ஆலன் சில்வெஸ்டரி
ஆலன் சில்வெஸ்டரி (மார்ச்சு 26, 1950) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இசையமைப்பாளர் ஆவார். இவர் பாக் டு த பியூச்சர் திரைப்படத்தொடரிலும் பாரஸ்ட் கம்ப், தி போலார் எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவெஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.[2]
ஆலன் சில்வெஸ்டரி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஆலன் அந்தோணி சில்வேஸ்ட்ரி |
பிறப்பு | மார்ச்சு 26, 1950 நியூயார்க் நகரம்,[1] ஐக்கிய அமெரிக்கா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | விபுணவி |
இசைத்துறையில் | 1972–இன்று வரை |
இணையதளம் | www |
இவர் இரண்டு முறை அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் மூன்று முறை சனி விருது மற்றும் இரண்டு முறை பிரைம் டைம் எம்மி விருதுகள் வென்றுள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Meredith May, "Alan Silvestri pairs music with wine", SFGate (June 7, 2013).
- ↑ "Alan Silvestri". Grammy.com (in ஆங்கிலம்). 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Clint Eastwood Honored by Berklee for Contributions to Jazz - Soundtrack.Net". Soundtrack.net.