கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்

கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (ஆங்கில மொழி: Captain America: Civil War) (தமிழ்: கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் மே 6, 2016 ஆம் ஆண்டு 3டி மற்றும் ஐமேக்சில் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்
சின்னம்
இயக்கம்அந்தோணி உறூசோ
சோ உறூசோ
தயாரிப்புகேவின் பேகே
மூலக்கதை
கேப்டன் அமெரிக்கா
படைத்தவர்
திரைக்கதைகிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
இசைகென்றி சக்மென்
நடிப்புகிறிஸ் எவன்ஸ்
ராபர்ட் டவுனி ஜூனியர்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
செபாஸ்டியன் இஸ்டான்
அந்தோணி மேக்கி
டான் செடில்
ஜெரமி ரெனர்
சட்விக் போஸ்மேன்
பவுல் பெட்டனி
எலிசபெத் ஓல்சென்
பால் ருத்
டாம் ஹாலண்ட்
ஒளிப்பதிவுஇட்றென்ற் ஓபலாக்கு
படத்தொகுப்புஜெப்ரி போர்ட்
மத்தேயு சிமிட்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுமே 6, 2016 (2016-05-06)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்
மொத்த வருவாய்$1.153 பில்லியன்

இது 2011 இல் வெளியான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் மற்றும் 2014 இல் வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியும், மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதின்மூன்றாவது திரைப்படமுமாகும். அந்தனி உறூசோ[1] மற்றும் சோ உறூசோ[2] இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், செபாஸ்டியன் இஸ்டான், அந்தோணி மேக்கி, பால் ருத், ஜெரமி ரெனர், டான் செடில், எலிசபெத் ஓல்சென் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோர் நடித்தள்ளனர்.

கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016 இல் ஐக்கிய இராச்சியத்திலும், மே 6, 2016 இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. இது மூன்றாம் கட்டத்தின் முதலாவது திரைப்படம் ஆகும். இப் படம் விமர்சன மற்றும் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் $1.1 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. இது 2016 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும், எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த பன்னிரண்டாவது படமாகவும் அமைந்தது.

கதையமைப்பு தொகு

அவெஞ்சர்ஸ் ஏஜ் ஒஃப் உல்ட்றோன் திரைப்படத்தின் சம்பவங்களில் கேப்டன் அமெரிக்கா மற்றும் ஏனைய அவெஞ்சர்சின் உலகைக் காப்பாற்றும் முயற்சி பாரிய உடைமைச் சேதத்தை உருவாக்கியதன் காரணத்தால், அவர்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் "அதிசக்திசாலிகள் பதிவுச் சட்டத்தைக் " (Superhuman Registration Act) கொண்டுவருகிறது. இதன் விளைவாக ஒரு புது எதிரியை அவெஞ்சர்ஸ் குழு எதிர்கொள்ளும்போது, குழுவிடையே விரிசல் உண்டாகிறது. ஸ்டீவ் ரோஜர்ஸ்/கேப்டன் அமேரிக்காவின் நண்பரான பக்கி பார்னெஸ் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படுகிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் டோனி ஸ்டார்க்கின் குழுவினரிடம் பார்னெஸ் சுயநினைவின்றி கட்டுப்படுத்தப்பட்டு இந்த அசம்பாவிதமான விஷயங்களை செய்துள்ளார் என்று சொல்ல முயற்சித்தும் டோனி ஸ்டார்க்கால் நம்ப முடியவில்லை.

