நிக் ப்யூரி
நிக் ப்யூரி (ஆங்கில மொழி: Nick Fury) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கினார்கள். ப்யூரியின் முதல் தோற்றம் மே 1963 இல் சார்ஜெட். ப்யூரி அண்ட் ஹிஸ் ஹௌலிங் #1 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு இரண்டாம் உலகப் போர் பற்றிய வரை கதைதொடர் ஆகும். இவரின் பாத்திரம் அமெரிக்க நாட்டு இராணுவ பிரிவின் தலைவராக சித்தரிக்கப்பட்டது.
நிக் ப்யூரி | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | சார்ஜெட். ப்யூரி அண்ட் ஹிஸ் ஹௌலிங் கமாண்டோஸ் #1 (மே 1963) |
உருவாக்கப்பட்டது | ஸ்டான் லீ ஜாக் கிர்பி |
கதை தகவல்கள் | |
முழுப் பெயர் | நிக்கோலஸ் ஜோசப் "நிக்" ப்யூரி |
திறன்கள் |
|
நவீனகால ப்யூரியின் தோற்றம் ஆரம்பத்தில் சிஐஏ முகவராக இருந்தார், சில மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 1963 இல் பென்டாஸ்டிக் போர் # 21 இல் அறிமுகமானார். ஆகஸ்ட் 1965 இல் ஸ்ட்ரேன்ஜ் டேல்ஸ் #135 இல் ஜேம்ஸ் பாண்ட் போன்ற ஒரு உளவாளி பாத்திரத்தில் தோன்றினார். அதை தொடர்ந்து ஷீல்ட் என்ற நிறுவனத்தின் முன்னணி தலைவராக சித்தரிக்கப்பட்டது.
நிக் ப்யூரி பல மார்வெல் தொடர்களிலும், பல இயங்குபடம் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட நிகழ்பட ஆட்டகங்ளிலும் தோற்றுவிக்கட்டது. 1998 ஆம் ஆண்டு முதன்முதலில் தொலைக்காட்சி திரைப்படமான நிக் ப்யூரி: ஏஜென்ட் ஷீல்ட் என்ற திரைப்படத்தில் நடிகர் டேவிட் ஹாஸல்ஹோஃப் மூலம் இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை மார்வெல் திரைப் பிரபஞ்சம் நடிகர் சாமுவேல் எல். ஜாக்சன் மூலம் முதலில் அயர்ன் மேனில் (2008) தோற்றுவிக்கப்பட்டது.[1][2] அதை தொடர்ந்து அயன் மேன் 2 (2010), தோர் (2011), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), கேப்டன் மார்வெல் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற பல திரைப்படங்களில் இவரே நடித்துள்ளார்.[3]
பல தசாப்தங்களாக இவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. இவரை முழு மார்வெல் அண்டத்தில் அடையாளம் காணக்கூடியவராக மாறிவிட்டார். இவரின் பாத்திரம் சில நேரங்களில் எதிர்மறை நாயகனாகவும் கருதப்படுகிறது.
திரைப்படங்கள்
தொகு- அயர்ன் மேன் (2008)
- அயன் மேன் 2 (2010)
- தோர் (2011)
- கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011)
- தி அவேஞ்சர்ஸ் (2012)
- கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014)
- அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)
- அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018)
- கேப்டன் மார்வெல் (2019)
- அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)
- இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)
மேற்கோள்கள்
தொகு- ↑ Wayland, Sara (April 19, 2010). "Samuel L. Jackson Talks Iron Man 2, Nick Fury, Captain America, Thor and The Avengers". Collider. Archived from the original on October 2, 2013. பார்க்கப்பட்ட நாள் April 23, 2010.
- ↑ Kit, Borys (February 25, 2009). "Jackson's Fury in flurry of Marvel films". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து February 28, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090228022957/http://www.hollywoodreporter.com/hr/content_display/film/news/e3i57845f198f95ed93c4667e6a026a4c6b. பார்த்த நாள்: January 25, 2010.
- ↑ Larsuel, Kamal. "August 2005 Interview". Samuel L. Jackson Official Website. Archived from the original on September 28, 2007. பார்க்கப்பட்ட நாள் May 14, 2008.