மார்வெல் திரைப் பிரபஞ்சம்
மார்வெல் திரைப் பிரபஞ்சம் (Marvel Cinematic Universe (MCU)) அல்லது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் பகிரப்பட்ட புனைபிரபஞ்சம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ்களில் தோன்றும் கதாப்பாத்திரங்கள் பற்றி மார்வெல் சுரூடியோசினால் சுயாதீனமாகத் தயாரித்து வெளியிடப்படும் பட வரிசைகளின் தொகுப்பாகும். மேலதிகமாக, வரைகதைகள், குறும்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்பனவும் இந்நாமத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. மாவல் வரைகதைகளின் பாணியில் பல்வேறு கதாபாத்திரங்கள், கதையமைப்புகள் மற்றும் நடிகர்களைக் கொண்ட படங்களை உள்ளடக்கியதாக இது காணப்படுகிறது. கிளாக்கு கிறேக்கின் நடிப்பில், இத்திரைப்படங்களில் தோன்றும் பில் கோல்சன் கதாபாத்திரம் மாவல் திரைப்பிரபஞ்சத்தினால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாகும்.
மார்வெல் திரைப் பிரபஞ்சம் | |
---|---|
![]() | |
உருவாக்கம் | மார்வெல் ஸ்டுடியோ |
இசை | மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் இசை |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | 2008-தற்போது வரை |
2008 இல் வெளியான அயன்-மேன் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் முதல் திரைப்படம் ஆகும். இது 2012 இல் தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்துடன் முடிவடைந்தது. இரண்டாவது கட்டமாக அயன் மேன் 3 (2013) உடன் தொடங்கி ஆண்ட்-மேன் (2015) உடன் முடிந்தது. மூன்றாம் கட்டமாக கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) உடன் தொடங்கி ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019) உடன் முடிந்தது. இந்த மூன்று கட்டங்களையும் கூட்டாக "தி இன்ஃபினிட்டி சாகா" என்று அழைக்கப்படுகின்றது. நான்காம் கட்டமாக பிளாக் விடோ (2020) உடன் தொடங்கி தோர்: லவ் அண்ட் தண்டர் (2021) உடன் முடிவடையும்.
திரைப்படங்களோடு மட்டும் நின்றுவிடாமல் 2010 இல் மேற்குறிப்பிடப்பட்ட திரைப்படங்களுடன் தொடர்புடைய வரைகதைப் புத்தகங்களின் வெளியீட்டுடன் இது இன்னமும் விரிவுபட்டது. மேலும் 2011 முதல் மார்வெல் ஒன்-ஷாட் என்ற பெயரின்கீழ் குறும்படங்களும் 2013 முதல் ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ. எனும் பெயருடைய தொலைக்காட்சித் தொடரும் வெளியானது.
அமெரிக்காவிலும் உலகளவிலும் வசூலில் முதலிடம் பிடிக்கும் திரைப்படத் தொடர்களைக் கொண்டிருப்பதுடன், வரைகதைக் கதாபத்திர உரிமங்களைக் கொண்டுள்ள பல்வேறு படங்கள் தமது சொந்தப் பிரபஞ்சத்தை அமைப்பதற்கு முன்னோடியாகவும் உள்ளது.
அபிவிருத்திதொகு
2005 ஆம் ஆண்டளவில் மார்வெல் மகிழ்கலை தனது சொந்த திரைப்படங்களை சுயாதீனமாக தயாரித்து அவற்றை பாரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கத் தொடங்கியது. முன்னதாக கொலம்பியா பிக்சர்ஸ், நியூ லைன் சினிமா மற்றும் பலவற்றோடு பல சூப்பர் ஹீரோ படங்களை இணைந்து தயாரித்தது, இதில் 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஏழு ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.