மார்வெல் திரைப் பிரபஞ்சம்: ஐந்தாம் கட்டம்
மார்வெல் திரைப் பிரபஞ்சம்: ஐந்தாம் கட்டம் என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரித்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படங்களின் வரிசையாகும். இந்த ஐந்தாம் கட்டதின் தயாரிப்புகள் அனைத்தும் 2022 முதல் 2024 வரை வெளியிடப்படுகிறது. இந்த ஐந்தாம் கட்டத்தின் திரைப்படங்கள் அனைத்தும் மார்வெல் இசுடியோசு தயாரிப்பு நிறுவனத்தால் 2023 இல் வெளியிடப்பட உள்ளன, வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் முக்கியமான படங்களை விநியோகம் செய்யப்படுகிறது, அதே நேரத்தில் டிஸ்னி+ இல் தொடர்கள் வெளியிடப்படுகிறது.
ஐந்தாம் கட்டம் | |
---|---|
தயாரிப்பு |
|
மூலக்கதை | மார்வெல் வரைகதை |
கலையகம் |
|
விநியோகம் | |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
இந்த கட்டத்தின் முதல் படம் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா, இது பிப்ரவரி 2023 இல் வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் முதல் தொடரான சீக்ரெட் இன்வேசன், இது ஜூன் 2023 இல் திரையிடப்பட்டது. 2023 அமெரிக்காவின் எழுத்தாளர் சங்கம் வேலைநிறுத்தம் காரணமாக ஐந்தாவது கட்டத்தின் வெளியீட்டு அட்டவணை பலமுறை மாற்றப்பட்டது. கேவின் பிகே ஒவ்வொரு படத்தையும் தயாரித்து, இந்த கட்டத்தில் ஒவ்வொரு தொடரின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார், இவருடன் இடீபன் ப்ரூஸார்ட் (ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா), ரையன் ரெனால்ட்சு மற்றும் ஷாவன் லெவி (டெட்பூல் & வால்வரின்), நெட் மூர் (கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு) ஆகியோரும் இணை தயாரிப்பாளராக பணியாற்றுயுள்ளனர்.
இந்த கட்டத்தின் படங்களில் பால் ருத் மற்றும் இவாஞ்சலீன் லில்லி நடித்த ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா,[1] கிறிஸ் பிராட் மற்றும் பலர் நடிப்பில் கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3, பிரி லார்சன், இமான் வேலனி மற்றும் தியோனா பாரிசு நடிப்பில் தி மார்வெல்ஸ்,[2] ரையன் ரெனால்ட்சு மற்றும் ஹியூ ஜேக்மன் நடிப்பில் டெட்பூல் & வால்வரின் போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்தோணி மேக்கி நடிப்பில் கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு மற்றும் தண்டர்போல்சு* போன்ற திரைப்படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தின் முதல் மூன்று படங்களும் உலகளாவிய வசூல் ரீதியாக $2.3 பில்லியன் வசூலித்துள்ளன.
அத்துடன் இந்த கட்டத்தின் டிஸ்னி+ தொலைக்காட்சித் தொடரில் சாமுவேல் எல். ஜாக்சன் நடித்த சீக்ரெட் இன்வேசன்,[3] டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோகியின் இரண்டாவது பருவம்,[4] இயங்குபடத் தொடரான வாட் இப்...? 2, அலக்வா காக்ஸ் நடித்த எக்கோ,[5] கேத்ரின் ஹான் நடித்த அகதா ஆல் அலாங்கு மற்றும் சார்லி சாக்ஸ் நடித்த டேர்டெவில்: பார்ன் அகைன் ஆகியவை அடங்கும்.[6] அத்துடன் வின் டீசல் நடித்த ஐ ஆம் குரூட் குறும்படங்களின் இரண்டாவது பருவமும் இந்த கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்டம், நான்காம் மற்றும் ஆறாம் கட்டத்துடன் சேர்ந்து, "தி மல்டிவர்ஸ் சாகா" ஆகும்.
