கிளின்ட் பார்டன்
கிளின்ட் பார்டன் (வில்லாளன்) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கற்பனை மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் டான் ஹெக் ஆகியோர் உருவாக்கினர்கள். கிளின்ட் பார்டனின் முதல் தோற்றம் செப்டம்பர் 1964 இல் டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் #57 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 1969 இல் அவென்ஜர்ஸ் #63 இணைக்கப்பட்டார். அன்றிலிருந்து இவர் அணியின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார். "எல்லா நேரத்திலும் சிறந்த 100 காமிக் புத்தக ஹீரோக்களில்" பட்டியலில் அவர் 44வது இடத்தைப் பிடித்தார்.[1]
கிளின்ட் பார்டன் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | ஹவ்க்கியோக : டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் #57 (செப்டம்பர் 1964) கோலியாத் என: அவென்ஜர்ஸ் #63 (ஏப்ரல் 1969) கோல்டன் ஆர்ச்சராக: கேப்டன் அமெரிக்கா #179 (நவம்பர் 1974) ரோனினாக: நியூ அவென்ஜர்ஸ் #27 (ஏப்ரல் 2007) |
உருவாக்கப்பட்டது | ஸ்டான் லீ டான் ஹெக் |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | கிளின்டன் பிரான்சிஸ் பார்டன் |
பிறப்பிடம் | வேவர்லி, அயோவா |
பங்காளர்கள் | பிளாக் விடோவ் மொக்கிங்பேர்ட் கேட் பிஷப் |
திறன்கள் |
|
மார்வெல் திரைப் பிரபஞ்சம் இந்த கதாபாத்திரத்தை நடிகர் ஜெரமி ரெனர் மூலம் தோர் சிறப்பு தோற்றம் (2011), தி அவேஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Top 100 Comic Book Heroes – IGN". Archived from the original on 24 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2012.
வெளியிணைப்புகள்
தொகு- Hawkeye_(Clint_Barton) at the Marvel Universe wiki
- Clinton Barton (Earth-616) at the Marvel Database Project
- Hawkeye (comic book character) at Comic Vine
- Hawkeye (Clint Barton) at the Comic Book DB
- Hawkeye vol. 1 (1983) at the Comic Book DB
- Hawkeye vol. 2 (1994) at the Comic Book DB
- Hawkeye vol. 3 (2003) at the Comic Book DB