த ஹாபிட் 2
த காபிட்டு: த டெசோலேசன் ஆப் சிமாக் (ஆங்கிலம்: The Hobbit: The Desolation of Smaug) என்பது 2013 ஆம் ஆண்டு பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில், பிரான் வால்சு, பிலிப்பா போயன்சு, பீட்டர் ஜாக்சன் மற்றும் கில்லெர்மோ டெல் டோரோ ஆகியோரின் திரைக்கதையில் வெளியான அமெரிக்க நாட்டு காவிய உயர் கனவுருப்புனைவு சாகசத் திரைப்படம் ஆகும். இது 1937 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஆர். டோல்கீன் எழுதிய த காபிட்டு நாவலை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் 2012 ஆம் ஆண்டு வெளியான த காபிட்டு: அன் அன்எக்சுபெக்டட் ஜெர்ன்னி படத்தின் தொடர்ச்சியாகவும், த காபிட்டு படத்தொடரின் இரண்டாவது படம் ஆகும், ஜாக்சனின் இயக்கத்தில் வெளியான த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடர்களின் முத்தொகுப்புக்கு முன்னோடியாக செயல்படுகிறது.
த காபிட்டு: த டெசோலேசன் ஆப் சிமாக் | |
---|---|
இயக்கம் | பீட்டர் ஜாக்சன் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | த காபிட்டு படைத்தவர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் |
திரைக்கதை | |
இசை | ஹோவார்ட் ஷோர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆண்ட்ரூ லேச்னி |
படத்தொகுப்பு | ஜபேசு ஓல்சென் |
கலையகம் | |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | 2 டிசம்பர் 2013(லாஸ் ஏஞ்சலஸ்) 12 திசம்பர் 2013 (நியூசிலாந்து) 13 திசம்பர் 2013 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
ஓட்டம் | 161 நிமிடங்கள் (திரையரங்க பதிப்பு) 186 நிமிடங்கள் (விரிவாக்கப்பட்ட பதிப்பு) |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $191–250 மில்லியன்[2][3] |
மொத்த வருவாய் | $959 மில்லியன் |
இப்படத்தின் கதை டிராகன் சிமாக்கிலிருந்து லோன்லி மவுண்டனை மீட்பதற்கான தேடலில் தோரின் ஓக்கன்ஷீல்ட் மற்றும் அவரது சக குள்ளர்களுடன் பில்போ பேகின்சு என்ற பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தைப் பின்தொடர்கிறது. இந்த திரைபபடத்தில் அசோக் தி டிபைலர் மற்றும் போல்க் ஆகியோரின் பழிவாங்கும் முயற்சியும் இடம்பெற்றுள்ளது, அதே நேரத்தில் டோல் குல்தூரின் இடிபாடுகளில் வளர்ந்து வரும் தீமையை காண்டால்ப்பு விசாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் இயன் மெக்கெல்லன், மார்டின் பிறீமன், ரிச்சர்ட் ஆர்மிட்டேச், பெனடிக்ட் கம்பர்பேட்ச்,[4][5][6] இவாஞ்சலீன் லில்லி,[7] லீ பேஸ்,[8][9] லூக் எவன்ஸ்,[10] கென் சாட், ஜேம்ஸ் நெஸ்பிட் மற்றும் ஆர்லாந்தோ புளூம் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த படம் நியூசிலாந்தைச்[11][12][13] சுற்றிலும் பைன்வுட் வளாகத்திலும் முதன்மைப் புகைப்படம் எடுப்பதன் மூலம், வினாடிக்கு 48 பிரேம்கள் என்ற விகிதத்தில் முப்பரிமாணத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. அதை தொடர்ந்து மே 2013 முழுவதும் கூடுதல் படப்பிடிப்பு நடந்தது.
இந்த படம் லாஸ் ஏஞ்சல்ஸில் 2 டிசம்பர் 2013 அன்று திரையிடப்பட்டது,[14][15] பின்னர் 12 டிசம்பர் 2013 அன்று நியூசிலாந்திலும், 13 டிசம்பர் 2013 அன்று அமெரிக்காவிலும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $959 மில்லியனுக்கு மேல் வசூலித்தது,[16] இது 2013 ஆம் ஆண்டில் நான்காவது அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் பல பாராட்டுகளைப் பெற்றது; 86ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த இசை இயக்கம், சிறந்த இசை மற்றும் சிறந்த திரை வண்ணம் ஆகியவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்டது. இத் திரைப்படத்தை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hobbit The Desolation of Smaug (2013)". British Film Institute. Archived from the original on 10 August 2014. Retrieved 25 July 2014.
- ↑ "2013 Feature Film Production Report" (PDF). The Hollywood Reporter. Retrieved January 2, 2017.
- ↑ "The Hobbit: The Desolation of Smaug (2013)". The Numbers. Retrieved 15 January 2022.
- ↑ Sims, Andrew (13 May 2013). "Benedict Cumberbatch reveals how he convinced Peter Jackson to motion capture Smaug". Hypable. Retrieved 20 August 2013.
- ↑ Romano, Nick (2013). "Benedict Cumberbatch for 'The Hobbit 2' Motion Capture". ScreenCrush.
- ↑ "Benedict Cumberbatch sees Smaug as sexy". Toronto Star (Toronto). 12 December 2013. http://www.thestar.com/entertainment/movies/2013/12/12/benedict_cumberbatch_sees_smaug_as_sexy.html.
- ↑ Sims, Andrew (5 June 2013). "'The Hobbit: The Desolation of Smaug': First look at Evangeline Lilly as new character Tauriel". Hypable. Retrieved 20 August 2013.
- ↑ Jackson, Peter (30 April 2011). "Casting news!". Facebook. Retrieved 30 April 2011.
- ↑ Gonzalez, Sandra (2 May 2011). "Lee Pace cast in 'The Hobbit.' Our hopes for his comeback grow". Entertainment Weekly. Retrieved 2 May 2011.
- ↑ Wood, Daniel (14 May 2013). "The Hobbit: First look at Bard the Bowman, Tauriel and other new characters". Yahoo! Movies. Retrieved 20 August 2013.
- ↑ "The Hobbit filming to start again in NZ". Television New Zealand. 20 May 2013. Retrieved 20 August 2013.
- ↑ Gicas, Peter (22 May 2013). "The Hobbit Trilogy Resumes Final Filming, Director Peter Jackson Posts Photo on Facebook". E!. Retrieved 20 August 2013.
- ↑ "Hobbit set fires up for new movie shoot". stuff.co.nz. 7 June 2013. Retrieved 20 August 2013.
- ↑ "No Welly premiere for second Hobbit film". Stuff.co.nz. 10 June 2013. Retrieved 20 August 2013.
- ↑ Kit, Borys (3 December 2013). "The Hobbit: The Desolation of Smaug Premiere". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/heat-vision/inside-hobbit-desolation-smaug-premiere-661467.
- ↑ "The Hobbit: The Desolation of Smaug". Box Office Mojo. Retrieved 20 June 2021.