ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்

ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (ஆங்கில மொழி: Ant-Man and the Wasp) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் பாத்திரங்களான ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் / வாஸ்ப் ஆகியவற்றை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு மார்வல் ஸ்டுடியோவால் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்
இயக்கம்பெய்டன் ரீட்
தயாரிப்பு
கதை
இசைகிறிஸ்டோப் பெக்
நடிப்பு
ஒளிப்பதிவுடான்டே இஸ்பினோட்டி
படத்தொகுப்பு
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 25, 2018 (2018-06-25)(எல் கேப்டன் தியேட்டர்)
சூலை 6, 2018 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130–195 மில்லியன்[1]
மொத்த வருவாய்$622.7 மில்லியன்[2]

மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த இப்படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் விநியோகித்தது. இது 2015 இல் வெளிவந்த ஆன்ட்-மேன் படத்தின் தொடர்ச்சியும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபதாவது திரைப்படமும் ஆகும். இந்தப் படம் பெய்டன் ரீட் இயக்கத்தில் பால் ருத், இவாஞ்சலீன் லில்லி, மைக்கேல் பெனா, வால்டன் கோகின்ஸ், பாபி கன்னவாலே, ஜூடி கிரேர், டி.ஐ., டேவிட் தஸ்ட்மால்ச்சியன், கன்னா ஜான்-காமன், ஆபீ ரைடர் போர்ட்சன், ராண்டால் பார்க், மிச்செல் பைபர், லாரன்ஸ் பிஷ்பர்ன், மைக்கேல் டக்ளஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற திரைப்படம் ஜூன் 25, 2018 இல் ஹாலிவுட்டில் உலக அளவில் வெளியிடப்பட்டது. ஜூலை 6, 2018 இல் அமெரிக்காவில் ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாணத்தில் இல் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் அதன் நகைச்சுவை மற்றும் நடிப்பிற்காக புகழ் பெற்றது, குறிப்பாக பால் ருத் மற்றும் இவாஞ்சலீன் லில்லி ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது. இந்த திரைப்படம் உலகளாவிய ரீதியாக 622 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது.

நடிகர்கள்

தொகு

திரைப்படத்தின் வசூல்

தொகு

ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் திரைப்படம்  அமெரிக்கா மற்றும் கனடாவில் $216.6 மில்லியன் டாலர்கள் மற்றும் மற்ற பிராந்தியங்களில் $406 மில்லியன் டாலர்கள் என உலகளவில் மொத்தம் $ 622.7 மில்லியன் வசூலித்தது. [3] 2018 ஆம் ஆண்டின் பதினோராவது மிக அதிக வசூலை ஈட்டிய படமாக இது ஆனது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ant-Man and the Wasp (2018)". The Numbers. பார்க்கப்பட்ட நாள் December 29, 2020.
  2. "Ant-Man and the Wasp (2018)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் December 10, 2018.
  3. D'Alessandro, Anthony (July 8, 2018). "'Ant-Man And The Wasp' Shrinks A Tick To $76M Opening, But Still 33% Bigger Than Original – Sunday Final". Deadline Hollywood. from the original on July 9, 2018. Retrieved July 9, 2018.
  4. Bonomolo, Cameron (September 9, 2018). "Marvel Cinematic Universe Movies Pass $4 Billion at Box Office in 2018". Comicbook.com. from the original on September 10, 2018. Retrieved September 10, 2018.

வெளி இணைப்புகள்

தொகு