வளர்ச்சி
தொகுஆரம்ப பணிகள் மற்றும் அறிவிப்பு
தொகுஏப்ரல் 2014 வாக்கில் மார்வெல் இசுடியோசு தலைவர் கேவின் பிகே என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் கூடுதல் கதைக்களங்கள் 2028 வரை திட்டமிடப்பட்டதாகக் கூறினார், இதன் விளைவாக பல படங்கள் "முன்பு வந்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை-வேண்டுமென்றே" கூறினார். ஜூலை 2019 சான் டியேகோ காமிக்கானில் மார்வெல் இசுடியோவின் குழுவின் போது, மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்திற்கான வளர்ச்சியில் பல படங்கள் மற்றும் டிஸ்னி+ தொலைக்காட்சித் தொடர்களை கேவின் பிகே அறிவித்தார், அத்துடன் பிளேடு[7] திரைப்படம் மற்றும் மரபுபிறழ்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகியவையும் உருவாக்கத்தில் இருந்தன. பின்னர், பிளேடுக்கு முன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அந்த நேரத்தில் முழு நான்காவது கட்டமாக இருந்தன என்பதை கேவின் பிகே உறுதிப்படுத்தினார்.
நவம்பர் 2020 வாக்கில், லோகி என்ற தொலைக்காட்சித் தொடரின் இரண்டாவது பருவ உருவாக்கம் தொடங்கியது, இது ஜூலை 2021 இல் முறையாக உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் எக்கோவை மையமாகக் கொண்ட தொடரின் உருவாக்கம் மார்ச் 2021 இல் ஹாக்கி தொடரின் வழித்தொடர் ஆனது. அடுத்த மாத இறுதியில், பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் (2021) என்ற தொடரின் தொடர்ச்சியாக நான்காவது கேப்டன் அமெரிக்கா திரைப்படம் உருவாக்கத்தில் இருப்பது தெரியவந்தது. ஜூன் மாதத்திற்குள், மார்வெல் இசுடியோசு குறைந்தது மூன்று இயங்குபட தொடர்களை உருவாக்க முடிவு செய்தது.
அக்டோபர் 2021 இல் வாண்டாவிஷன் தொடரில் இருந்து அகதா ஹார்க்னஸை[8] மையமாகக் கொண்ட வழித்தொடர் ஒன்றின் உருவாக்கம் தொடங்கியது. அடுத்த மாதம் டிஸ்னி+ டே நிகழ்வின் போது, மார்வெல் இசுடியோசு எக்கோ மற்றும் அகதா: ஹவுஸ் ஆஃப் ஹார்க்னஸ் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, அத்துடன் இசுபைடர் மேன் இயங்குபட தொடர் மற்றும் தி வாட் இஃப்...? தொடர்புடைய மார்வெல் ஜாம்பிஸ் என்ற இயங்குபட தொடரையும் அறிவித்தது. நவம்பர் 2021 நடுப்பகுதியில் மார்வெல் இசுடியோசு நிறுவனம் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்பவருடன் ஒரு அறியப்படாத திட்டத்தில் பணிபுரிந்தார், மேலும் மாத இறுதியில், மார்வெல் இசுடியோசு நிறுவனம் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து டாம் ஹாலண்ட் நடிக்க குறைந்தது மூன்று இசுபைடர் மேன் திரைப்படங்களை திட்டமிட்டது. அதை தொடர்ந்து அடுத்த மாதம், சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021) என்ற படத்தின் தொடர்ச்சி அறிவிக்கப்பட்டது. டேர்டெவில் தொடர் மே மாதம் டிஸ்னி+க்காக உருவாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.[9][10]
