இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்
ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் (ஆங்கில மொழி: Spider-Man: No Way Home) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான இசுபைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து கொலம்பியா பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் பாஸ்கல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் விநியோகம் செய்கிறது. இது இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஏழாவது திரைப்படமும் ஆகும்.
ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜோன் வாட்ஸ் |
தயாரிப்பு | |
மூலக்கதை | |
இசை | மைக்கேல் ஜெய்சினோ |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சீமஸ் மெக்கார்வி[4] |
கலையகம் |
|
விநியோகம் | சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்[5] |
வெளியீடு | திசம்பர் 17, 2021(ஐக்கிய அமெரிக்கா) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200 மில்லியன் |
மொத்த வருவாய் | $1.901 பில்லியன் |
இந்த திரைப்படத்தை ஜோன் வாட்ஸ்[6] என்பவர் இயக்க, கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் ஆகியோர் எழுத்தாளராக பணிபுரிந்துள்ளனர். கேவின் பிகே[7] மற்றும் அமி பாஸ்கல்தயாரிக்கும் இந்த படத்தில் டாம் ஹாலண்ட்,[8][9] ஜெண்டயா,[10] ஜேக்கப் படலோன், மரிசா டோமே,[11] ஜேமி பாக்சு,[12] பெனடிக்ட் கம்பர்பேட்ச் மற்றும் ஆல்ஃப்ரெட் மோலினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[13]
கதைதொகு
முன்னதாக வெளிவந்த ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் கதையில் இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து பீட்டர் பார்க்கர் ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனமான டெய்லி பேகல் என்ற நிறுவனத்தால் உண்மையான அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்படுகிறார்.
வழக்கறிஞர் மேட் மார்கட் என்பவரின் முயற்சியால் பீட்டர், அவருடைய நண்பர்கள் , அவருடைய குடும்பத்தினர்கள் சிறை தண்டனையால் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.
இருந்தாலும் உலகத்தில இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் ஸ்பைடர் மேன் கொலைகாரன் என்றும் அவரை தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் கருதி ஸ்பைடர் மேன் மற்றும் அவரை சார்ந்த நண்பர்களை வெறுக்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட பின்னணி இருந்ததால் ஸ்பைடர் மேன் நண்பர்கள் நெட் மற்றும் எம். ஜே. வுக்கும் மேற்படிப்பு படிக்க கல்லூரிகளில அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர மாய சக்திகளை பயன்படுத்தும் கதாநாயகர்களின் சிறந்தவராக இருக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்ன் உதவியை கேட்கும்போது பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர் மேன் என்ற அடையாளத்தை அனைவரையும் மறந்துபோக வைக்க முடியும் என்ற மாய சக்தியை பயன்படுத்த முயற்சிக்கவே அந்த மாய சக்தி தோல்வியடைந்து மாறுபட்ட பிரபஞ்சங்களில் இருந்து டாக்டர் ஆக்டோவியஸ், எலக்ட்ரோ, மணல் மனிதன், காப்ளின் , லெசார்ட் என்று அனைத்து சக்திவாய்ந்த வில்லன்களும் இந்த பூமிக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த அனைவரையும் கடுமையான போராட்டத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மேற்கொண்டு பாதிப்புகள் உருவாகாமல் தடுக்க அனைவரையும் சொந்த பிரபஞ்சத்துக்கு அனுப்பினாலும் விதிப்படி அடுத்தடுத்த சம்பவங்களில் இந்த வில்லன்கள் இறந்துபோக வாய்ப்பு இருப்பதால் பீட்டர் அனைவரையும் குணப்படுத்த முயற்சி செய்கிறார்.
ஸ்டார்க் தொழில்நுட்பத்தால் ஆக்டோவியஸை குணப்படுத்திய பீட்டர் பார்க்கரால் காப்ளின் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இதனால் பீட்டர் பார்க்கரின் ஒரே சொந்தமான அவருடைய அத்தை மே பார்க்கர் காப்ளினின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு காயம் அடைந்து இறந்துவிடுகிறார்.
தனக்கு ஒரே ஒரு சொந்தமாக இருந்த அத்தை மே அவர்களின் இழப்பை பீட்டர் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் உடைந்து தனிமையில் செல்கிறார்.
பீட்டர்க்கு உதவ முயற்சிக்கும் நண்பர் நெட் மற்றும் எம் ஜே ஒரு கட்டத்தில் பரிமாணங்களை கடந்த பரவெளி இணைப்பை உருவாக்கியதால் மாறுபட்ட பிரபஞ்சத்தின் பரிமாணத்தில் இருந்து வேறு வேறு பீட்டர் பார்கேர் கதாப்பாத்திரங்கள் நடப்பு பிரபஞ்சத்தில் கொண்டுவரப்படுகின்றனர்.
மனம் உடைந்த பீட்டர்க்கு ஆறுதல் சொல்லி அவரை தேற்றி கடைசியாக எப்படியாவது மற்ற வில்லன்களை குணப்படுத்தி விடலாம் என்று நம்பிக்கை கொடுக்கின்றனர்.
பீட்டர் பார்க்கர் 1 (டோம் ஹாலந்து ), பீட்டர் பார்க்கர் 2 (டோபி மகுரே) மற்றும் பீட்டர் பார்க்கர் 3 (ஆண்ட்ரூ கார்பீல்டு) என்று அடையாளப்படுத்தி பெயர்களை கொடுத்த பின்னால் மற்ற வில்லன்களை நகரத்தில் இருந்து தள்ளி இருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து கடைசியாக அவர்களோடு போராடுகின்றனர்.
