ஜான் பெவ்ரோ

ஜான் பெவ்ரோ (Jon Favreau, பிறப்பு: அக்டோபர் 19, 1966 ) ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு ரூடி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக வெளிக்காட்டினார். அதை தொடர்ந்து ஸ்விங்கர்ஸ் (1996), டேர்டெவில் (2003), பிரேக் அப் (2006), செஃப் (2014) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எல்ஃப் (2003)[1], அயன் மேன் 1 (2008), அயன் மேன் 2 (2010), தி ஜங்கிள் புக் (2016)[2][3][4] மற்றும் லயன் கிங் (2019) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஜான் பெவ்ரோ
Jon Favreau 2016.jpeg
பிறப்புஜொனாதன் பெவ்ரோ
அக்டோபர் 19, 1966 (1966-10-19) (அகவை 55)
நியூயார்க் நகரம்
அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
  • திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
ஜோயா டில்ம் (தி. 2000)
பிள்ளைகள்3

இவர் அயன் மேன் 1 (2008) என்ற திரைப்பட தொடரில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான கப்பி கோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவெஞ்சர்ஸ் திரைப்பட தொடர்களான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பெவ்ரோ&oldid=3323795" இருந்து மீள்விக்கப்பட்டது