மார்ச் 2022 க்குள், மார்வெல் தொலைக்காட்சியின் நெற்ஃபிளிக்சு தொடரான டேர்டெவில் (2015–2018) இன் மறுதொடக்கத் திட்டம், தயாரிப்பில் இருப்பதாகத் தெரிய வந்தது, மேலும் மே மாதத்தில் டிஸ்னி+ க்காக உருவாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஜூன் 2022க்குள், மார்வெல் இசுடியோசு தண்டர்போல்ட்ஸ் திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஆனால் அது தடை பெற்றது. அந்த மாதத்தின் பிற்பகுதியில், மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் அடுத்த கதை பற்றிய தகவல்கள் அடுத்த மாதங்களில் வழங்கப்படும் என்று கேவின் பிகே கூறினார். ஜூலை 2022 இல் மார்வெல் இசுடியோசின் சான் டியாகோ காமிக்-கான் குழுவில், பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் நான்காம் கட்டத்தின் இறுதி படம் என்று கேவின் பிகே அறிவித்தார், அத்துடன் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா, கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3, தி மார்வெல்ஸ், சீக்ரெட் இன்வேசன், லோகி 2, எக்கோ, அயன்ஹார்டு, பிளேட், அகதா: டார்க்ஹோல்ட் டைரிஸ் ஆகிய படங்கள் மற்றும் தொடர்கள் ஐந்தாம் கட்டத்திற்கு உறுதி செய்யப்பட்டன. அத்துடன் நான்காம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் ஆகியவை "தி மல்டிவர்ஸ் சாகா"வின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அவர் கூறினார். அத்துடன் ஆறாம் கட்டத்தில் அவெஞ்சர்ஸ்: தி காங் டைனஸ்டி என்ற படம் 2026 இறுதிப்படமாகவும், டெட்பூல் & வால்வரின் என்ற படம் செப்டம்பர் 6, 2024 அன்று வெளியிடப்படும் என்று ரெனால்ட்ஸ் அறிவித்தார்.
உற்பத்தி மாற்றங்கள் மற்றும் அடுத்த பணிகள்
தொகுஅக்டோபர் 2022 இல், தயாரிப்பு தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பிளேட் படத்தின் அதன் வெளியீட்டுத் தேதியை செப்டம்பர் 2024க்கு மாற்றப்பட்டது, அதன் விளைவாக டெட்பூல் & வால்வரின் படத்தின் வெளியீடு நவம்பர் 8, 2024க்கு பின்னுக்குத் தள்ளப்பட்டது. டிசம்பரில், எக்கோ தொடரின் தலைமை எழுத்தாளர் மரியன் டேயர், அந்தத் தொடர் 2023 இன் பிற்பகுதியில், அதாவது அந்த டிசம்பரில் தாமதமாகும் என்றார். பிப்ரவரி 2023 இன் தொடக்கத்தில், டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் என்பவர் இந்த நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் செலவுகளைக் குறைக்கும் ஒரு வழியாக வெளியிடும் உள்ளடக்கத்தின் அளவை மறுமதிப்பீடு செய்யும் என்று அறிவித்தார்.
திரைப்படங்கள்
தொகுதிரைப்படம் | வெளியான திகதி | இயக்குநர் | திரைக்கதை | தயாரிப்பாளர் | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|---|
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா | பெப்ரவரி 17, 2023[11] | பெய்டன் ரீட்[12] | ஜெப் லவ்னெசு [13] | கேவின் பிகே இசுடீபன் புரூஸார்டு |
வெளியானது | ||
கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 | மே 5, 2023[14] | ஜேம்ஸ் கன்[15] | கேவின் பிகே | ||||
தி மார்வெல்ஸ் | நவம்பர் 10, 2023 | நியா டகோஸ்டா[16] | மேகன் மெக்டோனல்[17] | ||||
டெட்பூல் & வால்வரின் | சூலை 26, 2024 | சவுன் அடம் இலெவி[18] | ரெட் ரீஸ், பால் வெர்னிக்கு, ஜெப் வெல்சு, ரையன் ரெனால்ட்சு, சவுன் அடம் இலெவி[19] |
கேவின் பிகே, ரையன் ரெனால்ட்சு, சவுன் அடம் இலெவி, சைமன் கின்பெர்க்கு | |||
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு | பெப்ரவரி 14, 2025[20] | ஜூலியசு ஓனா[21] | மால்கம் இசுபெல்மேன், இடாலன் முசன், ஜூலிசுய ஓனா, மேத்யூ ஓர்டன்[22][23] | கேவின் பிகே, நெட் மூர், மால்கம் இசுபெல்மேன் | படப்பிடிப்பில் |
தொலைக்காட்சி தொடர்கள்
தொகுநான்காம் கட்டத்தில் உள்ள அனைத்து தொடர்களும் டிஸ்னி+ இல் வெளியிடப்படுகின்றன.