ஜீமோ என்ற சகோவிய நாட்டின் அதிகாரியே இந்த சதித்திட்ட செயல்களுக்கு காரணம் என்று கண்டறியும் முன்னதாக அவெஞ்சர்ஸ் குழு அயன் மேன் மற்றும் கேப்டன் அமேரிக்கா தலைமையில் பிரிந்து மோதிக்கொள்கின்றனர். ஸ்டீவ் மற்றும் பார்னஸ் அவர்களுடைய அணியில் இருப்பவர்களின் உதவியால் அயன் மேனின் அணியில் இருப்பவர்களை கடந்து தப்பி செல்கின்றனர். டோனி ஸ்டார்ட் அவருடைய கணினியான ஜார்விஸ் கொடுத்த தகவல்களால் கேப்டன் சரியான விஷயத்தை செய்கிறார் என்பதை அறிந்தைகொள்கிறார். ஆனால் ஜீமோ இப்போது டோனி ஸ்டார்க்கை அவருடைய பெற்றோர்களின் விபத்துக்கு காரணம் பார்னெஸ் என்று காணொளி ஆதாரங்களை காட்டுகிறார். இதனால் கோபமான ஸ்டார்க் பார்னெஸை தாக்க முயற்சிக்கும்போது ஸ்டீவ் ரோஜர்ஸ் தடுத்து சண்டையிடுகிறார். இந்த மோதலில் ஸ்டீவ் ரோஜர்ஸ் அயன் மேனின் கவசத்தை சேதப்படுத்தி செயல்பாட்டை தடுத்து பக்கி பார்னெஸை காப்பாற்றுகிறார். பாதுகாக்கப்பட்ட சிறைப்பகுதியில் இருந்து அவருடைய குழுவினரை விடுதலை செய்யும் ஸ்டீவ் ரோஜர்ஸ் டோனி ஸ்டார்க்கிடம் அமைதியான வாழ்க்கையை உருவாக்கவே பக்கி பார்னைஸை பற்றி சொல்லவில்லை என்றும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் ஸ்டீவ் ரோஜர்ஸை அழைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்ட கடிதத்தை அனுப்புகிறார்.. பார்னைஸ் ப்ளாக் பேந்தருடைய வகாண்டா நாட்டில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். ஜீமோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஸ்பைடர் மேன் அவருடைய அதின நவீனமான டோனி ஸ்டார்ககால் உருவாக்கப்பட்ட ஆடையை பரிசோதிக்கிறார். கதை முடிகிறது.

