பேப்பர் போட்சு

பேப்பர் போட்சு (ஆங்கில மொழி: Pepper Potts) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஸ்டான் லீ, ராபர்ட் பெர்ன்ஸ்டீன் மற்றும் டான் ஹெக் ஆகியோரால், செப்டம்பர் 1963 இல் வெளியான டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் #45 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[1]

பேப்பர் போட்சு 14
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுபேப்பர் போட்சு :
டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் #45 (செப்டம்பர் 1963)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ராபர்ட் பெர்ன்ஸ்டீன்
டான் ஹெக்
கதை தகவல்கள்
முழுப் பெயர்வர்ஜீனியா போட்சு
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
உதவி செய்யப்படும் பாத்திரம்அயன் மேன்

இவரின் பாத்திரம் அயர்ன் மேன் கதையில் துணைக் கதாபாத்திரமாகவும் சில சமயங்களில் டோனி ஸ்டார்க்கின் காதலியாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளார்.[2][3][4] பேப்பர் போட்சு என்ற கதாபாத்திரம் இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்பட ஆட்டம் உட்பட பிற ஊடகங்களில் தோன்றியுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை கிவ்வினெத் பேல்ட்ரோ என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன்-மேன் (2008), அயன் மேன் 2 (2010), மார்வெல்:தி அவென்ஜர்ஸ் (2012), அயன் மேன் 3 (2013), இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. DeFalco, Tom; Sanderson, Peter; Brevoort, Tom; Teitelbaum, Michael; Wallace, Daniel; Darling, Andrew; Forbeck, Matt; Cowsill, Alan; Bray, Adam (2019). The Marvel Encyclopedia. DK Publishing. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4654-7890-0.
  2. Fraction, Matt (w), Larocca, Salvador (a). "World's Most Wanted Part 3: No Future" The Invincible Iron Man v5, 11 (April 2009), Marvel Comics
  3. Fraction, Matt (w), Larocca, Salvador (a). "World's Most Wanted Part 7: The Shape of the World These Days" The Invincible Iron Man 14 (August 2009), Marvel Comics
  4. Fraction, Matt (w), Larocca, Salavdor (a). "The Future Part 6: Independence Day" The Invincible Iron Man 526 (Dec. 2012), Marvel Comics
  5. "Every Marvel Character In the 'What If...?' Trailer". ScreenCrush. July 8, 2021. Archived from the original on July 8, 2021. பார்க்கப்பட்ட நாள் September 18, 2021.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேப்பர்_போட்சு&oldid=3848863" இலிருந்து மீள்விக்கப்பட்டது