ஹாக்ஐ (தொலைக்காட்சித் தொடர்)

ஹாக்ஐ (ஆங்கில மொழி: Hawkeye) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி குற்றப்புனைவு மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் கிளின்ட் பார்டன்[1] மற்றும் கேட் பிசப்[2] ஆகிய மார்வெல் காமிக்சு கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக ஜொனாதன் இக்லா என்பவர் உருவாக்கியுள்ளார்.

ஹாக்ஐ
வகை
உருவாக்கம்ஜொனாதன் இக்லா
நடிப்பு
  • ஜெரமி ரெனர்
  • ஹைலி ஸ்டெயின்பீல்ட்
  • டோனி டால்டன்
  • பிற பீ
  • பிரையன் டி'ஆர்சி ஜேம்ஸ்
  • அலெக்ஸ் பவுனோவிக்
  • பியோட்டர் ஆடம்சிக்
  • லிண்டா கார்டெல்லினி
  • சைமன் கால்லோ
  • வேரா பார்மிகா
  • அலகுவா காக்ஸ்
இசை
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்2
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • ஜோனதன் இக்லா
  • ரைஸ் தாமஸ்
  • பிராட் விண்டர்பாம்
  • டிரின் டிரான்
  • விக்டோரியா அலோன்சோ
  • லூயிஸ் டி எஸ்போசிட்டோ
  • கேவின் பிகே
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவு
  • எரிக் ஸ்டீல்பெர்க்
  • ஜேம்ஸ் விட்டேக்கர்
தொகுப்புடெரல் கிப்சன்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
ஒளிபரப்பான காலம்நவம்பர் 24, 2021 (2021-11-24) –
திசம்பர் 22, 2021 (2021-12-22)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இந்த தொடர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாவது தொலைக்காட்சி தொடர் ஆகும். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. மற்றும் இந்த தொடரின் கதை 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

இந்த தொடரில் நடிகர் ஜெரமி ரெனர்[3] என்பவர் திரைப்படத் தொடரில் இருந்து மீண்டும் கிளின்ட் பார்டனாக நடிக்க, இவருடன் இணைந்து ஹைலி ஸ்டெயின்பீல்ட்,[4] டோனி டால்டன், பிற பீ, பிரையன் டி'ஆர்சி ஜேம்ஸ், அலெக்ஸ் பவுனோவிக், பியோட்டர் ஆடம்சிக், லிண்டா கார்டெல்லினி, சைமன் கால்லோ, வேரா பார்மிகா, அலகுவா காக்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5]

இந்த தொடர் மொத்தம் ஆறு அத்தியாயங்களில் உருவாக்கப்பட்டு தனது முதல் இரண்டு[6] அத்தியாயங்களும் நவம்பர் 24, 2021 அன்று திரையிட்டது, இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடர் ஆகும். இந்தத் தொடர் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் அதன் சண்டைக் காட்சிகள் மற்றும் முன்னணி நடிகர்களின் ஜோடி பொருத்தம் பற்றி பாராட்டினார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dumarog, Ana (October 25, 2019). "Marvel's Hawkeye Show Will Reveal Clint Barton's Backstory". Screen Rant. Archived from the original on October 28, 2019. பார்க்கப்பட்ட நாள் October 28, 2019.
  2. Boone, John (December 10, 2020). "Hailee Steinfeld Talks Bringing 'Badass' Kate Bishop to Life for 'Hawkeye' (Exclusive)". Entertainment Tonight. Archived from the original on December 22, 2020. பார்க்கப்பட்ட நாள் December 22, 2020.
  3. Otterson, Joe (April 10, 2019). "Hawkeye Series Starring Jeremy Renner in the Works at Disney+ (Exclusive)". Variety. Archived from the original on April 10, 2019. பார்க்கப்பட்ட நாள் April 10, 2019.
  4. Anderton, Ethan (November 24, 2021). "Everything Hawkeye's Opening Credits Sequence Tells Us About Kate Bishop". /Film. Archived from the original on November 24, 2021. பார்க்கப்பட்ட நாள் November 24, 2021.
  5. Hood, Cooper (November 23, 2021). "Hawkeye Cast Guide: Every New & Returning Marvel Character". Screen Rant. Archived from the original on November 23, 2021. பார்க்கப்பட்ட நாள் November 25, 2021.
  6. Brown, Tracy (November 24, 2021). "Did 'Hawkeye' Episode 2 reveal its first big villain? Here's her comic book back story". Los Angeles Times. Archived from the original on November 25, 2021. பார்க்கப்பட்ட நாள் November 26, 2021.

வெளிப்புற இணைப்புகள்

தொகு