தி அவேஞ்சர்ஸ்
தி அவேஞ்சர்ஸ் (ஆங்கில மொழி: The Avengers) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இதே பெயரான மார்வெல் காமிக்ஸ் என்ற மீநாயகன்கள் அணியை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ஜோஸ் வேடன் என்பவர் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்ஸர் என்ற நிறுவனம் 4 மே 2012 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் விநியோகம் செய்தது. இது மாவல் திரைப் பிரபஞ்சத்தின் ஆறாவது திரைப்படமாகும். ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஜெரமி ரெனர் ஆகியோர் அவென்ஜர்ஸ் என்ற குழுவில் முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் டாம் ஹிடில்ஸ்டன், கிளார்க் கிரெக், கோபி ஸ்மல்டேர்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் துணைக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
தி அவேஞ்சர்ஸ் | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | ஜோஸ் வேடன்[1] |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | அவென்ஜர்ஸ் (ஸ்டான் லீ ஜாக் கிர்பி) |
திரைக்கதை | ஜோஸ் வேடன் |
இசை | ஆலன் சில்வெஸ்டரி |
நடிப்பு | ராபர்ட் டவுனி ஜூனியர் கிறிஸ் இவான்ஸ் மார்க் ருஃப்பால்லோ கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஜெர்மி ரேன்நேர் டாம் ஹிடில்ஸ்டன் கிளார்க் கிரெக் சாமுவேல் எல். ஜாக்சன் ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் கோபி ஸ்மல்டேர்ஸ் |
படத்தொகுப்பு | ஜெப்ரி போர்ட் லிசா லாசெக் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 4 மே 2012 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $220 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $1.519 பில்லியன்[3] |
இத் திரைப்படம் மார்வெல் வரைகதையில் வெளியான அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர் போன்ற மீநாயகன்கள் படங்களின் நாயகர்கள் அனைவரும் ஒன்றினைந்து 'ஷீல்ட்' எனப்படும் சர்வதேச அமைதி காக்கும் நிறுவனத்தின் தலைவரான நிக் ப்யூரியுடன் இணைந்து நம் உலகம் எதிர் கொள்ளவுள்ள மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இதன் கதை.
2017 ஆம் ஆண்டில் எம்பயர் பத்திரிகை வாக்கெடுப்பில் எல்லா காலத்திலும் 100 சிறந்த படங்களில் அவென்ஜர்ஸ் என்ற திரைபபடமும் ஒன்றாக இடம்பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019 ஆம் ஆண்டும் வெளியானது.
கதைச் சுருக்கம்
தொகுதோரின் சகோதரனா லோகி தோரை வீழ்த்தி பிரபஞ்சத்தின் தலைவனாக ஆசைப்பட்டு பல கொடுஞ் செயல்களை செய்கின்றான். பூமிக்கு வரும் லோகி 'ஷீல்ட்' குழுவின் பாதுகாப்பில் இருக்கும் பிரபஞ்சத்தை இணைத்து பாலத்தை உருவாக்க வல்ல சக்திகள் உள்ள விண்வெளி கல் அடங்கிய 'டெசராக்ட்டை' கவர்ந்து சென்று விடுகின்றான். இவனின் திண்டம் நிறைவேறினால் பூமிக்கு வேற்று கிரக படைகள் ஊடுருவக்கூடும் ஆபத்தை அறிந்த 'ஷீல்ட்' குழுவின் இயக்குனர் நிக் ப்யூரி பூமியிலுள்ள ஆறு மீநாயகன்கள் அடங்கிய குழுவான அவேஞ்சர்ஸை உருவாக்குகிறார்.
இந்த மீநாயகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து லோகி உருவாக்கிய இணைப்பின் மூலம் நியூயார்க் நகரத்திற்க்குள் வெளிவந்த மிக வலிமையுள்ள விண் கப்பல்கள் மற்றும் வாகனங்களையும் உடைய வேற்றுக் கிரக எதிரிகளை எதிர்த்து காப்பாற்றுகின்றனர். இறுதியில் லோகி கைது செய்யப்பட்டு ஆஸ்கார்டில் (தோரின் கிரகம்) சிறை வைக்கப்படுகிறார்.