நடிகர்கள் தொகு

  • கிறிஸ் எவன்ஸ் - ஸ்டீவ் ராஜர்ஸ்/ கேப்டன் அமெரிக்கா:
    • போர்வீரர்களுக்குரிய உடற்றகைமைகளை உருவாக்கும் பரிசோதனை முயற்சியில் மேம்படுத்தப்பட்ட முன்னாள் இரண்டாம் உலகப்போர் வீரரும் பிற்காலத்தில் பனிப் படிவமாகக் கண்டெடுக்கப்பட்டு தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழும் இந்நாள் அவெஞ்சர்சு இயக்கத்தின் தலைமை அங்கத்தவரும் ஆவார். இவர் பற்றி ஜோ ரூஸ்ஸோ "அவருடைய நெறி முறைமைகளும் அவரது ஆற்றலில் பங்களிக்கிறது. அத்துடன் அவருடைய ஊக்கப்படுத்தும் பண்புகள் சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயப்பது ஒரு நல்ல விடயமாகும். தலைமைத்துவம் அவரது கூறாக இருப்பது ஏனைய கதாபாத்திரங்கள் (இத்திரைப்படத்தில்) தோன்றுவதற்கு இன்றியமையாத பங்களிக்கிறது. மேலும் அவருடைய உலகு, வின்ரர் சோல்ஜர், ஏஜன்ட் 13 மற்றும் பால்கன் போன்ற கதாபாத்திரங்களால் இன்னமும் விரிவடைகிறது." என்று தெரிவித்தார்.
  • ராபர்ட் டவுனி ஜூனியர்[3] - டோனி ஸ்டார்க்/ அயன்-மேன்:
    • தன்னை ஒரு மேதாவி என்று கருதுகின்ற, தன்னால் உருவாக்கப்பட்ட இயந்திரக் கவசத்தை அணிந்து குற்றங்களை களைபவரும், கோடீசுவரரும், கொடையாளியும் ஆவார். முந்தைய அயன்-மேன் திரைப்படங்களில் இருந்து தனது சித்தரிப்பை வெளிப்படுத்தி காட்டுவது எது என்பது பற்றி டவுனி கூறுகையில்: "நோக்கும் விதம் மாற்றிக்கொள்வது இயற்கையான ஒரு விடயமாகும். என்ன மாதிரியான நிகழ்வுகள் சம்பவிக்கலாம்? அல்லது எவ்வகையான கட்டமைப்பில் இக்கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம்? என்பனவே எனக்கு முக்கியமாகப் படுகிறது. இதுகுறித்த குறிப்புகள் ஏற்கனவே (அவேஞ்சர்சு: உல்ட்ரோன் யுகத்தில்) வெளியாகியுள்ளன."டவுனியிடமிருந்து சிறிய பங்கே மார்வல் எதிர்பார்த்த போதிலும் டவுனி திரைப்படத்தின் கதையில் கணிசமான பங்கு வகிக்க விரும்பினார். வெரைட்டி எனும் ஆங்கிலச் சஞ்சிகை "டவுனி 40 மில்லியன் டாலர்களையும் பங்குபற்றுவதற்குரிய தொகையையும், இத்திரைப்படமானது "கேப்டன் அமேரிக்கா வின்ரர் சோல்ஜரின்" வருவாயை மிஞ்சும் பட்சத்தில் மேலதிகமான தொகையும் பெறுவார்." என்று குறிப்பிடுகிறது. டவுனின் கதாபாத்திரம் படத்தின் வெற்றியும் பங்களிக்கும் என மார்வல் தீர்மானித்தது இதற்குக் காரணமாகவுள்ளது.
  • ஸ்கார்லெட் ஜோஹான்சன் - நடாஷா ரோமனப்/ பிளாக் விடோ:
    • அவெஞ்சர்சு அங்கத்தவரும், முன்னாள் ஷீல்டின் (S.H.I.E.L.D.) உறுப்பினரும் கடும் பயிற்சி பெற்ற உளவாளியும் ஆவார். தனது கதாபாத்திரம் குறித்து ஜொஹான்சன் கூறியதாவது: "விடோவின் கடந்தகாலம் எப்போதும் அவளைத் துரத்துகிறது. அவள் கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு முன்செல்லவும், தனது வாழ்கையின் துண்டுகளைப் பொறுக்கிக் கொள்ளவும் முயல்கிறாள். கேப் 3யில் (கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப் போரில்) அவள் குறித்த பகுதிகளைக் காண்போம் என்று நினைக்கிறேன்.அவள் சிறந்ததொரு குறிக்கோளைக் கொண்டுள்ளதுடன், அவை கடந்தகாலத்திலிருந்து மீண்டு வரும் வலுவைக் கொடுக்கின்றன என எண்ணுகிறேன்."
  • செபாஸ்டியன் இஸ்டான் - ஜேம்ஸ் புக்கானன் "பக்கி" பார்னஸ்/ வின்ரர் சோல்ஜர்:
    • ஸ்டீவ் ராஜர்சின் உற்ற நண்பனான இவர், இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்டார். பின்னர் ஹைட்ரா அமைப்பினால் மீளவுயிர்ப்பிக்கப்பட்டு நாச வேலைகளைச் செய்வதற்காக மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டார். இக் கதாபாத்திரத்தின் கதை "கேப்டன் அமெரிக்கா வின்ரர் சோல்ஜரின் நிகழ்வுகளில் பிறகு எவ்வாறு தொடர்கிறது என்பது பற்றி ஜோ ரூஸ்ஸோ கூறுகையில்,"ஒரு கொலை இயந்திரம் போல தொழிற்படுவதன் காரணத்தால், கேப்டன் அமெரிக்காவால் தோற்கடிக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்புவது மூலம் இவர் ஒரு சிறந்த வேலையைச் செய்திருந்தார். எனவே எட் ப்றூபேகரின் கேப்டன் அமெரிக்கா சித்திரக் கதைத் தொடரின் அறிமுகப் படலத்தின் பின்பு நடந்தவைகள் போல, அவர் பற்றிஎஞ்சியிருப்பது எல்லாம் அவருடைய ஆளுமை பற்றிய தேடல்கள் மட்டுமே. அவர் உயிர்ப்பிக்கப்படக்கூடியவரா? இதுவரையிலும் நாம் பார்த்த கொலைஞர்களினும் மோசமானவரா? அல்லது வருந்தித் துடிக்கும் ஒரு போர்க் கைதியா? அவருடைய நினைவுகள் மீளுமா? இல்லையெனில் நீங்கள் அவரை எவ்வாறு அடையாளம் கொள்வீர்கள்? என்று பல கேள்விகள் எழுகின்றன. எனவே அவரது கதாபாத்திரம் ஒரு கவர்ச்சிகரமானதும் செழிப்பானதுமான தேர்வாகும்."
  • அந்தோணி மேக்கி - சாம் வில்சன்/ பால்கன்:
    • வான்வெளித்தாக்குதல் மற்றும் வான்வெளி மீட்புக்குழு நடவடிக்கைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட இறகு-வடிவுடைய பொறியை இயக்குவதில் இராணுவத்தினரால் பயிற்சியளிக்கப்பட்ட இவர் அவேஞ்சர்சு குழுவின் மற்றுமொரு அங்கத்தவரும் கேப்டன் அமெரிக்காவின் நண்பரும் ஆவார். கேப்டன் அமெரிக்காவையும் பால்கனையும் பற்றி அந்தோனி மேக்கி கூறுவதாவது: "இவர்கள் இருவரையும் பற்றிய சிறந்த விடயமானது தங்களிடையே கொண்டுள்ள பரஸ்பர மதிப்பே. இங்கு போர்வீரர்களுக்கிடையிலான மதிப்புக் காணப்படுகிறது. இவர்களின் உறவு மேலும் வளர்வது காணக் கிடைப்பதே இப்படத்தின் சிறப்பாகும்."
  • பவுல் பெட்டனி - விஷன்:
    • டோனி ஸ்டார்க்கின் செயற்கை நுண்மதியான ஜார்விஸ் (J.A.R.V.I.S) மற்றும் மதிக் கல்லைப் (Mind Stone - an infinity gem) பயன்படுத்தி உருவாக்கப் பட்ட மனிதத்தோற்றத்தை ஒத்த இயந்திரமும் அவேஞ்சர்சு குழுவின் அங்கமும் ஆகும்.
  • ஜெரமி ரெனர் - கிளின்ட் பாற்றன்/ ஹோக்கை:
    • முன்னாள் ஷீல்டு (S.H.I.E.L.D.) உளவாளியும், தற்போதைய அவெஞ்சருமான இவர் ஒரு கைதேர்ந்த வில்லாளி ஆவார். மார்வல் சினிமற்றிக் யூனிவேசில் தனது பங்கைப் பற்றி ரெனர் கூறுகையில், "குழுவாகச் செயற்படுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தனியான திரைப்படங்களில் நடிப்பதற்கான பிடிவாதம் எனக்கில்லை. நான் (ஹோக்கை) கேப்டன் அமெரிக்கா மற்றும் பிறரின் படங்களில் தோன்றும் பயனுள்ள கதாபத்திரமாகவே என்னைக் கருதுகிறேன்."
  • டான் செடில் - ஜேம்ஸ் "ரோடி" ரோட்ஸ் / வார் மெஷீன்:
    • ஐக்கிய அமெரிக்க விமானப் படை உத்தியோகத்தரும் டோனி ஸ்டார்க்கின் நெருங்கிய நண்பரும், வார் மெஷீன் கவசத்தை இயக்குபவரும், மற்றுமொரு அவெஞ்சருமாவார்.
  • எலிசபெத் ஓல்சென் - வாண்டா மேக்சிமாப்/ ஸ்கார்லெட் விச்:
    • கிழக்கு ஐரோப்பிய நாடான சோகோவியாவைச் சேர்ந்த இவர், மந்திரங்களைக் கையாளும் மற்றும் தொலையியக்க சக்திகளைக் கொண்டவரும் அவெஞ்சர்சின் அங்கத்தவரும் ஆவார்.
  • பால் ருத் - ஸ்காட் லேங்/ ஆன்ட்-மேன்:
    • முன்பு சில்லறைத் திருட்டுக்களைச் செய்து வந்த இவர், ஹாங் பிம் எனும் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பில் உருவான ஆன்ட்-மேன் எனும் விசேட உடையை பெறுகிறார். இவ்வுடை தனது பாவனையாளரை தோற்றத்தில் சிறியதைத் தென்படச்செய்கின்றபோதிலும் பலத்தினை அதிகரிக்கும் ஆற்றல் படைத்தது.