தொடர்கள் | பருவங்கள் | அத்தியாயம் | ஒளிபரப்பு | திரைக்கதை | இயக்குநர் | ||
---|---|---|---|---|---|---|---|
முதலில் ஒளிபரப்பப்பட்டது | கடைசியாக ஒளிபரப்பப்பட்டது | ||||||
சீக்ரெட் இன்வேசன் | 1 | 6 | சூன் 21, 2023 | சூலை 26, 2023 | கயில் பிராட்ஸ்ட்ரீட்டு | அலி செலிம் & தாமஸ் பெசுச்சா | |
லோகி 2 | 2 | 6 | அக்டோபர் 5, 2023 | நவம்பர் 9, 2023 | எரிக் மார்டின் | ஜஸ்டின் பென்சன் & ஆரோன் மூர்ஹெட் | |
வாட் இப்...? 2 | 2 | 9 | திசம்பர் 22, 2023 | திசம்பர் 30, 2023 | ஏ.சி. பிராட்லி | பிரையன் ஆண்ட்ரூஸ் | |
எக்கோ | 1 | 5 | சனவரி 9, 2024 | மரியன் டேயர் | சிட்னி பிரீலாண்ட் & கத்ரியோனா மெக்கென்சி | ||
அயன்ஹார்டு | 1 | 6 | 2024 | சினக்க கோட்ஜ் | சாம் பெய்லி & ஏஞ்சலா பார்ன்ஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Couch, Aaron (July 2, 2018). "'Ant-Man and the Wasp' Director on Wooing Michelle Pfeiffer and His Marvel Future". The Hollywood Reporter. Archived from the original on July 4, 2018. பார்க்கப்பட்ட நாள் July 6, 2018.
- ↑ Hood, Cooper (July 20, 2019). "Captain Marvel 2 Confirmed By Marvel Studios At SDCC 2019". Screen Rant. Archived from the original on July 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 21, 2019.
- ↑ "September 2021: London On Screen and Filming". Film London. September 1, 2021. Archived from the original on September 6, 2021. பார்க்கப்பட்ட நாள் September 6, 2021.
- ↑ Ramos, Dino-Ray (May 5, 2021). "'Loki' Premiere Date Moved Up By Two Days On Disney+". Deadline Hollywood. Archived from the original on May 5, 2021. பார்க்கப்பட்ட நாள் May 5, 2021.
- ↑ Moreau, Jordan (March 22, 2021). "'Hawkeye' Spinoff Series About Echo in Early Development for Disney Plus (Exclusive)". Variety. Archived from the original on March 22, 2021. பார்க்கப்பட்ட நாள் March 22, 2021.
- ↑ Andreeva, Nellie (February 11, 2022). "Disney Preps Plans For Netflix's 'Daredevil', 'Jessica Jones', 'Luke Cage' & Co. As It Is Set To Regain Control Of Marvel Series". Deadline Hollywood. Archived from the original on February 11, 2022. பார்க்கப்பட்ட நாள் February 11, 2022.
- ↑ D'Allesandro, Anthony; Ramos, Dino-Ray (July 20, 2019). "Marvel Shows Off 2020 & 2021 Slate With 'Black Widow', 'Eternals', 'Shang-Chi' & More: Exhibition Can Rest Easy – Comic-Con". Deadline Hollywood. Archived from the original on October 8, 2019. பார்க்கப்பட்ட நாள் July 22, 2019.
- ↑ Otterson, Joe (October 7, 2021). "'WandaVision' Spinoff Starring Kathryn Hahn in the Works at Disney Plus (Exclusive)". Variety. Archived from the original on October 7, 2021. பார்க்கப்பட்ட நாள் October 7, 2021.
