வார் மெஷின்

வார் மெஷின் (போர் இயந்திரம்) (ஆங்கில மொழி: War Machine) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரம் 'அயன் மேன்' (ஜனவரி 1979) இல் 'ஜேம்ஸ் ரோட்ஸ்' என்ற கதாபாத்திரப் பெயராக முதன் முறையாகத் தோன்றியது. இக்கதாபாத்திரம் டேவிட் மைக்கேலினி, ஜான் பைர்ன் மற்றும் பாப் லேட்டன்ம ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.

வார் மெஷின்
C2E2 2014 Contest - War Machine (14128834173).jpg
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஜேம்ஸ் ரோட்ஸ் ஆக:
அயன் மேன் #118 (ஜனவரி 1979)
உருவாக்கப்பட்டதுடேவிட் மைக்கேலினி
ஜான் பைர்ன்
பாப் லேட்டன்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஜேம்ஸ் ரூபர்ட் "ரோடி" ரோட்ஸ்
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
பங்காளர்கள்அயன் மேன்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்அயன் மேன்
திறன்கள்
 • நிராயுதபாணியான போராளி
 • விமானப் பொறியியாளர்
 • அயர்ன் மேனின் கவசம்
  • வலிமை, வேகம், ஆயுள், சுறுசுறுப்பு
  • சூப்பர்சோனிக் விமானம்
  • தாக்குதல் ஆயுதம் மற்றும் தற்காப்பு ஆயுதங்கள்
  • பறக்கும் இருப்பு இறக்கைகள்

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டும் விதமாக மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படத் தொடர்களில் நடிகர் டெரன்ஸ் ஹோவர்ட் என்பர் மூலம் அயன் மேன் (2008) என்ற திரைபபடத்திலும் நடிகர் டான் செடில் மூலம் அயன் மேன் 2 (2010), அயன் மேன் 3 (2013), அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டது.[1][2] 2012 இல் வார் மெஷின் "சிறந்த 50 அவென்ஜ்ர்ஸ்" என்ற பட்டியலில் 31வது இடத்தைப் பிடித்தது.[3]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்_மெஷின்&oldid=3328330" இருந்து மீள்விக்கப்பட்டது