ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா (ஆங்கில மொழி: Ant-Man and the Wasp: Quantumaniar) என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரங்களான ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் / வாஸ்ப் ஆகியவற்றை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2015 ஆம் ஆண்டு வெளியான ஆன்ட்-மேன் மற்றும் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பத்திரண்டாவது திரைப்படமும் ஆகும்.
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா | |
---|---|
![]() | |
இயக்கம் | பெய்டன் ரீட் |
தயாரிப்பு | கேவின் பிகே |
கதை | ஜெஃப் லவ்னஸ் |
நடிப்பு |
|
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 17, 2023 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
இந்த திரைப்படத்தை பெய்டன் ரீட் என்பவர் இயக்க,[1][2][3] ஜெஃப் லவ்னஸ் என்பவர் கதை எழுதியுள்ளார்.[4] கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் பால் ருத்,[5][6] இவாஞ்சலீன் லில்லி,[7] மைக்கேல் பெனா, மிச்செல் பைபர்,[8][9] மைக்கேல் டக்ளஸ்,[10] கேத்ரின் நியூட்டன்[11] மற்றும் ஜொனாதன் மேஜர்ஸ்[12] ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஆன்ட்-மேன் திரைப்படத்தின் மூன்றாவது படத்திட்டங்கள் நவம்பர் 2019 இல் உறுதி செய்யப்பட்டன, இப்படத்தில் பெய்டன் ரீட் மற்றும் பால் ருத் ஆகியோர் மீண்டும் பணிபுரிகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று நோயின் போது ஏப்ரல் 2020 க்குள் ஜெஃப் லவ்னஸ் பணியமர்த்தப்பட்டார். அதை தொடர்ந்து இப்படத்தின் தலைப்பு மற்றும் புதிய நடிகர்கள் பற்றிய அறிவுப்பு டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பட பிடிப்பு பிப்ரவரி 2021 இல் துருக்கியில் நடைபெற்றது,[13] அதே நேரத்தில் கூடுதல் படப்பிடிப்பு சான் பிரான்சிஸ்கோவில் ஜூன் நடுப்பகுதியில் நடந்தது, ஜூலை மாத இறுதியில் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பைன்வுட் படப்பிடிப்பு வளாகத்தில் முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது.
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 17 பெப்ரவரி 2023 இல் அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள் தொகு
- ↑ Kroll, Justin (November 1, 2019). "'Ant-Man 3' Moving Forward With Director Peyton Reed" இம் மூலத்தில் இருந்து November 1, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191101235200/https://variety.com/2019/film/news/ant-man-3-moving-forward-peyton-reed-1203390610/.
- ↑ Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)" இம் மூலத்தில் இருந்து November 1, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191101204518/https://www.hollywoodreporter.com/heat-vision/ant-man-3-peyton-reed-returning-direct-1251732.
- ↑ Davis, Brandon (July 3, 2018). "'Ant-Man and the Wasp' Director Teases 'Ant-Man 3' Plans" இம் மூலத்தில் இருந்து July 3, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180703234727/https://comicbook.com/marvel/2018/07/03/ant-man-wasp-3-movie-trilogy-plans-peyton-reed/.
- ↑ Couch, Aaron (July 2, 2018). "'Ant-Man and the Wasp' Director on Wooing Michelle Pfeiffer and His Marvel Future" இம் மூலத்தில் இருந்து July 4, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180704005611/https://www.hollywoodreporter.com/heat-vision/ant-man-wasp-michelle-pfeiffer-had-be-convinced-join-1124434.
- ↑ Fullerton, Huw (October 13, 2019). "Paul Rudd says there have been "conversations" about Ant-Man's return: "There are some things we do know"" இம் மூலத்தில் இருந்து October 13, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191013171813/https://www.radiotimes.com/news/film/2019-10-13/ant-man-3-marvel-paul-rudd/.
- ↑ Itzkoff, Dave (October 8, 2019). "Paul Rudd, the One-Man Double Act" இம் மூலத்தில் இருந்து October 8, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191008091028/https://www.nytimes.com/2019/10/08/arts/television/paul-rudd-living-with-yourself-netflix.html.
- ↑ Greene, Jamie (February 7, 2019). "Why Evangeline Lilly Loved 'The Hobbit' and Wanted to Be in 'Star Wars'" இம் மூலத்தில் இருந்து June 16, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190616080809/https://www.syfy.com/syfywire/why-evangeline-lilly-loved-the-hobbit-and-wanted-to-be-in-star-wars.
- ↑ Marnell, Blair (December 8, 2020). "Michelle Pfeiffer Says She's Back For Ant-Man 3 In Spring 2021" இம் மூலத்தில் இருந்து December 8, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201208221240/https://www.superherohype.com/movies/490296-michelle-pfeiffer-says-shes-back-for-ant-man-3-in-spring-2021.
- ↑ Dumaraog, Ana (October 3, 2019). "Michelle Pfeiffer Wants To Make 'Ant-Man 3'" இம் மூலத்தில் இருந்து October 4, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191004130610/https://screenrant.com/ant-man-3-michelle-pfeiffer-updates/.
- ↑ Drysdale, Jennifer (February 7, 2019). "Michael Douglas Says 'There's Been Talk' About 'Ant-Man 3'" இம் மூலத்தில் இருந்து February 8, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190208104621/https://www.etonline.com/michael-douglas-says-theres-been-talk-about-ant-man-3-119159.
- ↑ Gemmill, Allie (December 10, 2020). "'Ant-Man 3' Title and Kathryn Newton Casting for MCU Threequel Revealed" இம் மூலத்தில் இருந்து December 11, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201211040744/https://collider.com/ant-man-3-title-ant-man-and-the-wasp-quantumania-kathryn-newton-cast/.
- ↑ Kroll, Justin (September 14, 2020). "Jonathan Majors Joins Marvel Cinematic Universe, Lands Major Role In Next 'Ant-Man' Movie" இம் மூலத்தில் இருந்து September 14, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200914165930/https://deadline.com/2020/09/jonathan-majors-ant-man-3-marvel-universe-1203028234/.
- ↑ Ahmet, Yildirim (February 5, 2021). "Ant-Man Türkiye'de çekiliyor!" இம் மூலத்தில் இருந்து February 5, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210205174604/https://www.teknolojioku.com/guncel/ant-man-turkiyede-cekiliyor-601d1ead03b1fe0bfc7979de.