- ↑ Sharf, Zack (March 1, 2022). "'Daredevil' and Other Marvel Shows to Stream on Disney Plus in March After Netflix Exit". Variety. Archived from the original on March 1, 2022. பார்க்கப்பட்ட நாள் March 1, 2022.
- ↑ "Production Weekly – Issue 1290 – Thursday, March 17, 2022 / 199 Listings – 45 Pages". Production Weekly. March 16, 2022. Archived from the original on March 17, 2022. பார்க்கப்பட்ட நாள் March 17, 2022.
- ↑ Rubin, Rebecca (October 18, 2021). "Disney Delays 'Doctor Strange 2,' 'Thor 4,' 'Black Panther' Sequel and 'Indiana Jones 5'". Variety. Archived from the original on October 18, 2021. பார்க்கப்பட்ட நாள் October 18, 2021.
- ↑ Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 1, 2019. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
- ↑ Kit, Borys (April 3, 2020). "'Ant-Man 3' Finds its Writer With 'Rick and Morty' Scribe (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on April 4, 2020. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
- ↑ Couch, Aaron (May 3, 2021). "Marvel Unveils 'Black Panther II' Title, First 'Eternals' Footage and More". The Hollywood Reporter. Archived from the original on May 3, 2021. பார்க்கப்பட்ட நாள் May 3, 2021.
- ↑ Fleming, Mike Jr. (March 15, 2019). "Disney Reinstates Director James Gunn For 'Guardians Of The Galaxy 3'". Deadline Hollywood. Archived from the original on March 15, 2019. பார்க்கப்பட்ட நாள் March 15, 2019.
- ↑ Kroll, Justin (August 5, 2020). "'Captain Marvel 2': 'Candyman's Nia DaCosta To Direct Sequel". Deadline Hollywood. Archived from the original on August 6, 2020. பார்க்கப்பட்ட நாள் August 5, 2020.
- ↑ Kit, Borys (January 22, 2020). "'Captain Marvel 2' in the Works With 'WandaVision' Writer". The Hollywood Reporter. Archived from the original on January 23, 2020. பார்க்கப்பட்ட நாள் January 22, 2020.
- ↑ Shanfeld, Ethan (March 11, 2022). "Shawn Levy to Direct 'Deadpool 3' Starring Ryan Reynolds". Variety. Archived from the original on March 12, 2022. பார்க்கப்பட்ட நாள் March 12, 2022.
- ↑ Grobar, Matt (May 1, 2023). "'Deadpool 3': Rob Delaney To Return As Human X-Force Member Peter". Deadline Hollywood. Archived from the original on May 1, 2023. பார்க்கப்பட்ட நாள் May 1, 2023.
- ↑ D'Alessandro, Anthony (November 9, 2023). "Marvel's 'Deadpool 3' Moves To July 2024 & 'Captain America: Brave New World' To 2025 As Disney Shakes Up Schedule Due To Actors Strike". Deadline Hollywood. Archived from the original on November 10, 2023. பார்க்கப்பட்ட நாள் November 9, 2023.
- ↑ Kit, Borys (July 26, 2022). "'Avengers: The Kang Dynasty' to Be Directed by 'Shang-Chi' Filmmaker Destin Daniel Cretton (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 26, 2022. பார்க்கப்பட்ட நாள் July 26, 2022.
- ↑ Sharf, Zack (June 6, 2023). "'Captain America 4' Retitled 'Brave New World,' Drops First Look at Anthony Mackie and Harrison Ford on Set". Variety. Archived from the original on June 6, 2023. பார்க்கப்பட்ட நாள் June 6, 2023.
- ↑ D'Alessandro, Anthony (December 13, 2023). "'Captain America: Brave New World' Hires Scribe Matthew Orton; Additional Shooting Planned For Mid 2024". Deadline Hollywood. Archived from the original on December 13, 2023. பார்க்கப்பட்ட நாள் December 13, 2023.