காமோரா (ஆங்கில மொழி: Gamora) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ஜிம் ஸ்டார்லின் என்பவர் உருவாக்கினார். இவரின் முதல் தோற்றம் ஜூன் 1975 இல் வெளியான 'ஸ்ட்ரேன்ஜ் டேல்ஸ்' #180 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய சக்தி மனிதநேயமற்ற வலிமை மற்றும் சுறுசுறுப்பு மற்றும் சிறந்த தற்காப்புக் கலைஞர் ஆவார். இவரால் விண்மீன் மண்டலத்தில் உள்ள பெரும்பாலான எதிரிகளை வெல்ல முடியும். அவர் இன்ஃபினிட்டி வாட்ச், அண்ணிகிளாடின் மற்றும் கார்டியன்சு ஒப் த கலக்சி[1] போன்ற மீநாயகன் அணியில் உறுப்பினராக உள்ளார்.[2]

காமோரா
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் வரைகதை
முதல் தோன்றியது'ஸ்ட்ரேன்ஜ் டேல்ஸ்' #180 (ஜூன் 1975)
உருவாக்கப்பட்டதுஜிம் ஸ்டார்லின்
கதை தகவல்கள்
இனங்கள்ஜென்-வூபெரிஸ்
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
இன்ஃபினிட்டி வாட்ச்
ஃபாலன்க்ஸ்
அண்ணிகிளாடின்
யூனிட் பிரோன்ட்
நோவா கார்ப்ஸ்
பங்காளர்கள்பீட்டர் குயில், ஆடம் வார்லாக்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்பிரபஞ்சத்தில் மிகவும் ஆபத்தான பெண்
திறன்கள்
  • அமானுஷ்ய வலிமை, வேகம், சுறுசுறுப்பு மற்றும் ஆயுள்
  • சிறந்த கொலைகாரி
  • நிபுணர் தற்காப்புக் கலைஞர் மற்றும் கைகோர்த்து போராடுபவர்t

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை ஜோ சல்டனா என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Greeting the Guardians: Drax and Gamora பரணிடப்பட்டது பெப்பிரவரி 21, 2009 at the வந்தவழி இயந்திரம், Newsarama, May 13, 2008
  2. Richards, Dave (October 14, 2012). "NYCC: Bendis, McNiven & Wacker Relaunch the "Guardians of the Galaxy"". Comic Book Resources. பார்க்கப்பட்ட நாள் October 15, 2012.

வெளியிணைப்புகள் தொகு

  • Gamora at Marvel.com
  • Gamora at the Comic Book DB
  • Burch, Jeanne; McQuaid, Sean. "Gamora". Women of Marvel Comics (WOMC). Archived from the original on November 5, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமோரா&oldid=3328357" இலிருந்து மீள்விக்கப்பட்டது