வாஸ்ப்
வாஸ்ப் (குளவி) (ஆங்கில மொழி: Wasp) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கற்பனை மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ, ஜாக் கிர்பி, எர்னி ஹார்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. வாஸ்ப்பின் முதல் தோற்றம் ஜூன் 1963 இல் இருந்தது டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #44 என்ற கதையில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
வாஸ்ப் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #44 (ஜூன் 1963) |
உருவாக்கப்பட்டது | ஸ்டான் லீ எர்னி ஹார்ட் ஜாக் கிர்பி |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | ஜேனட் வான் டைன் |
இனங்கள் | மனித விகாரி |
குழு இணைப்பு | அவென்ஜர்ஸ் விசித்திரமான அவென்ஜர்ஸ் வகாண்டாவின் முகவர்கள் |
பங்காளர்கள் | ஹாங்க் பிம் |
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள் | யாரையும் வெல்லும் குளவி |
திறன்கள் |
|
இவளின் கதாபாத்திரம் குளவி இறக்கை கொண்டு அதிக உயரம் பறக்கக்கூடியவளாகவும், பூச்சி கொல்லி குண்டை வாய் மூலம் துப்பி எதிரிகளை கொள்ளகூடிய சக்தி படைத்தவளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர் அவென்ஜர்ஸ் நிறுவன உறுப்பினராகவும், அணியின் நீண்டகால தலைவராகவும் உள்ளார்.
இந்த பாத்திரம் 2015 ஆம் ஆண்டு ஆண்ட்-மேன் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றிவிக்கப்பட்டது. மார்வெல் திரைப் பிரபஞ்சம் இந்த பாத்திரத்தை நடிகை மிச்செல் பைபர் மூலம் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் சித்தரித்தனர்.
2011 இல் வாஸ்ப் கதாபாத்திரம் "எல்லா நேரத்திலும் சிறந்த 100 காமிக் புத்தக ஹீரோக்களில்" 99 வது இடத்தைப் பிடித்தது.[1] 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 26 வது இடமும் பெற்றார்.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Wasp is number 99". IGN இம் மூலத்தில் இருந்து நவம்பர் 24, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161124121615/http://www.ign.com/top/comic-book-heroes/99. பார்த்த நாள்: May 5, 2011.
- ↑ "The Top 50 Avengers". IGN. April 30, 2012 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 16, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161016084203/http://www.ign.com/top/avengers/26. பார்த்த நாள்: July 28, 2015.
வெளியிணைப்புகள் தொகு
- Wasp at the Marvel Universe wiki
- Earth's Mightiest Heroines, a fansite for the Women of the Avengers