மேலதிகமாக, எமிலி வான்கேம்ப், பிராங்க் க்ரில்லோ மற்றும் வில்லியம் ஹர்ட் ஆகியோர் முறையே தமது முந்தைய மார்வல் கதாபாத்திரங்களான ஷேரான் காற்றர்/ ஏஜென்ட் 13, ப்ராக் ரம்லோ/ க்ராஸ்போன்ஸ் மற்றும் தளபதி தேடியஸ் "தண்டர்போல்ட் ராஸ்" எனும் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஐந்து திரைப்படங்களுக்கான மார்வலுடனான ஒப்பந்தந்தின் அடிப்படையில் சட்விக் பாஸ்மேன், சால்லா/ பிளாக் பேன்தர் என்று அறியப்படும் வகாண்டா எனும் கற்பனை ஆபிரிக்க ஆட்சியாளனாக நடிக்கவுள்ளார். டேனியல் ப்ரூயில், தாம் காலந்து முறையே "ஹெல்மட் சீமோ" மற்றும் பீற்றர் பாக்கர்/ இசுபைடர்-மேன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மார்டின் ப்ரீமேன் இன்னமும் பெயர் வெளியிடப்படாத பாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மார்வலின் மூத்த எழுத்தாளரான ஸ்டான் லீ சிறு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

