அயன் மேன் (2008 திரைப்படம்)

அயன் மேன் (ஆங்கில மொழி: Iron Man) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கியுள்ளார்.

அயன் மேன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் பெவ்ரோ
தயாரிப்பு
மூலக்கதை
திரைக்கதைமார்க் பெர்கஸ்
ஹாக் ஆஸ்ட்பி

ஆர்ட் மார்கம்
மாட் ஹோலோவே
இசைரமீன் ஜவாடி
நடிப்பு
ஒளிப்பதிவுமத்தேயு லிபாடிக்கு
படத்தொகுப்புடான் லெபண்டல்
கலையகம்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 2008 (2008-04-14)(சிட்னி பிரீமியர்)
மே 2, 2008 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்126 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140 மில்லியன்[2]
மொத்த வருவாய்$585.1 மில்லியன்

ராபர்ட் டவுனி ஜூனியர் என்பவர் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ஜெப் பிரிட்ஜஸ், ஷான் டௌப், டெரன்ஸ் ஹோவர்ட் மற்றும் கிவ்வினெத் பேல்ட்ரோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 14 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தில் முதல் படம் ஆகும். இந்த திரைப்படம் 140 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு 585 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மற்றும் 2008 ஆம் ஆண்டில் எட்டாவது மிக அதிக வசூல் செய்த படமாகும்.

2008 ஆம் ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக அமெரிக்க திரைப்பட நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் 81ஆவது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த இசை இயக்கம் மற்றும் சிறந்த திரை வண்ணத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அயன் மேன் 2 (2010) மற்றும் அயன் மேன் 3 (2013) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

கதைச்சுருக்கம்

தொகு

டோனி ஸ்டார்க் என்பவர் தொழிற்துறைச் சார்ந்த மகிழ்ச்சியான இளைஞராகவும் மற்றும் நுண்ணறிவுமிக்கப் பொறியாளராகவும் இருந்தார். அவர் கடத்தப்பட்டு கடத்தல்காரர்களால் அதிகமான பேரழிவு ஆயுதங்களை உருவாக்குமாறு வற்புறுத்தப்பட்ட போது கடுமையான இதயக் காயத்தால் அவதிப்பட்டார். தனது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளவும் சிறைபட்ட நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் திறனுள்ள பாதுகாப்புக் கவச அங்கியை உருவாக்கினார்.

பின்னர் அவர் அயன் மேன் என்ற பாத்திரத்தின் மூலம் உலகத்தைக் காக்க இந்த அங்கியைப் பயன்படுத்திக் கொண்டார். டோனி தனது ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்ற பன்னாட்டு நிறுவனமான மூலமாக, இராணுவ ஆயுதங்கள் மற்றும் தனது சொந்த உலோக அங்கியைத் தொழில்நுட்பக் கருவிகளுடன் உருவாக்கி குற்றத்திற்கு எதிராக செயல்பட வைத்தார். பொது உடைமைத் தத்துதுவத்திற்கு எதிரான சண்டை யிட்டு அதில் எப்படி வெற்றி கண்டார் என்பது தான் கதை.

நடிகர்கள்

தொகு

தொடர்ச்சியான தொடர்கள்

தொகு

அயன் மேன் 2

தொகு

இந்த திரைப்படம் ஏப்ரல் 26, 2010 இல் வெளியானது. கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படதை ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிவ்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், ஸ்கார்லெட் ஜோஹான்சன், சாம் ராக்வெல், மிக்கி ரூர்கி மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

அயன் மேன் 3

தொகு

அயர்ன் மேன் 3 ஏப்ரல் 14, 2013 இல் வெளியானது. கேவின் பிகே[20][21] என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிவ்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், கய் பியர்ஸ், ரெபேக்கா ஹால், ஸ்டெபானி சோஸ்டாக், ஜேம்ஸ் பேட்ஜ் டேல், ஜான் பெவ்ரோ மற்றும் பென் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

