எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ்

எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (Dark Phoenix) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இத்திரைப்படம் மார்வெல் காமிக்ஸ்ஸின் பாத்திரப் படைப்பான எக்ஸ்-மென் கதையின் அடிப்படையிலானதாகும். இது எக்ஸ்-மென் திரைப்பட வரிசையில் 12வது திரைப்படமும் எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் என்ற திரைப்பட தொடரின் ஏழாவது பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை சிமோன் கின்பெர்க் என்பவர் எழுதி மற்றும் இயக்க, ஜேம்ஸ் மாக்கவோய், மைக்கல் பாஸ்பெந்தர், ஜெனிபர் லாரன்ஸ், நிக்கோலசு ஹோல்ட், சோபி டர்னர், டை ஷெரிடன், அலெக்ஸாண்ட்ரா ஷிப், கோடி ஸ்மிட்-மெக்ஃபீ, இவான் பீட்டர்ஸ் மற்றும் ஜெசிகா சாஸ்டன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]

எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ்
இயக்கம்சிமோன் கின்பெர்க்
தயாரிப்பு
கதைசிமோன் கின்பெர்க்
மூலக்கதைஎக்ஸ்-மென்
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுமாவோரோ ஃபியோர்
படத்தொகுப்புலீ ஸ்மித்
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 7, 2019 (2019-06-07)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இந்த புதிய பாகத்தில் நடிகை சோபி டர்னர் ஜீன் க்ரே எனும் பீனிக்ஸ் பறவை சக்தி கொண்ட வில்லியாக நடித்துள்ளார். எக்ஸ்மென்களில் ஒருவராக உள்ள ஜீன் க்ரேவே எக்ஸ்மென்களுக்கு வில்லியாக மாறினால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந் திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

கதைச் சுருக்கம்தொகு

ஜீன் க்ரே நெருப்பில் விழுந்து எரிந்தாலும், மீண்டும் பறக்கும் பீனிக்ஸ் பறவை போன்ற சக்தி வாய்ந்தவள். சார்லஸ் சேவியர் தனது மூளையின் சக்தியால், ஜீன் க்ரேவின் சக்தியை உணர முயல்கிறார். இவளால் எல்லோருக்கு ஆபத்து என்ற அறிந்து கொள்ளும் சார்லஸ் தனது எக்ஸ்-மென் படையை கொண்டு எப்படி அவளை கட்டுப்படுத்த போகின்றார் என்பது தான் கதை.

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு