எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)

எக்ஸ்-மென் (X-Men) என்பது அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படத் தொடர் ஆகும். இது ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் இதே பெயரில் உருவாக்கப்பட்டு மார்வெல் வரைக்கதை புத்தகத்தில் வெளியான ஒரு மீநாயகன் குழு ஆகும். இந்த திரைப்படத் தயாரிப்பிற்கான உரிமையை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் 1994 ஆம் ஆண்டில் பெற்றது.

எக்ஸ்-மென்
தயாரிப்புலாரன் ஷுலர் டோன்னர்
சைமன் கின்பெர்க்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
மார்வெல் மகிழ்கலை
டோனர்ஸ் கம்பெனி
நாடுஐக்கிய அமெரிக்கா
ஆக்கச்செலவுTotal (13 திரைப்படங்கள்):
$$1.748 பில்லியன்
மொத்த வருவாய்Total (13 திரைப்படங்கள்):
$6.083 பில்லியன்

பிறையன் சிங்கர் என்பவர் இயக்கத்தில் எக்ஸ்-மென் என்ற முதல் திரைப்படம் 2000 ஆம் ஆண்டும் அதன் தொடர்ச்சியாக எக்ஸ்-மென் 2 என்ற படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் என்ற மூன்றாம் பாகம் பிரெட் ரட்னர் என்பவர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த திரைப்படத்தில் இருந்து வெவ்வேறு கிளை கதாபாத்திரங்களை மையமாக வைத்து மூன்று வோல்வரின் படங்கள் (வோல்வரின் (2009), வோல்வரின்-2 (2013), லோகன் (2017), நான்கு புதிய எக்ஸ்-மென் படங்கள் (எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் (2011), எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் (2014), எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016), எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019) மற்றும் இரண்டு டெட்பூல் படங்களை (டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018) போன்றவை வெளியானது.

இதுவரைக்கும் பதிமூன்று படங்கள் வெளியான நிலையில், எக்ஸ்-மென் திரைப்படத் தொடர் உலகளவில் 6 பில்லியன் டாலர்களை வசூலித்து ஏழாவது முறையாக அதிக வசூல் செய்த திரைப்படத் தொடராக திகழ்கின்றது

வெளியான திரைப்படங்கள்தொகு

திரைப்படம் வெளியான திகதி இயக்குனர்
எக்ஸ்-மென் அசல்
எக்ஸ்-மென் சூலை 14, 2000 (2000-07-14) பிறையன் சிங்கர்
எக்ஸ்-மென் 2 மே 2, 2003 (2003-05-02)
எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் மே 26, 2006 (2006-05-26) பிரெட் ரட்னர்
வோல்வரின்
வோல்வரின் மே 1, 2009 (2009-05-01) கேவின் ஹூட்
வோல்வரின்-2 சூலை 26, 2013 (2013-07-26) ஜேம்ஸ் மங்கோல்ட்
லோகன் மார்ச்சு 3, 2017 (2017-03-03)
எக்ஸ்-மென் துவக்கம்
எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் சூன் 3, 2011 (2011-06-03) மத்தேயு வான்
எக்ஸ்-மென்: டேஸ் ஒப் பியூச்சர் பாஸ்ட் மே 23, 2014 (2014-05-23) பிறையன் சிங்கர்
எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் மே 27, 2016 (2016-05-27) பிறையன் சிங்கர்
எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் சூன் 7, 2019 (2019-06-07) சைமன் கின்பெர்க்
டெட்பூல்
டெட்பூல் பெப்ரவரி 12, 2016 (2016-02-12) டிம் மில்லர்
டெட்பூல் 2 மே 18, 2018 (2018-05-18) டேவிட் லெவிட்ச்
ஸ்பின்-ஆஃப்
நியூ நியூட்டன்ஸ் ஆகத்து 28, 2020 (2020-08-28) ஜோஷ் பூனே

எக்ஸ்-மென் (2000)தொகு

1994 ஆம் ஆண்டு 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் லாரன் ஷுலர் டோன்னர் எக்ஸ்-மென் கதையை திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றனர்.[1] ஆன்ட்ரூ கெவின் வாக்கர் எழுத்தாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜேம்ஸ் கேமரான் இந்தப்படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்.[2] பிரையன் சிங்கர் இந்தத் திரைப்படத்தை இயக்குவதாக 1996 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஜான் லோகன், ஜோஸ் வெடன், எட் சாலமோன், கிறிஸ்டோபர் , மற்றும் டேவிட் ஹைடர் ஆகியோர் திரைக்கதையை அமைத்தனர்.[1][3] 1999,தொராண்டோ,கனடாவில் தொடங்கப்பட்ட இத் திரைப்படம் மார்ச்,2000 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது.[4] இந்த்திரைப்படம் சூலை 14 ,2000 இல் வெளியானது.[5]

எக்ஸ்-மென் 2 (2003)தொகு

இந்த பாகத்தில் கர்னல் வில்லியம் ஸ்டிரைக்கர் சிறையில் உள்ள மேக்னட்டோவை சில கேள்விகள் கேட்டு அவரை குழப்பமடையச் செய்கிறார். மேலும் சேவியரை குழப்பமடையச் செய்து செரப்ரோ இயந்திரத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து விகாரிகளையும் (மியூட்டன்ட்) கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். அதனை எக்ஸ்-மென்னும் அவனுடைய சகாக்களும் அதனை முறியடிக்கின்றனர்.