தயாரிப்பு தொகு

மாக் மில்லரின் (Mark Miller) "கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்" எனும் சித்திரக் கதையின் கதையமைப்பு எண்ணக்கருவை மையமாகக் கொண்டு, மாக்கசு மற்றும் மெக்பீலியின் திரைக்கதை எழுத்துப் பணிகளுடன் இத்திரைப்படத்தின் ஆக்கப் பணிகள் 2013இல் ஆரம்பமாயின. 2014இன் ஆரம்பத்தில் உறூசோ சகோதரர்களின் முந்தைய திரைப் படத்தினைத் (கேப்டன் அமெரிக்கா தி வின்ரர் சோல்ஜர்) திரையிடும் சோதனை முயற்சிகள் வெற்றியளிக்கவே, இத்திரைப்படத்துக்கான பணிகளிலும் இருவரும் அமர்த்தப்பட்டனர். 2014 அக்டோபரில் இதற்கு "கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்" என்ற தலைப்பு முடிவானதுடன், இராபட்டு டவுனி சூனியர் மற்றும் ஏனைய நடிகர்களும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல், 2014இல் அட்லான்ரா பெருநகரப்பகுதியிலும் மேலதிகமாக போர்டோ இறிகோ, பேளின் மற்றும் ஐசுலாந்திலும் படப்பிடிப்புகள் ஆரம்பமாயின.

இசை தொகு

கேப்டன் அமெரிக்கா: தி வின்ரர் சோல்ஜர் திரைப் படத்துக்கு இசையமைத்த ஹென்றி ஜாக்மன் இதற்கும் இசை அமைக்கவுள்ளார்.

வெளியீடு தொகு

கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016 இல் ஐக்கிய இராச்சியத்திலும், மே 6, 2016 இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. படத்தின் திரைவெளியீட்டினைத் தொடர்ந்து இரு வருடங்களின் பின் ஒளிபரப்புவதற்கான உரிமையை TNT நிறுவனம் செப்டெம்பர் 2014 இல் பெற்றுக்கொண்டது.

தொடர்ச்சியான தொடர்கள் தொகு

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு