாட் டோல்மாச் |
தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 | மே 2, 2014 | அலெக்ஸ் கர்ட்ஸ்மேன், ராபர்டோ ஓர்சி, ஜெப் பிங்க்னர் | அலெக்ஸ் கர்ட்ஸ்மேன், ராபர்டோ ஓர்சி, ஜெப் பிங்க்னர், ஜேம்ஸ் வாண்டர்பில்ட் | அவி ஆராட், மாட் டோல்மாச் |
மார்வெல் ஸ்டுடியோஸ் உடன் உரிம ஒப்பந்தமான திரைப்படங்கள்
தொகுபடம் | வெளியான திகதி | இயக்குநர் | திரைக்கதை எழுத்தாளர் | கதை | தயாரிப்பாளர் |
---|---|---|---|---|---|
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் | சூலை 7, 2017 | ஜோன் வாட்ஸ் | ஜொனாதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிசு டேலி, ஜோன் வாட்ஸ், கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் | ஜோனதன் கோல்ட்ஸ்டைன், ஜான் பிரான்சிஸ் டேலி | கேவின் பிகே, அமி பாஸ்கல் |
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் | சூலை 2, 2019 | கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ் | |||
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் | திசம்பர் 17, 2021 |
மார்வெல் திரைப் பிரபஞ்ச குழுவுடன் இணைத்து தோன்றிய படங்கள்
தொகுகேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)
தொகுஅவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018)
தொகுஅவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)
தொகுவரவேற்பு
தொகுபாக்ஸ் ஆபிஸ் (வசூல்)
தொகுபடம் | வெளியான திகதி | மொத்த வருவாய் | வசூல் தரவரிசை | ஆக்கச்செலவு | குறிப்புகள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வட அமெரிக்கா | பிற பிரதேசங்கள் |
வட அமெரிக்கா | பிற பிரதேசங்கள் |
உலகளவில் | எல்லா நேரமும் வட அமெரிக்கா |
உலகம் முழுவதும் | |||
சாம் ரெய்மி திரைப்படங்கள் | |||||||||
இசுபைடர்-மேன் | May 3, 2002 | $407,022,860 | $418,002,176 | $825,025,036 | 35 | 82 | $139 மில்லியன் | [11] | |
இசுபைடர்-மேன் 2 | June 30, 2004 | $373,585,825 | $415,390,628 | $788,976,453 | 46 | 95 | $200 மில்லியன் | [12] | |
இசுபைடர்-மேன் 3 | May 4, 2007 | May 1, 2007 | $336,530,303 | $558,453,070 | $894,983,373 | 60 | 64 | $258 மில்லியன் | [13] |
மார்க் வெப் திரைப்படங்கள் | |||||||||
தி அமேசிங் ஸ்பைடர்-மேன் | July 3, 2012 | June 27, 2012 | $262,030,663 | $495,900,000 | $757,930,663 | 115 | 104 | $230 மில்லியன் | [14] |
தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 | May 2, 2014 | April 16, 2014 | $202,853,933 | $506,128,390 | $708,982,323 | 208 | 121 | $250 மில்லியன் | [15] |
மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்கள் | |||||||||
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் | July 7, 2017 | July 5, 2017 | $334,201,140 | $545,965,784 | $880,166,924 | 64 | 68 | $175 மில்லியன் | [16] |
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் | July 2, 2019 | June 28, 2019 | $390,532,085 | $741,395,911 | $1,131,927,996 | 40 | 25 | $160 மில்லியன் | [17] |
அசைவூட்டத் திரைப்படம் | |||||||||
ஸ்பைடர்-மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ் | December 14, 2018 | December 12, 2018 | $190,241,310 | $185,299,521 | $375,540,831 | 232 | 335 | $90 மில்லியன் | [18] |
மொத்தம் | $2,49,69,98,119 | $3,866,535,480 | $6,363,533,599 | 6 | 6 | $1.502 பில்லியன் | [19] [20] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Coggan, Devan (24 August 2019). "Tom Holland opens up about Spider-Man's future in wake of Disney-Sony rift". Entertainment Weekly. https://ew.com/movies/2019/08/24/tom-holland-spider-man-future-disney-sony/.
- ↑ Fritz, Ben (December 9, 2014). "Sony, Marvel Discussed Spider-Man Movie Crossover". The Wall Street Journal. https://blogs.wsj.com/speakeasy/2014/12/09/sony-marvel-discussed-spider-man-movie-crossover/.
- ↑ "Sony Pictures Entertainment Brings Marvel Studios Into The Amazing World Of Spider-Man". Marvel.com. பெப்பிரவரி 9, 2015. Archived from the original on February 10, 2015. பார்க்கப்பட்ட நாள் February 10, 2015.
- ↑ Bibbiani, William (ஏப்பிரல் 11, 2015). "Exclusive: Marvel's Spider-Man Reboot is NOT an Origin Story". CraveOnline.com. Archived from the original on April 12, 2015. பார்க்கப்பட்ட நாள் April 11, 2015.
- ↑ Bradley, Bill (சூன் 26, 2017). "Tom Holland Confirms Popular Fan Theory: Spider-Man Was In 'Iron Man 2'". HuffPost. Archived from the original on சூன் 26, 2017. பார்க்கப்பட்ட நாள் சூன் 26, 2017.
- ↑ Ryan, Mark (சூன் 27, 2017). "'Spider-Man: Homecoming' Director Jon Watts Explains Real Story Behind Peter Parker's 'Iron Man 2' Cameo". Uproxx. Archived from the original on சூன் 27, 2017. பார்க்கப்பட்ட நாள் சூன் 27, 2017.
- ↑ Siegel, Tatiana (நவம்பர் 9, 2016). "Tom Holland Learned He Got His 'Spider-Man: Homecoming' Role From a Marvel Instagram Post". The Hollywood Reporter. Archived from the original on November 9, 2016. பார்க்கப்பட்ட நாள் November 9, 2016.
- ↑ Fritz, Ben (February 10, 2015). "Marvel and Sony Reach Deal on Spider-Man Movie Production". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் February 9, 2015.
- ↑ McNary, David (மார்ச்சு 3, 2015). "Russo Brothers Sign First-Look Deal with Sony". Variety. Archived from the original on March 3, 2015. பார்க்கப்பட்ட நாள் March 3, 2015.
- ↑ Fleming Jr., Mike (August 20, 2019). "Disney-Sony Standoff Ends Marvel Studios & Kevin Feige's Involvement In 'Spider-Man'". Deadline Hollywood. Archived from the original on August 20, 2019. பார்க்கப்பட்ட நாள் August 20, 2019.
- ↑ "Spider-Man (2002)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "Spider-Man 2 (2004)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "Spider-Man 3 (2007)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "The Amazing Spider-Man (2012)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "The Amazing Spider-Man 2 (2014)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "Spider-Man: Homecoming (2017)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "Spider-Man: Far from Home". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "Spider-Man: Into the Spider-Verse (2018)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
- ↑ "Spider-Man Movies at the Box Office". Box Office Mojo. Archived from the original on November 26, 2005. பார்க்கப்பட்ட நாள் November 26, 2019.
- ↑ "Movie Franchises and Brands Index". Box Office Mojo. Archived from the original on December 16, 2018. பார்க்கப்பட்ட நாள் July 24, 2019.