மார்வெல் காமிக்ஸ்
மார்வெல் காமிக்ஸ் அல்லது அற்புத வரைகதை என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனமான மார்வெல் பப்ளிஷிங், இனக்., அமெரிக்க வரைக்கதை புத்தகங்கள் மற்றும் தொடர்புடைய ஊடகங்களின் வெளியீட்டாளரான மார்வெல் காமிக்ஸ் குழுமத்தின் நிறுவனஅடையாள பெயர் மற்றும் முதன்மை முத்திரையாகும். 2009 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி நிறுவனம் மார்வெல் வேர்ல்டுவைட்டின் தாய் நிறுவனமான மார்வெல் மகிழ்கலை நிறுவனம் வாங்கியது.[2][3]
மூல நிறுவனம் | மார்வெல் மகிழ்கலை (வால்ட் டிஸ்னி நிறுவனம்) |
---|---|
நிலைமை | செயலில் |
துவங்கப்பட்டது | சனவரி 12, 1939 |
துவங்கியவர் | மார்ட்டின் குட்மேன் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
தலைமையகம் | 135 வே. 50வது தெரு, நியூயார்க் நகரம் |
பரவல் | டயமண்ட் வரகதை விநியோகஸ்தர்கள் ஹச்செட் புத்தகக் குழு வாடிக்கையாளர் சேவைகள்[1] |
முக்கிய நபர்கள் |
|
Fiction genres |
இது 1939 ஆம் ஆண்டில் மார்ட்டின் குட்மேனால் டைம்லி காமிக்ஸ் என்ற பெயரில் மற்றும் 1951 ஆம் ஆண்டில் அட்லஸ் காமிக்ஸ் என்று அறியப்பட்டது. மார்வெல் சகாப்தம் 1961 ஆம் ஆண்டில் தொடங்கியது, ஸ்டான் லீ, ஜாக் கிர்பி, ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலரால் பென்டாஸ்டிக் போர் போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான டீசீ காமிக்ஸை தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்[4].
ஸ்பைடர் மேன், ஆன்ட் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வாஸ்ப், வால்வரின், பிளாக் பாந்தர், கேப்டன் மார்வெல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கோஸ்ட் ரைடர், பிளேட், டேர்டெவில், பனிஷர் போன்ற பல மார்வல் மீநாயகன் கதாபாத்திரங்கள் மற்றும் அவென்ஜர்ஸ், எக்ஸ்-மென், பென்டாஸ்டிக் போர், கார்டியன்சு ஒப் த கலக்சி போன்ற மீநாயகன் குழுக்கள் மற்றும் பல பிரபல கதாப்பாத்திரங்களை உருவாக்கியது மார்வெல் காமிக்ஸ். மார்வெளின் கற்பனை கதாப்பாத்திரங்கள் அனைத்துமே மார்வெல் அண்டம் எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது[5]
அதிகாரிகள்
தொகு- மைக்கேல் Z. ஹாப்சன்
- நிர்வாக துணைத் தலைவர்; மார்வெல் காமிக்ஸ் குழுமத்தின் துணைத் தலைவர் (1986)
- ஸ்டான் லீ - தலைவர் மற்றும் வெளியீட்டாளர் (1986)
- ஜோசப் கலாமாரி - நிர்வாக துணைத் தலைவர் (1986)
- ஜிம் ஷூட்டர் - துணைத் தலைவரும், தலைமை ஆசிரியரும் (1986)
வெளியீட்டாளர்கள்
தொகு- ஆபிரகாம் குட்மேன் (1939)
- மார்ட்டின் குட்மேன் (1939-1972)
- சார்லஸ் "சிப்" குட்மேன் (1972)
- ஸ்டான் லீ (1972 - அக்டோபர் 1996)
- ஷிரெல் ரோட்ஸ் (அக்டோபர் 1996 - அக்டோபர் 1998)
- வின்ஸ்டன் ஃபோல்க்ஸ் (பிப்ரவரி 1998 - நவம்பர் 1999)
- பில் ஜெமாஸ் (பிப்ரவரி 2000 - 2003)
- டான் பக்லி (2003 – ஜனவரி 2017)
- ஜான் நீ (ஜனவரி 2018 - தற்போது)
தலைமை ஆசிரியர்கள்
தொகு- ஆசிரியர்
- மார்ட்டின் குட்மேன் (1939-1940; தலைப்பு மட்டும்) [5]
- ஜோ சைமன் (1939-1941)
- ஸ்டான் லீ லீ (1941-1942)
- வின்சென்ட் ஃபாகோ (லீயின் இராணுவ சேவையின் போது செயல் ஆசிரியர்) (1942-1945)
- ஸ்டான் லீ (1945-1972)
- ராய் தாமஸ் (1972-1974)
- லென் வெய்ன் (1974-1975)
- மார்வ் வொல்ஃப்மேன் (கருப்பு மற்றும் வெள்ளை இதழ்கள் 1974-1975, முழு வரி 1975-1976)
- ஜெர்ரி கான்வே (1976)
- ஆர்ச்சி குட்வின் (1976-1978)
- தலைமை ஆசிரியர்
- ஜிம் ஷூட்டர் (1978-1987)
- டாம் டெஃபல்கோ (1987-1994)
- ஒட்டுமொத்தமாக இல்லை; தனி குழு ஆசிரியர்கள்-தலைமை (1994-1995)
- மார்க் க்ரூன்வால்ட் (அவென்ஜர்ஸ் & காமிக்ஸ்)
- பாப் ஹர்ராஸ் (எக்ஸ்-மென்)
- பாப் புடியன்ஸ்கி (ஸ்பைடர் மேன்)
- பாபி சேஸ் (மார்வெல் எட்ஜ்)
- கார்ல் பாட்ஸ் (காவிய காமிக்ஸ் மற்றும் பொது பொழுதுபோக்கு)
- பாப் ஹர்ராஸ் (1995-2000)
- ஜோ கஸ்ஸாடா (2000–2011)
- ஆக்செல் அலோன்சோ (2011–2017)
- சி. பி. செபுல்கி (2017 - தற்போது வரை)
திரைப்படங்கள்
தொகுசெப்டம்பர் 2015 தொடக்கத்தில், மார்வெலின் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் 7.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான வசூல் செய்தது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hachette - Our Clients". Archived from the original on 2017-09-11. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
- ↑ Marvel Sets Date for Disney Vote[தொடர்பிழந்த இணைப்பு], Los Angeles Business Journal, December 3, 2009
- ↑ "Disney to Acquire Marvel Entertainment for $4B". Marketwatch. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31.
- ↑ Marvel Comics official site Retrieved October 18, 2008
- ↑ Ultimate Marvel Universe பரணிடப்பட்டது 2008-06-10 at the வந்தவழி இயந்திரம் Retrieved October 18, 2008
- ↑ "Franchise Index". Box Office Mojo. Archived from the original on February 1, 2016. பார்க்கப்பட்ட நாள் May 29, 2013.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Marvel Comics தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Vassallo, Michael J. (2005). "A Timely Talk with Allen Bellman". Comicartville.com. p. 2 இம் மூலத்தில் இருந்து January 17, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100117061024/http://www.comicartville.com/bellmanpg2.htm..
- Complete Marvel Reading Order from Travis Starnes