நடிகர்கள்
தொகு- ராபர்ட் டவுனி ஜூனியர்[4] - டோனி ஸ்டார்க் & அயன் மேன்
- இரும்புக் கவசங்களை உடையவனும் கணினித் திரையினால் எதிர்களைத் திட்டமிட்டு தாக்கக் கூடிய துவக்குகளை உடையவனும் ஆனவன் அயன் மேன்.
- கிறிஸ் எவன்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் & கேப்டன் அமெரிக்கா[5]
- விசேசமான வல்லமையை ஊட்டக் கூடிய தசைகளைப் படைத்தவனும் சிறந்த போர்த் திட்டங்களைத் தீட்ட வல்லவனும் ஆனவன் கேப்டன் அமெரிக்கா. இவனின் ஆயுதம் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வட்டமான போர்க் கவசம் ஆகும்.
- மார்க் ருஃப்பால்லோ - வைத்தியர். ப்ரூஸ் பேனர் & ஹல்க்[6]
- எவராலும் எளிதில் அசைக்க முடியாத மிகப் பெரிய தசை வலிமையை உடையவனும் எதிரிகளைக் கொசுவைப் போல் அடித்து நாசம் செய்ய வல்லவனும் ஆனவன் ஹல்க்.
- கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்[7] - தோர்
- லோக்கியின் அண்ணனும் இடிகளின் வல்லமையை ஈர்த்து எதிர்களைத் தாக்க வல்ல சக்தி படைத்தவன்; இடி மின்னலை கடத்தும் தன்மை கொண்ட சுத்தியை உடையவனுமானவன் தோர். இந்த சுத்தியை வேறு எவராலும் தூக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்கார்லெட் ஜோஹான்சன்[8][9] - நடாஷா & பிளாக் விடோ
- மிகச் சிறந்த சண்டைப் பயிற்சியும் உளவுத் திறனும் பெற்ற பெண்; பிளாக் விடோ.
- ஜெர்மி ரேன்நேர்[10] - கிளின்ட் பர்டன்
- மிகச்சிறந்த வெடிக்கத்தக்க கூரையுடைய வில் அம்பு வீரன்' ஹோக்கை.
- டாம் ஹிடில்ஸ்டன்[11] - லோகி
- பனி அரக்கர்களின் வாரிசும், தோரின் சகோதரன். இவனின் சக்தி மாய மந்திரம் மற்றும் ஒரு கை கோல்.
- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி
- ஷீல்டு இயக்கத்தின் இயக்குநர், அவெஞ்சர்சின் ஒருங்கிணைப்பாளர்.
- கிளார்க் கிரெக் - பில் கொல்சன்
- ஷீல்டு உறுப்பினர் (ஏஜென்ட்டு)
- கோபி ஸ்மல்டேர்ஸ் - மரியா ஹில்
- ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் - எரிக் செல்விக்
தமிழில் குரல் கொடுத்தவர்கள்
தொகு- ராபர்ட் டவுனி ஜூனியர் - டோனி ஸ்டார்க் & அயன் மேன்
- ரவி
- கிறிஸ் எவன்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் & கேப்டன் அமெரிக்கா
- கார்த்திக்
- கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் - தோர்
- கதிரவன் பாலு
- ஸ்கார்லெட் ஜோஹான்சன் - நடாஷா & பிளாக் விடோ
- பிரியா ஆனந்த்
- மார்க் ருஃப்பால்லோ - வைத்தியர். ப்ரூஸ் பேனர் & ஹல்க்
- ஆதித்யா
சாதனை மற்றும் விருதுகள்
தொகுஇந்த திரைபபடத்தின் தயாரிப்பு, நடிப்பு, இயக்கம், திரைக்கதை, காட்சி விளைவுகள், அதிரடி காட்சிகள் மற்றும் இசை போன்றவற்றிக்கு பலரால் பாராட்டு பெறப்பட்டது. மேலும் காட்சி படுத்தப்பட்ட சாதனைகளுக்காக அகாதமி விருது மற்றும் 'பிரித்தானிய அகாடமி' போன்ற விருதுகளில் ஏராளமான விருதுகளையும் பரிந்துரைகளையும் பெற்றது.
