அவென்ஜர்ஸ் (வரைகதை)
அவென்சர்சு என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கற்பனை மீநாயகன் அணி ஆகும். இந்த அணியை செப்டம்பர், 1963 ஆம் ஆண்டு எழுத்தாளர், பதிப்பாசிரியர் சுடான் லீ, கலைஞர், ஆசிரியர் சாக் கிர்பி ஆகியோர் உருவாக்கினர்.
அவென்சர்சு | |
---|---|
Publication information | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்சு |
முதல் தோற்றம் | அவென்சர்சு #1 (செப்டம்பர் 1963) |
ஆக்கம் | சுடான் லீ (எழுத்தாளர்) சாக் கிர்பி (கலைஞர்) |
In-story information | |
Type of organization | மீநாயகன்கள் |
Base(s) | சிடார்க்கு டவர் அவென்சர்சு மாளிகை ஐடுரோ-பேசு தி புரோசெனிட்டர்[1] |
"பூமியின் மிகச்சிறந்த ஈரோக்கள்" என்று பெயரிடப்பட்ட அவென்சர்சு முதலில் ஆன்ட் மேன், அயன் மேன், தோர், அல்க் மற்றும் வாசிப் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. #2 இதழில் ஆன்ட் மேன் செயண்ட் மேன் ஆனார். கேப்டன் அமெரிக்கா #4 இதழில் பனியில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர்கள் அவரை உயிர்ப்பித்த பின்னர் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த அணியில் எல்லா மீநாயகன்களும் ஒன்று சேர்ந்து இந்த பிரபஞ்சத்திற்கு வரும் ஆபத்துகளை எப்படி முறியடித்தனர் என்பது தான் கதை. "அவென்சர்சு அசெம்பிள்!" என்ற போர்க்குரலுக்கு பிரபலமான இந்த அணியில் மனிதர்கள், மரபுபிறழ்ந்தவர்கள், மனிதாபிமானமற்றவர்கள், வேற்றுகிரகவாசிகள், இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் மற்றும் முன்னாள் வில்லன்கள் கூட இடம்பெற்றுள்ளனர்.
அவென்சர்சு வரை கதை புத்தகங்கள் தவிர பலவகையான ஊடகங்களில் தோன்றியுள்ளது, இதில் பலவிதமான அனிமேசன் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நேரடி காணொளி படங்கள் போன்றன உள்ளன. மார்வெல் திரைப் பிரபஞ்சம் திரைப்படங்களில் ஆர்வம் செலுத்துவதில் அவென்சர்சு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு தி அவென்சர்சு என்ற நேரடி திரைப்படம் தொடங்கியது. அதன் தொடர்சியாக அவென்சர்சு: ஏச்சு ஒப் உல்ட்ரோன் (2015), அவென்சர்சு : இன்பினிட்டி வார் (2018), அவென்சர்சு: எண்ட்கேம் (2019) ஆகியவை தி இணைபிரிட்டி கவுண்ட்லே என்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டவை. 2016 ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் இல் அவென்சர்சு அணி இடம் பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ridgely, Charlie (September 20, 2018). "The Avengers Get a Crazy New Home Base". Comic Book. பார்க்கப்பட்ட நாள் December 27, 2019.
வெளியிணைப்புகள்
தொகு- Avengers at the Superhero Database
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Avengers Comic Book Sales History—Sales figures from 1966–present
- MDP:Avengers—Marvel Database Project (wiki)
- Avengers Assemble!—Archives and Database
- The Avengers