சைமன் கின்பெர்க்கு
சைமன் டேவிட் கின்பெர்க்கு (ஆங்கில மொழி: Simon David Kinberg)[1] (பிறப்பு: 2 ஆகத்து 1973)[2] என்பவர் பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.
சைமன் கின்பெர்க்கு | |
---|---|
பிறப்பு | சைமன் டேவிட் கின்பெர்க்கு ஆகத்து 2, 1973 ஹேமர்ஸ்மித், இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
துணைவர் | கிளியோ வேட் (நிச்சயதார்த்தம்) |
வாழ்க்கைத் துணை | மாலி ஹெல்ட் (தி. 2001; ம.மு. 2017) |
பிள்ளைகள் | 4 |
இவர் 20ஆம் சென்சுரி பாக்ஸ் திரைப்பட உரிமையில் எக்ஸ்-மென் போன்ற பல படங்களை எழுதியுள்ளார் அல்லது தயாரித்துள்ளார், மேலும் மிஸ்டர் & மிசஸ் சிமித் மற்றும ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற படங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். இவர் சிண்டரெல்லா மற்றும் த மார்சன் உள்ளிட்ட பிற படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார், அத்துடன் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்-மென் திரைப்படமான எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் 2 ஆகத்து 1973 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் இலண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித்தில் அமெரிக்க பெற்றோரான மோனிகா மெனெல் கின்பெர்க் மற்றும் நியூயார்க் நகரில் பிறந்த எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜூட் கின்பெர்க் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3] ஆறு வயதிலிருந்து, இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வளர்ந்தார். இவர் யூதர் ஆவார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Weddings; Mali Heled, Simon Kinberg". The New York Times. July 29, 2001 இம் மூலத்தில் இருந்து May 27, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150527175926/http://www.nytimes.com/2001/07/29/style/weddings-mali-heled-simon-kinberg.html.
- ↑ Frank Lovece (January 26, 2016). "Everyone into the Deadpool: Producer Simon Kinberg helps revive Marvel's raunchy superhero". Film Journal International இம் மூலத்தில் இருந்து January 28, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128182927/http://www.filmjournal.com/features/deadpool-marvel-simon-kinberg-producer-interview.
- ↑ "Index entry". FreeBMD. ONS. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
- ↑ "IGN Interviews Simon Kinberg". IGN. September 30, 2005. Archived from the original on October 5, 2015. பார்க்கப்பட்ட நாள் August 25, 2013.