வெளியீடு

தொகு

அயர்ன் மேன் ஏப்ரல் 14, 2008 அன்று சிட்னியில் உள்ள ஜார்ஜ் ஸ்ட்ரீட்டில் உள்ள கிரேட்டர் யூனியன் திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் சர்வதேச சந்தைகளில் ஏப்ரல் 30 அன்று வெளியிடத் தொடங்கியது மற்றும் மே 2, 2008 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அயர்ன் மேன் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இன் முதலாம் கட்டத்தில் வெளியான முதல் படம் ஆகும். மார்வெல் ஸ்டுடியோவின் 10 ஆண்டு நிறைவு விழாவான ஐமாக்ஸ் விழாவின் ஒரு பகுதியாகம், ஆகஸ்ட் 30, 2018 அன்று முதல் முறையாக ஐமாக்ஸில் படம் வடிவமைக்கப்பட்டு திரையிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ambrose, Tom (July 26, 2007). "The Man in the Iron Mask". Empire: 69. 
  2. Hewitt, Chris (April 2008). "Super Fly Guy". Empire: 66–72. 
  3. Roger Ebert (June 1, 2008). "Iron Man (PG-13)". Chicago Sun-Times இம் மூலத்தில் இருந்து நவம்பர் 2, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102083301/http://rogerebert.suntimes.com/apps/pbcs.dll/article?AID=%2F20080601%2FREVIEWS%2F467306179. 
  4. "Iron Man Award Ceremony Narrator". Behind The Voice Actor. Archived from the original on June 8, 2014. பார்க்கப்பட்ட நாள் June 8, 2014.
  5. Carroll, Larry (March 18, 2008). "Iron Man Star Robert Downey Jr. Talks About Incredible Hulk Cameo, Controversial Tropic Thunder Pics". MTV. http://www.mtv.com/news/1583534/iron-man-star-robert-downey-jr-talks-about-incredible-hulk-cameo-controversial-tropic-thunder-pics/. 
  6. "Iron Man Production Notes". SciFi Japan. April 30, 2008. Archived from the original on March 28, 2013. பார்க்கப்பட்ட நாள் March 28, 2013.
  7. Shapiro, Marc (April 2008). "Pumping Iron". Starlog: pp. 47–50. 
  8. Quint (February 9, 2007). "Quint visits the IRON MAN production offices! Art! Favreau speaks about sequels (?!?), casting and more!!!". Ain't It Cool News. http://www.aintitcool.com/node/31525. 
  9. Rolfsen, Bruce (March 21, 2007). "Iron Man pilot to hit big screen". Air Force Times. http://www.airforcetimes.com/news/2007/03/airforce_ironman_070321w/. 
  10. Worley, Rob M. (April 22, 2008). "Iron Man: Terrence Howard lives the dream". Comics2Films இம் மூலத்தில் இருந்து December 2, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081202050506/http://www.mania.com/iron-man-terrence-howard-lives-dream_article_90336.html. 
  11. Rotten, Ryan (April 1, 2008). "Iron Man: The Set Visit – Terrence Howard". Superhero Hype! இம் மூலத்தில் இருந்து மார்ச் 23, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160323214651/http://www.superherohype.com/features/96179-iron-man-the-set-visit-terrence-howard. 
  12. Adler, Shawn (September 30, 2008). "Iron Man Co-Writers Discuss Their Favorite Deleted Scenes, Plus An Exclusive DVD Bonus Clip". MTV Splash Page. http://splashpage.mtv.com/2008/09/30/iron-man-co-writers-discuss-their-favorite-deleted-scenes-plus-an-exclusive-dvd-bonus-clip/. 
  13. Douglas, Edward (May 1, 2008). "Gwyneth Paltrow Plays Pepper Potts". Superhero Hype! இம் மூலத்தில் இருந்து மே 4, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090504163453/http://www.superherohype.com/news/topnews.php?id=7150. 
  14. Dave Itzkoff (March 25, 2011). "Modern Marvel". The New York Times. https://www.nytimes.com/2011/03/27/movies/marvel-faces-a-mighty-foe-publishing-world-uncertainties.html. 
  15. "Samuel L. Jackson". Copyright Kamal Larsuel, 2005. Archived from the original on September 28, 2007. பார்க்கப்பட்ட நாள் August 20, 2006.
  16. Goldman, Eric (May 4, 2007). "Stan Lee's Further Superhero Adventures". IGN. Archived from the original on May 18, 2019. பார்க்கப்பட்ட நாள் May 14, 2007.
  17. Riesman, Abraham (July 18, 2019). "'In a Cave! With a Box of Scraps!': How an Iconic Marvel Cinematic Insult Came to Be". New York. Archived from the original on July 18, 2019. பார்க்கப்பட்ட நாள் February 20, 2020.
  18. "RAGE AGAINST THE MACHINE Guitarist Faces Iron Man". Roadrunner Records. May 6, 2008. Archived from the original on May 10, 2008. பார்க்கப்பட்ட நாள் May 8, 2008.
  19. Dellaverson, Carlo (May 2, 2008). "Cramer In Iron Man". CNBC. Archived from the original on June 12, 2011. பார்க்கப்பட்ட நாள் May 8, 2008.
  20. "Iron Man 3: Under the Armor with Kevin Feige Pt. 2". Marvel.com. April 3, 2013 இம் மூலத்தில் இருந்து May 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523041054/http://marvel.com/news/story/20345/iron_man_3_under_the_armor_with_kevin_feige_pt_2. 
  21. Bryson, Carey (March 14, 2013). "Kevin Feige: On Iron Man 3, Pepper Potts, and Marvel's Family Appeal". About.com. Archived from the original on March 17, 2013. பார்க்கப்பட்ட நாள் March 14, 2013.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன்_மேன்_(2008_திரைப்படம்)&oldid=3704541" இலிருந்து மீள்விக்கப்பட்டது