மால்கம் இசுபெல்மேன்
மால்கம் இசுபெல்மேன் (ஆங்கில மொழி: Malcolm Spellman) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் எம்பயர் (2015) மற்றும் பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் (2021) ஆகியவற்றில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுகிறார்.
மால்கம் இசுபெல்மேன் | |
---|---|
தேசியம் | அமெரிக்கன் |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–இன்று வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
வாழ்க்கைத் துணை | நிச்செல் டிராம்பிள் இசுபெல்மேன் |
தொழில்
தொகுஇவர் 2010 ஆம் ஆண்டு வெளியான 'அவர் பேமிலி வெட்டிங்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதையை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து பிப்ரவரி 2015 இல், எம்பயர் என்ற தொலைக்காட்சி தொடரின் பல அத்தியாயங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.[1] திசம்பர் 2019 இல், அவர் ஆப்பிள் டிவி+ தொடரான 'துருத் பி டோல்ட்' (2019) இல் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். அத்துடன் பிப்ரவரி 2021 இல், ஸ்பெல்மேன் எப்எக்ஸ் தொடரான ஹிப் ஹாப் அன்கவர்டு (2021) இல் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார்.
இவர் மார்ச்சு 2021 இல், மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட டிஸ்னி+ தொடரான பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் (2021) இல் பணியாற்றியதன் மூலம் குறிப்பிடத்தக்கவர் ஆனார்.[2][3] பின்னர் திசம்பர் 2021 இல், பெல்-ஏர் என்ற தொடரில் எழுத்தாளர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். அதை தொடர்ந்து இடாலன் முசனுடன்[4] இணைந்து மார்வெல் திரைப் பிரபஞ்ச படமான கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு என்ற திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
திரைப்படம்
தொகுஆண்டு | ஆண்டு | எழுத்தாளர் | தயாரிப்பாளர் |
---|---|---|---|
2010 | அவர் பேமிலி வெட்டிங் | ஆம் | இல்லை |
2025 | கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு | ஆம் | ஆம் |
2025 | சிபான் | ஆம் | இல்லை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hatchett, Keisha (February 16, 2021). "The Falcon and the Winter Soldier's Malcolm Spellman Is Ready to Deliver an Undeniably Black Superhero Story". TVLine. Archived from the original on February 16, 2021. பார்க்கப்பட்ட நாள் March 19, 2021.
- ↑ Anderson, Jenna (October 31, 2019). "The Falcon and The Winter Soldier Has Begun Filming". Comicbook.com. Archived from the original on November 1, 2019. பார்க்கப்பட்ட நாள் March 20, 2021.
- ↑ Welch, Alex (March 16, 2021). "Falcon and the Winter Soldier Is the "Antithesis" of WandaVision, Writer Says". Inverse. Archived from the original on March 16, 2021. பார்க்கப்பட்ட நாள் March 20, 2021.
- ↑ Kit, Borys; Couch, Aaron (April 23, 2021). "'Captain America 4' in the Works With 'Falcon and the Winter Soldier' Showrunner Malcolm Spellman (Exclusive)". The Hollywood Reporter (in ஆங்கிலம்). Archived from the original on April 23, 2021. பார்க்கப்பட்ட நாள் April 23, 2021.