வாட் இப்...? (ஆங்கில மொழி: What If...?) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு இயங்குபட மீநாயகன் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை இதே பெயரான மார்வெல் காமிக்ஸ் தொடரை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக 'ஏ.சி. பிராட்லி' என்பவர் உருவாக்கியுள்ளார்.

வாட் இப்...?
வகை
உருவாக்கம்ஏ.சி. பிராட்லி
மூலம்அடிப்படையில்: (வாட் இப்...?)
மார்வெல் காமிக்ஸ்
இயக்கம்பிரையன் ஆண்ட்ரூஸ்
நடிப்புஜெப்ரி ரைட்
பிண்ணனி இசைலாரா கார்ப்மேன்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
அசைவூட்டம்ஸ்டீபன் ஃபிராங்க்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
ஸ்குயீஸ்
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
ஒளிபரப்பான காலம்ஆகத்து 11, 2021 (2021-08-11)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் சினிமா யுனிவர்ஸ் தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இந்த தொடர் மார்வெல் திரைப் பிரபஞ்ச படங்களின் முக்கிய தருணங்கள் வித்தியாசமாக நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை இது ஆராய்கிறது.[1] இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக மாறிய பின்னர் அவர்கள் தயாரிக்கும் முதல் இயங்குபடம் தொடராகும். 'ஏ.சி. பிராட்லி' என்பவர் இந்த தொடரின் தலைமை எழுத்தாளராக பணியாற்றுகிறார் மற்றும் 'பிரையன் ஆண்ட்ரூஸ்' என்பவர் இயக்குகிறார்.

இந்த தொடரை விவரிக்கும் நபராக ஜெப்ரி ரைட் என்பவர் நடிக்கிறார்.[2] செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் டிஸ்னி+ க்காக பல வரையறுக்கப்பட்ட ஓடிடி தளத் தொடர்களை உருவாக்கி வருகிறது. மேலும் வாட் இப்...? என்ற வரைகதை தொடரை இயக்கப்போவதாக முதன் முதலில் மார்ச் 2019 இல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் பற்றிய தகவல்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இந்தத் தொடரில் பல கதாபாத்திரங்களுக்கு படங்களில் சித்தரிக்கும் நடிகர்களால் குரல் கொடுக்கப்பட உள்ளன.

வாட் இப்...? இன் முதல் பருவம் 11 ஆகத்து 2021 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது, மேலும் இது 10 அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இரண்டாவது பருவம் 10 அத்தியாங்களுடன் எடுப்பதற்க்கான முயற்சியும் நடைபெறுகின்றது.

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்_இப்...%3F&oldid=3496224" இருந்து மீள்விக்கப்பட்டது