வசூல்
தொகுஇந்த திரைப்படம் உலகளவில்1.5 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது. மற்றும் ஏராளமான வசூல் சாதனைகளை படைத்து எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தது. 2012 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் அத்துடன் பற்றுசீட்டு விற்பனையில் 1 பில்லியன் டாலர் சம்பாதித்த முதல் மார்வெல் தயாரிப்பு படமும் இதுவே ஆகும்.
இதன் தொடர் திரைப்படங்கள்
தொகுஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
தொகுஅவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்
தொகுஅவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lovece, Frank (May 8, 2012). "Whedon Talks Avengers". FilmFestivalTraveler.com. Archived from the original on May 8, 2012.
- ↑ Breznican, Anthony (September 30, 2011). "'The Avengers': Your first look at the dream team!". Entertainment Weekly. Archived from the original on January 17, 2017. பார்க்கப்பட்ட நாள் January 17, 2017.
At risk is not only the movie's estimated $220 million budget, but also one of the most promising tent pole franchises in Hollywood.
- ↑ "The Avengers (2012)". Box Office Mojo. Archived from the original on November 2, 2012. பார்க்கப்பட்ட நாள் May 19, 2012.
- ↑ Marvel.com via Superhero Hype(October 28, 2008). "Downey Jr., Favreau & Cheadle Suit Up for The Avengers". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
- ↑ Graser, Marc (March 22, 2010). "Chris Evans to play 'Captain America". Variety. Archived from the original on April 25, 2011. பார்க்கப்பட்ட நாள் April 14, 2010.
- ↑ Jensen, Jeff (July 29, 2010). "Avengers': New Hulk Mark Ruffalo on replacing Edward Norton, plus Oscar buzz for 'The Kids Are All Right". Entertainment Weekly இம் மூலத்தில் இருந்து August 2, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5yF72hS8x?url=http://popwatch.ew.com/2010/07/29/avengers-new-hulk-mark-ruffalo/.
- ↑ Brian Warmoth (July 26, 2010). "Comic-Con: Chris Hemsworth Shares Joss Whedon's Fascination With Avengers Drama". MTV News. Archived from the original on July 5, 2011. பார்க்கப்பட்ட நாள் July 26, 2010.
- ↑ Finke, Nikki (March 11, 2009). "Another 'Iron Man 2' Deal: Scarlett Johansson to Replace Emily Blunt as Black Widow for Lousy Lowball Money". Deadline Hollywood. Archived from the original on April 25, 2011. பார்க்கப்பட்ட நாள் April 14, 2010.
- ↑ Biskind, Peter (December 2011). "A Study in Scarlett". Vanity Fair. Archived from the original on November 21, 2011. பார்க்கப்பட்ட நாள் November 21, 2011.
- ↑ Kit, Borys; Kit, Zorianna (June 4, 2010). "Jeremy Jeremy Renner near deal to join Marvel's 'Avengers". Reuters இம் மூலத்தில் இருந்து ஜூலை 27, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/60UTnWqQ5?url=http://www.reuters.com/article/2010/06/04/us-renner-idUSTRE65310E20100604.
- ↑ THR staff (August 20, 2011). "Avengers' Tom Hiddleston Talks the Return of Loki (Video)". The Hollywood Reporter. Archived from the original on August 22, 2011. பார்க்கப்பட்ட நாள் August 22, 2011.
(from video) At the beginning of The Avengers, he comes to earth to subjugate it and his idea is to rule the human race as their king. And like all the delusional autocrats of human history, he thinks this is a great idea because if everyone is busy worshipping him, there will be no wars so he will create some kind of world peace by ruling them as a tyrant. But he is also kind of deluded in the fact that he thinks unlimited power will give him self-respect so I haven't let go of the fact that he is still motivated by this terrible jealousy and kind of spiritual desolation.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Avengers
- ஆல்மூவியில் The Avengers