கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (ஆங்கில மொழி: Captain America: The First Avenger) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மார்வெல் வரைகதை நிறுவனத்தின் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ்[3] என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாவது திரைப்படம் ஆகும்.
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜோ ஜான்ஸ்டன் |
தயாரிப்பு | கேவின் பிகே[1] |
மூலக்கதை | |
திரைக்கதை | கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி |
இசை | ஆலன் சில்வெஸ்டரி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஷெல்லி ஜான்சன் |
படத்தொகுப்பு | ஜெப்ரி போர்ட் ராபர்ட் டால்வா |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ்[2] |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 19, 2011(எல் கேப்டன் திரையரங்கம்) சூலை 22, 2011 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $140 மில்லியன் |
மொத்த வருவாய் | $370.6 மில்லியன் |
கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இத் திரைப்படத்தை ஜோ ஜான்ஸ்டன் என்பவர் இயக்க, திரைக்கதையை கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், கிறிஸ் எவன்ஸ், டாமி லீ ஜோன்ஸ், ஹ்யூகோ வீவிங், ஹேலி அட்வெல், ஸ்டான்லி துச்சி, செபாஸ்டியன் இஸ்டான், டெரெக் லூக்கா, நீல் மெக்டோனோ மற்றும் டோமினிக் கூப்பர் ஆகியோர் நடித்தள்ளனர். இது இரண்டாம் உலகப் போரின்போது ஸ்டீவ் ரோஜர்ஸ் ஒரு பலவீனமான மனிதர், சூப்பர் சிப்பாய் கேப்டன் அமெரிக்காவாக மாற்றப்படுகிறார், மேலும் டெஸராண்ட் மூலம் உலக ஆதிக்கத்தை தனக்கு கீழ் கொண்டுவர முயற்சிக்கும் ரெட் ஸ்குள் என்ற தீயவனிடமிருந்து எப்படி உலகை காப்பாற்றினார் என்பதுதான் கதை
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் 19 சூலை 2011 இல் எல் கேப்டன் திரையரங்கில் திரையிடப்பட்டது. மற்றும் 22 சூலை 2011 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. விமர்சகர்கள் குறிப்பாக கிறிஸ் எவன்ஸின் நடிப்பு படத்தின் 1940 களின் காலத்தை சித்தரித்தல் மற்றும் ஜான்ஸ்டனின் இயக்கம் ஆகியவற்றிக்கு பாராட்டு பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014) மற்றும் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
கதைக்களம் :தொகு
நிகழ்காலத்தில் ஆர்டிக் பனிக்கட்டி பகுதிகளில் இருந்து ஸ்டீவ் ரோஜர்ஸ் மீட்கப்படுகிறார். கடந்த காலத்தில் ஜோகன் என்ற ஜெர்மனிய அதிகாரி 1942 ல் டெசராகட் என்ற அதிசக்திவாய்ந்த பொருளை ஜெர்மனிய நார்வே பகுதியில் கைப்பற்றுகிறார். ஸ்டீவ் ரேஜர்ஸ் மெலிந்த சாதாரணமான மனிதராக இருந்தாலும் இராணுவத்தில் பணிபுரிய முயற்சி செய்கிறார். நிறைய முயற்சிகளை கடந்து ஆபிரகாம் என்ற மருத்துவர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஆபிரகாம் அவருடைய சோதனையின் மூலமாக சிறப்பான வலிமைவாய்ந்த மனிதரை உருவாக்கும் சோதனைக்கு ஸ்டீவ் ரோஜர்ஸை அவருடைய நல்ல மனதுக்காக தேர்ந்தெடுக்கிறார். இந்த சோதனை வெற்றியடைந்தாலும் ஹைட்ரா என்ற மோசமான அமைப்பின் சோதனையை தடுக்கும் முயற்சியில் அவருடைய வாழ்க்கையின் முடிவை சந்திக்கிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் வலிமைமிக்க மனிதராக மாறினாலும் அவருடைய லட்சியத்தின்படி இராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படாமல் கேப்டன் அமேரிக்கா என்ற கற்பனை கதாநாயக பாத்திரத்தை நடிக்கவே அனுமதிக்கப்படுகிறார்
இத்தாலியில் யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் அவருடைய நண்பர் பார்னெஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளை பாதுகாப்பு சிறைப்பகுதிகளில் இருந்து வெளியேற உதவுகிறார். அவருடைய பழைய அடையாள பெயருடனும் புதிய கவசத்துடனும் கேப்டன் அமேரிக்கா என்ற நிஜவாழ்க்கை கதாநாயகராக மாறுகிறார். ஜோகன் ரெட் ஸ்கல் என்ற பெயருடன் தலைவராக பணிபுரியும் மோசமான ஹைட்ரா அமைப்பின் பகுதிகளை இராணுவத்தின் உதவியுடன் தோற்கடிக்கிறார். கடைசியாக ஜோகனின் முயற்சியை தடுக்க விமானத்தில் பயணிக்கும்போது ஸ்டீவ் ரோஜர்ஸுடனான மோதலில் டெசராக்ட்-ன் சக்தி வெளிப்பாட்டால் ஜோகன் மறைந்து போகிறார். அந்த விமானத்தினால் உருவாகப்போகும் சேதத்தை தவிர்க்க ஆர்டிக் பகுதியில் மோதுகிறார்.