இந்த ஸ்பைடர் மேன் குழுவினரால் வில்லன்களை சமாளிக்க முடியாத நிலையில் இந்த பீட்டர் பார்க்கர் குணப்படுத்தி இப்போது நல்ல மனது கொண்டவராக இருக்கும் டாக்டர்
ஆக்டவியஸ் உதவி செய்ததால் மூவரும் காப்பாற்றப்பட்டு முடிந்தவரை அனைவரையும் குணப்படுத்தி விடுகின்றனர். கடைசியாக டாக்டர் ஸ்ட்ரெஞ்ச் உதவியால் மாறுபட்ட பிரபஞ்சத்தில் இருக்கும் சக்திகள் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது புதிதாக வந்த அனைவரும் சொந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்பட்டு பீட்டர் பார்க்கர் தவிர அனைவருக்கும் அவரை மறந்து போகுமாறு மாய அமைப்பை செயல்படுத்தி பீட்டர் பார்க்கர் டாக்டர் ஸ்ட்ரஞ்ச் உதவியுடன் அனைவரையும் காப்பாற்றுகிறார்.
இப்போது தன்னை யாரென்றே தெரியாத நேசிக்கும் பெண்ணான எம் ஜே மற்றும் நண்பர் நெட் இடம் உண்மையை சொல்ல மனம் இல்லாமல் வீடு திரும்பும் பீட்டர் பார்க்கர் ஸ்பைடர் மேன் உடையில் மறுபடியும் குற்றங்களை தடுக்கிறார்.
புதிய பிரபஞ்சத்தில் இருந்து இங்கே வந்த வெனம் மற்றும் அவரால் பாதிக்கப்பட பத்திரிக்கையாளர் எட்டி பிராக் இந்த பிரபஞ்சத்தில் நடந்த சம்பவங்களை விசாரித்து தெளிவாக தேர்ந்துகொள்ளும் முன்னரே மறுபடியும் சொந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பபடுகிறார். டாக்டர் ஸ்ட்ரெஞ்ச் இப்போது மாறுபட்ட பரிமாணங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறார். கதை அடுத்த பாகங்களில் தொடர்கிறது.
தயாரிப்புதொகு
இந்த திரைப்படத்தின் தலைப்பு 2021 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.[14] இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 17 டிசம்பர் 2021 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடப் பட்டது.[15][16]. இந்த படத்தில் நடிகர்கள் ஆண்ட்ரு கார்ஃபில்ட் மற்றும் டொபி மேகுரே இந்த படத்தில் நடித்து இருப்பது படத்தின் வெளியீடுவரையில் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்த்க்கது.
மேற்கோள்கள்தொகு
- ↑ Fleming Jr, Mike (August 20, 2019). "Disney-Sony Standoff Ends Marvel Studios & Kevin Feige's Involvement In 'Spider-Man'". Deadline Hollywood. August 20, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 20, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Perrie, Stewart (October 14, 2020). "Has Tom Holland's 'Spider-Man 3' Started Filming?". LADbible. October 15, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 15, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Davis, Brandon (October 21, 2020). "Tom Holland Confirms He Starts Spider-Man 3 Right After Uncharted". Comicbook.com. October 21, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Fisher, Jacob (March 30, 2020). "Seamus McGarvey Joins 'Spider-Man 3' (Exclusive)". Discussing Film. April 1, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 30, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kit, Borys (August 20, 2019). "'Spider-Man' Studio Sony Goes Public with Marvel Movie Divorce: "We Are Disappointed" (Exclusive)". The Hollywood Reporter. August 21, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 21, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ D'Alessandro, Anthony (September 27, 2019). "Jon Watts in Final Talks To Return As Director Of Third 'Spider-Man: Homecoming' Movie". Deadline Hollywood. September 27, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 27, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Davis, Erik (July 7, 2019). "Marvel's Kevin Feige on the MCU Multiverse, 'Far From Home' Post-Credits Scenes and the Future of Spider-Man". Fandango Media. July 7, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 8, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Gonzalez, Umberto (June 13, 2017). "Tom Holland (Accidentally) Reveals Spider-Man Solo Movie Is First in a Trilogy". TheWrap. June 13, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 13, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Siegel, Tatiana; Kit, Borys (October 2, 2019). "Tom Holland's Last-Minute Appeal Helped Seal a 'Spider-Man' Deal". The Hollywood Reporter. October 3, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 2, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Robinson, Joanna (July 2, 2019). "Spider-Man: Far From Home: Zendaya, the Black Dahlia Murders, and the MJ We Deserve". Vanity Fair. July 2, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 11, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Labonte, Rachel (June 10, 2020). "MCU's Spider-Man 3: Marisa Tomei Teases What To Expect Of Aunt May". Screen Rant. June 12, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 12, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Kit, Borys (October 1, 2020). "'Spider-Man 3' Jolt: Jamie Foxx Returning as Electro (Exclusive)". The Hollywood Reporter. October 6, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 8, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Atad, Corey (October 27, 2020). "Tom Holland, Zendaya Arrive In Atlanta As 'Spider-Man 3' Production Set To Begin". ET Canada. October 29, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dornbush, Jonathon (February 24, 2021). "Spider-Man 3's Title Is Spider-Man: No Way Home". IGN. February 24, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 24, 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Russell, Bradley (December 11, 2020). "Marvel Phase 4: new MCU release dates, cast news, crossovers, and more". Total Film. GamesRadar+. December 15, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 15, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McClintock, Pamela; Couch, Aaron (April 24, 2020). "'Spider-Man' Sequel Delays Release to November 2021 Amid Sony Date Shuffle". The Hollywood Reporter. April 24, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 24, 2020 அன்று பார்க்கப்பட்டது.