இவாஞ்சலீன் லில்லி
நிக்கோல் இவாஞ்சலீன் லில்லி (ஆங்கிலம்: Nicole Evangeline Lilly) (பிறப்பு: ஆகத்து 3, 1979)[1][2] என்பவர் கனடிய நாட்டு நடிகை ஆவார். இவர் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லாஸ்ட் (2004-2010) என்ற தொடரில் 'கட் ஆஸ்டின்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார். இந்த தொடரில் நடித்ததற்காக நாடகத் தொடரில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரையும் மற்றும் இசுக்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் என்ற விருதையும் வென்றுள்ளார்.[3]
இவாஞ்சலீன் லில்லி | |
---|---|
![]() | |
பிறப்பு | நிக்கோல் இவாஞ்சலீன் லில்லி ஆகத்து 3, 1979 கோட்டை சஸ்காச்சுவான், ஆல்பர்ட்டா, கனடா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகம் |
பணி | நடிகை, பேச்சாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
துணைவர் | டோமினிக் மோனாகான் (2004–09) நார்மன் காளி (2010–இன்று வரை) |
வாழ்க்கைத் துணை | முர்ரே ஹோன் (2003-2004) |
பிள்ளைகள் | 1 |
2008 ஆம் ஆண்டில் அகாதமி விருது பெற்ற போர்த் திரைப்படமான த ஹர்ட் லாக்கர் (2008)[4] என்ற படத்தில் கோனி ஜேம்ஸாக நடித்தார். அதைத் தொடர்ந்து அறிவியல் புனைகதை திரைப்படமான ரியல் ஸ்டீல் (2011) என்ற படத்திலும் நடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் த ஹாபிட் 2 மற்றும் த ஹாபிட் 3 ஆகிய திரைப்படத் தொடரில் 'டாரியல்' என்ற கதாப்பாத்திரத்திலும்[5][6] மற்றும் 2015 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஆன்ட்-மேன்,[7][8] ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா (2023) ஆகிய படங்களில் கோப் வான் டைன் / வாஸ்ப் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ MacDonald, Gayle (11 September 2005). "The blooming of Evangeline Lilly". The Globe and Mail. Archived from the original on 1 மே 2013. Retrieved 23 April 2012.
- ↑ "Monitor". Entertainment Weekly (1271): 22. 9 August 2013. https://archive.org/details/sim_entertainment-weekly_2013-08-09_1271/page/22.
- ↑ Matthew Tobey (2013). "Evangeline Lilly Profile". Movies & TV Dept. The New York Times. Archived from the original on 29 October 2013. Retrieved 7 February 2017.
- ↑ "Jeremy Renner and Evangeline Lilly in The Hurt Locker". FanPop.com.
- ↑ Itzkoff, Dave (20 June 2011). "'Hobbit' Cast Adds Evangeline Lilly, Dame Edna and Sherlock Holmes". The New York Times. Archived from the original on 3 December 2014. Retrieved 26 September 2015.
- ↑ Sieczkowski, Cavan (28 November 2012). "Evangeline Lilly Debuts Dramatic Hair Makeover At 'Hobbit' Premiere (PHOTOS, POLL)". The Huffington Post. Archived from the original on 28 September 2015. Retrieved 26 September 2015.
- ↑ Kit, Borys (23 January 2014). "Evangeline Lilly in Talks to Join 'Ant-Man'". The Hollywood Reporter. Archived from the original on 1 March 2014. Retrieved 23 January 2014.
- ↑ Sneider, Jeff (24 March 2014). "'House of Cards' Alum Corey Stoll in Talks to Join Marvel's 'Ant-Man' (Exclusive)". thewrap.com. Archived from the original on 25 March 2014. Retrieved 24 March 2014.