வோல்வரின் (திரைப்படம்)

எக்ஸ்-மென் ஒரிஜின்ஸ்: வோல்வரின் (X-Men Origins: Wolverine) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான வால்வரின் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் மகிழ்கலை, ஸீட் புரொடக்சன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

எக்ஸ்-மென் ஒரிஜின்ஸ்: வோல்வரின்
இயக்கம்கேவின் ஹூட்
தயாரிப்பு
மூலக்கதை
வால்வரின்
படைத்தவர்
 • ராய் தாமஸ்
 • லென் வெய்ன்
 • ஜான் ரோமிதா சீனியர்.
திரைக்கதை
 • டேவிட் பெனியோஃப்
 • ஸ்கிப் வூட்ஸ்
இசைஹாரி கிரெக்சன்-வில்லியம்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுடொனால்ட் மெக்கல்பைன்
படத்தொகுப்பு
 • நிக்கோலாஸ் டி டோத்
 • மேகன் கில்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுஏப்ரல் 9, 2009 (2009-04-09)(சிட்னி)
மே 1, 2009 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்107 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா[1]
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$373.1 மில்லியன்

இது எக்ஸ்-மென் தொடரின் நான்காவது பகுதியான இத்திரைப்படம் மே 1, 2009 அன்று உலகம் முழுவதும் வெளியானது. கேவின் ஹூட் இயக்கிய திரைப்படத்தில் ஹக் ஜேக்மேன் தலைமைப் பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் லீவ் ஷ்ரைபர், டேனி ஹஸ்டன், டோமினிக் மோனகன் மற்றும் ரையன் ரெனால்ட்சு போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் எக்ஸ்-மென் திரைப்படத் தொடருக்கு முன்பு நடப்பது போன்று மரபுபிறழ்ந்த வோல்வரின் மற்றும் அவரது சகோதரர் விக்டர் கிரீட் இருவருக்கும் உள்ள உறவு மற்றும் அவர்களது கடந்த கால வன்முறையை மையப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் படம்பிடிக்கப்பட்டது. மேலும் கனடாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இத்திரைப்படத்தின் இயக்குனர் கேவின் ஹூட் மற்றும் பாக்ஸின் செயற்குழுவிற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இதன் தயாரிப்பில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நிறைவுசெய்யப்படாத படப்பிடிப்புப் பதிவு இணையத்தில் வெளியானது.

எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின் படம் 1 மே 2009 அன்று உலகளவில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் வட அமெரிக்காவில் வசூலில் முதலிடத்தில் பிடித்ததது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவில் 179 மில்லியனையும், உலகளவில் 373 மில்லியனையும் வசூலித்ததது. இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக வோல்வரின்-2 (2013) மற்றும் லோகன் (2017) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

நடிகர்கள்தொகு

** இவர் ஒரு மரபுபிறழ்ந்தவர் மற்றும் வருங்கால எக்ஸ்-மென் உறுப்பினராவார். முந்தைய திரைப்படங்களில் வொல்வரினாக நடித்த ஜேக்மேன் இத்திரைப்படத்தில் அவரது நிறுவனமான சீடு புரொடக்சன்ஸ் மூலமாக தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் இத்திரைப்படத்தினால் $25 மில்லியனையும் சம்பாதித்தார்.
  • டிராய் சிவன் - இளம் ஜேம்ஸ் ஹவ்லெட்
 • லீவ் ஷ்ரைபர் - விக்டர் கிரீட்
  • இவர் லோகனின் சகோதரர் மற்றும் படைவீரர்களில் ஒருவராக நடித்தார்.
  • மைக்கேல்-ஜேம்ஸ் ஓல்சன் - இளம் விக்டர் கிரீட்
 • டேனி ஹஸ்டன்[3] - வில்லியம் ஸ்ட்ரைக்கர்
 • வில்லியம்[4] - ஜான் விரைத்
 • லின் காலின்ஸ்[5] - கெய்லா சில்வர்ஃபாக்ஸ்
 • கெவின் டுராண்ட் - பிரெட் டியூக்ஸ் / ப்லோப்
 • டோமினிக் மோனகன் - கிறிஸ் பிராட்லி
 • டெய்லர் கிட்ஸ்ச் - ரெமி லீபியூ / காம்பிட்
 • டேனியல் ஹென்னி - ஏஜெண்ட் ஜீரோ
  • வெப்பன் X நிரலின் உறுப்பினரான இவர், மறைந்திருந்து குறி பார்த்து சுடும் திறனை கொண்டவர்.
 • ரையன் ரெனால்ட்சு[6] - வேட் வில்சன் / வெப்பன் XI

தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்தொகு

வோல்வரின்-2 (2013)தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு