அவி ஆராட்
அவி ஆராட் (ஆங்கில மொழி: Avi Arad) (பிறப்பு: ஏப்ரல் 18, 1948) என்பவர் அமெரிக்க-இசுரேல் நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[3] இவர் மார்வெல் காமிக்ஸ் வரைகதை புத்தகங்களை தழுவிய ஹல்க் (2003), பென்டாஸ்டிக் போர் (2005), எக்ஸ்-மென் 3 (2006), ஸ்பைடர்-மேன் 3 (2007), பென்டாஸ்டிக் போர் 2 (2007), தி அமேசிங் ஸ்பைடர்-மேன் (2012), ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017) போன்ற பல நேரடி மற்றும் இயங்குபடங்களை தயாரித்து வருகின்றார். 2019 ஆம் ஆண்டு சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவி ஆராட் | |
---|---|
![]() | |
தாய்மொழியில் பெயர் | אבי ארד |
பிறப்பு | ஏப்ரல் 18, 1948 ரமத் கன், இசுரேல்[1] |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மார்வெல் ஸ்டுடியோ (நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர்)[2] |
மேற்கோள்கள் தொகு
- ↑ Hoffman, Jordan (June 13, 2012). "Is Spider-Man Jewish?". https://www.timesofisrael.com/is-spider-man-jewish/. "Avi Arad, born in Ramat Gan in 1948, founded and led Marvel Studios and recently produced for that studio the megasmash “The Avengers.”"
- ↑ Bowles, Scott (May 6, 2003). "Marvel's chief: A force outside, 'a kid inside'" (in en). Los Angeles: Gannett Co. Inc.. http://usatoday30.usatoday.com/life/movies/news/2003-06-05-marvel_x.htm.
- ↑ "Marvel Announces New Independent Producer Deal with Avi Arad" பரணிடப்பட்டது ஆகத்து 24, 2006 at the வந்தவழி இயந்திரம், May 31, 2006 press release, via Ain't It Cool News