டேவிட் ஹைடர் மற்றும் சக் பென் ஆகியோர் திரைக்கதையை எழுதிய இந்த பாகம் திசெம்பர்,2002 ஆம் ஆண்டு வெளியானது.[6][7] மைக்கேல் தோகர்டி மற்றும் டான் ஹாரிஸ் ஆகியோர் திரைக்கதையில் மற்றம் செய்தனர். 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் வான்கூவரில் தொடங்கப்பட்டு 2002, அக்டோபர் மாதம் முடிவடைந்தது. 2003 ஆம் ஆண்டு மே 2 இல் இந்தத் திரைப்படம் வெளியானது.[6]

மொத்த வருவாய்தொகு

வசூல் ரீதியாக எக்ஸ்-மென் திரைப்படங்கள்
படம் அமெரிக்கா வெளியீட்டு தேதி வசூல் வருவாய் அனைத்து நேர தரவரிசை உற்பத்தி செலவு மேற்கோள்
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
எக்ஸ்-மென் ஜூலை 14, 2000 $157,299,717 $139,039,810 $296,339,527 330 479 $75 மில்லியன் [8]
எக்ஸ்-மென் 2 மே 2, 2003 $214,949,694 $192,761,855 $407,711,549 178 282 $110 மில்லியன் [9]
எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் மே 26, 2006 $234,362,462 $224,997,093 $459,359,555 140 236 $210 மில்லியன் [10]
வோல்வரின் மே 1, 2009 $179,883,157 $193,179,707 $373,062,864 252 320 $150 மில்லியன் [11]
எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் ஜூன் 3, 2011 $146,408,305 $207,215,819 $353,624,124 373 360 $160 மில்லியன் [12]
வோல்வரின்-2 ஜூலை 26, 2013 $132,556,852 $282,271,394 $414,828,246 449 271 $120 மில்லியன் [13]
எக்ஸ்-மென்: டேஸ் ஒப் பியூச்சர் பாஸ்ட் மே 23, 2014 $233,921,534 $513,941,241 $747,862,775 143 98 $200 மில்லியன் [14]
டெட்பூல் பிப்ரவரி 12, 2016 $363,070,709 $420,042,270 $783,112,979 46 89 $58 மில்லியன் [15]
எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் மே 27, 2016 $155,442,489 $388,492,298 $543,934,787 336 178 $178 மில்லியன் [16]
லோகன் மார்ச் 3, 2017 $226,277,068 $392,744,368 $619,021,436 154 144 $97 மில்லியன் [17]
டெட்பூல் 2 மே 18, 2018 $324,591,735 $460,455,185 $785,046,920 64 87 $110 மில்லியன் [18]
எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் ஜூன் 7, 2019 $65,845,974 $186,597,000 $252,442,974 1,246 584 $200 மில்லியன் [19]
நியூ நியூட்டன்ஸ் ஆகஸ்ட் 28, 2020 $23,852,659 $24,178,539 $48,031,198 $67–80 மில்லியன் [20]
மொத்தம் $2,458,462,355 $3,625,916,579 $6,084,378,934 $1.735 பில்லியன் [21]

வெளியிணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 Jensen, Jeff (July 21, 2000). "X-Men — Marvel's mutants leap onto the big screen". Entertainment Weekly. May 5, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 8, 2007 அன்று பார்க்கப்பட்டது.
 2. Molloy, Tim (March 25, 2012). "Chris Claremont's Dream X-Men Movie: James Cameron, Kathryn Bigelow, and Bob Hoskins as Wolverine". TheWrap.com. Archived from the original on March 9, 2016. https://web.archive.org/web/20160309121554/http://www.thewrap.com/chris-claremonts-dream-x-men-movie-james-cameron-kathryn-bigelow-and-bob-hoskins-wolverine-3/. பார்த்த நாள்: October 11, 2014. 
 3. Seymour, Craig (May 10, 2000). "Buffy creator slams The X-Men movie". Entertainment Weekly. February 3, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 22, 2007 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Greg's Preview – X-Men". Yahoo!. January 11, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 11, 2007 அன்று பார்க்கப்பட்டது. |first= missing |last= (உதவி)
 5. "X-Men (2000)". Box Office Mojo. December 16, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 Schmitz, Greg Dean. "Greg's Preview – X2: X-Men United". Yahoo!. February 19, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 11, 2007 அன்று பார்க்கப்பட்டது.
 7. Peter Sanderson (2003). X-Men: The Ultimate Guide. Dorling Kindersley. பக். 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7513-4617-9. 
 8. "X-Men (2000)". Box Office Mojo. December 16, 2008 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 9. "X2: X-Men United (2003)". Box Office Mojo. November 21, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 10. "X-Men: The Last Stand (2006)". Box Office Mojo. December 10, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 11. "X-Men Origins: Wolverine (2009)". Box Office Mojo. January 10, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 12. "X-Men: First Class (2011)". Box Office Mojo. May 20, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 13. "The Wolverine (2013)". Box Office Mojo. December 23, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 14. "X-Men: Days of Future Past (2014)". Box Office Mojo. March 12, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Deadpool (2016)". Box Office Mojo. March 9, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 16. "X-Men: Apocalypse (2016)". Box Office Mojo. March 4, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Logan (2017)". Box Office Mojo. March 19, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Deadpool 2 (2018)". Box Office Mojo. June 1, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Dark Phoenix (2019)". Box Office Mojo. August 15, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 20. "The New Mutants (2020)". Box Office Mojo. March 2, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 21. "X-Men Movies at the Box Office". Box Office Mojo. February 28, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 4, 2019 அன்று பார்க்கப்பட்டது.