நெடுங்கால உறக்க நிலையை கடந்து நிகழ்காலத்தில் நினைவு திரும்பும் ஸ்டீவ் ரோஜர்ஸை சந்திக்கும் பாதுகாப்பு அமைப்பை சார்ந்த நிக் ப்யூரி கடந்த 70 ஆண்டுகளாக ஸ்டீவ் ரோஜர்ஸ் உறக்க நிலையில் இருந்ததை சொல்கிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் நிலைமையை புரிந்துகொள்கிறார்.
நடிகர்கள்தொகு
- கிறிஸ் இவான்ஸ்[4][5] - ஸ்டீவ் ரோஜர்ஸ்/கேப்டன் அமெரிக்கா
- டாமி லீ ஜோன்ஸ்[6] - செஸ்டர் பிலிப்ஸ்
- ஹ்யூகோ வீவிங்[7] - ஜோஹன் ஷ்மிட் / ரெட் ஸ்குள்
- ஹேலி அட்வெல்[8][9][10] - பெக்கி கார்ட்டர்
- செபாஸ்டியன் இஸ்டான்[11][12] - ஜேம்ஸ் புக்கனன் "பக்கி" பார்ன்ஸ்
- டோமினிக் கூப்பர்[13] - ஹோவர்ட் ஸ்டார்க்
- நீல் மெக்டோனோ[14] - திமோதி "டம் டம்" டுகன்
- டெரெக் லூக்கா[15] - கேப் ஜோன்ஸ்
- ஸ்டான்லி துச்சி[16][17] - ஆபிரகாம் எர்ஸ்கைன்
தொடர்ச்சியான தொடர்கள்தொகு
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்தொகு
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Yamato, Jen (April 30, 2012). "Marvel's Kevin Feige on Avengers, Iron Man 3, Thor 2, Universe-Building, and Elektra". MovieLine. May 3, 2012 அன்று பார்க்கப்பட்டது.
But as we were working on them we started to keep track of some things that the writers and filmmakers of one movie were doing anyway and we started to track them and realized that we could utilize those later down the line. That's how the Cosmic Cube came about; what started as a little seed would grow and grow and grow to The Avengers.
- ↑ Masters, Kim (May 5, 2016). "Marvel Studios' Origin Secrets Revealed by Mysterious Founder: History Was "Rewritten"". The Hollywood Reporter. June 4, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 9, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Billington, Alex (June 7, 2009). "Profile on Marvel Studios with Big Updates from Kevin Feige". FirstShowing.net. http://www.firstshowing.net/2009/06/07/profile-on-marvel-studios-with-big-updates-from-kevin-feige.
- ↑ Keyes, Rob (April 5, 2010). "Chris Evans Talks Captain America". ScreenRant.com. July 5, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 9, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Graser, Marc (March 22, 2010). "Chris Evans to play 'Captain America'". Variety. June 6, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 13, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Flaherty, Mike (February 11, 2011). "Tommy Lee Jones Tolerates Us for a Talk on HBO's Sunset Limited, Men in Black 3, and Captain America". New York. September 7, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 11, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Marvel Studios(May 4, 2010). "Hugo Weaving confirmed as Red Skull in Captain America". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2010-05-07 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bently, David (May 27, 2010). "Hayley Atwell talks Captain America, confirms Tommy Lee Jones in cast". Coventry Telegraph. July 23, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 9, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Green, Graeme (November 15, 2010). "Hayley Atwell on Any Human Heart and flirting with Captain America". Scotland Herald. November 19, 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 15, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Hayley Atwell's machine gun fun". The Belfast Telegraph. May 18, 2011. May 21, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 20, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bruno, Mike (April 2, 2010). "'Captain America': Sebastian Stan cast as Bucky Barnes". Entertainment Weekly. April 7, 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 27, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ditzian, Eric (January 12, 2011). "Sebastian Stan Talks 'Captain America' Casting And His Year Ahead". MTV News. August 30, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 12, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Fischer, Russ (May 24, 2010). "Dominic Cooper Says He's Howard Stark in Captain America". /Film. March 27, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 30, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Wigler, Josh (June 7, 2010). "Neal McDonough Confirms 'Captain America' Role (And Bowler Hat), Talks Howling Commandos". MTV News. July 27, 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 9, 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Morales, Wilson (June 9, 2011). "Derek Luke Talks HawthoRNe, Captain America". Blackfilm.com. June 18, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 23, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ McNary, Dave (June 7, 2010). "Stanley Tucci joins Captain America". Variety. July 21, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 23, 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Clark, Kyrstal (August 29, 2010). "Stanley Tucci Says Captain America Has a Very Good Script". ScreenCrave.com. August 10, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 29, 2010 அன்று பார்க்கப்பட்டது.