வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வால்வரின் (மிருக மனிதன்) (ஆங்கில மொழி: Star Lord) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு மாபெரும் கனவுருப்புனைவு மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். பிறப்பால் ஜேம்ஸ் ஹவ்லெட் என்றும் பொதுவாக லோகன் என்றும் அறியப்படும் வால்வரின் மனித உருவில் இருக்கும் மிருகம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ராய் தாமஸ், லென் வெயின்,[1] ஜான் ரோமிதா ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.[2]
வால்வரின் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | சிறப்புத் தோற்றம் : இன்கிரிடிபில் ஹல்க் #180 (அக்டோபர் 1974) முழு தோற்றம்: இன்கிரிடிபில் ஹல்க் #181 (நவம்பர் 1974) |
உருவாக்கப்பட்டது | |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | ஜேம்ஸ் ஹவ்லெட் |
இனங்கள் | மனித விகாரி |
பிறப்பிடம் | ஆல்பர்ட்டா, கனடா |
குழு இணைப்பு |
|
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள் | லோகன் ஜெரிமியா லோகன் பேட்ச் வெப்பன் எக்ஸ் டெத் <br#9601 எமிலியோ கார்ரா வெப்பன் சி எஸ்பிரிமெண்ட் எக்ஸ் ஏஜென்ட் 10 பீட்டர் ரிச்சர்ட்ஸ் மை கேத் பிளாக் டிராகன் கேப்டன் கனடா கேப்டன் டேர்றோர் ஜான் லோகன் ஜிம் லோகன் |
திறன்கள் |
|
விலங்கினத்திற்குரிய நுட்பமான உணர்ச்சிகளும், அதீதமான மாமிச உடல் திறமைகளும், இணைந்த வால்வரின் தம் நகங்களை உள்நோக்கி இழுத்துக் கொள்வான் என்பதுடன், நோய் நொடி, விஷம், காயம், புண் என்ற அநேக உபாதைகளிலிருந்து மிக விரைவாகக் குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் நிரம்பியவன் ஆவான். ஆகவே ஒரு சராசரி மனிதனின் ஆயுளை விட நீண்ட காலம் வாழும் ஆற்றலும் பெற்றவன். இந்த குணமாக்கும் திறமை தான் 'வெப்பன் எக்ஸ்' என்ற இந்த மாவீரனுக்கு கிட்டத்தட்ட அழிக்கவே முடியாத அடமாண்டியம் என்ற உலோக கலவையைத் தன்னுடைய எலும்புக் கூடு மற்றும் நகங்களில் கலந்துப் பூசி சாக வலிமை பெறச் செய்தது. அத்துடன் எக்ஸ்-மென்களில் ஒருவன் என்று அடிக்கடி வர்ணிக்கப்பட்டான்.
இந்தக் கதாபாத்திரம் இன்க்கிரிடிபெல் ஹல்க் என்ற பெயரில் 1974 ஆம் ஆண்டு அக்டோபரில் முதன் முதலில் வெளிவந்தது. லென் வெயின் மற்றும் மார்வல் போன்ற கதாசிரியர்களும், கலை இயக்குநர் ஜான் ரோமிட்டோ சீனியர் போன்றோர்களின் இந்தப் படைப்பு புத்தக வெளியீட்டிற்காக ஹெர்ப் ட்டரிம்ப்பால் முதலில் வெளிக் கொணரப்பட்டது. பிறகு "எல்லாமே புதிது, எல்லாமே வித்யாசமானது" என்று பெரிய அளவில் x-மென் #1 என்ற படைப்புகளில் வால்வரினும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் (மே 1975 ஆம் ஆண்டு). x-மென்னின் கதாசிரியர் கிரிஸ் கிளேர்மான்ட், இந்த வால்வரினின் கதாபாத்திரத்தின் பின்னாளைய வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தார். எழுத்தாளரும், நடிகருமான ஜான் பைரன் மற்ற x-மென்களைவிட, இந்த வால்வரின் வயதில் மூத்தவராக சித்தரிக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினார். ஓவியர் பிராங்க் மில்லர், ஆசிரியர் கிளேர்மான்ட் உடன் இணைந்து கொண்டு இந்தக் கதாபாத்திரத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், ஓர் உயிரினத்தின் நான்கு பகுதி கொண்ட பாரம்பரிய வம்சாவழியாகவும், 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வரையறுக்கப்பட்ட தொடராக அறிமுகம் செய்யப்பட்டார். இத்தொடரில் முதன் முதலில் அறிமுகமான வால்வரினின் பிரச்சார வாசகமே "நான் தான் மிகச் சிறந்தவன், நான் செய்யும் செயல் எல்லாம் மிகவும் சிறந்தவை அல்ல. இருந்தாலும், அந்த எல்லாச் செயலிலும் நானே இருக்கிறேன்" என்பதுதான்.
வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்காவில் உதித்த புகழ்பெற்ற கலாச்சாரத்தில், கடுமையான ஆட்சி முறைகளுக்கு எதிராக வல்லமையான சக்தியாக வால்வரின் வளர்ந்து வந்தான். 1980 ஆம் ஆண்டுகளில், காமிக்ஸ் புத்தகங்களில் சித்தரிக்கப்பட்டதாலும், எல்லா வில்லன்களும், எதிராளிகளும் இந்த வால்வரினின் குறிப்பிடத்தக்க குனாதிசயங்களை கையாண்ட காரணத்தினாலும் வளர்ந்து வரும் X-மென்னின் வாசகர்களிடையே, வால்வரின் கதாப்பாத்திரம் ஒரு தேவையான விருப்பமான பாத்திரமாகவே மாறிவிட்டது.
1988-ஆம் ஆண்டு முதல் வால்வரின் ஒரு முழு கதாபாத்திர காமிக்ஸாக, மாயஜால கதை தொடராக சித்தரிக்கப்பட்டான். கூடவே X-மென் தழுவல் தொடரிலும் முக்கிய பாத்திரமாகப் படைக்கப்பட்டான். தொலைகாட்சியில் உருவகப்படுத்தப்பட்ட தொடர்கள், வீடியோ கேம்ஸ் என்ற தொலைக்காட்சி விளையாட்டு கேளிக்கைகளிலும் முக்கியப் பாத்திரமாக சித்தரிக்கப்பட்டான். 20-ம் நூற்றாண்டின் பாக்ஸின் X-மென்னின் படைப்பான நேரடிக் காட்சிகளிலும் ஹக் ஜாக்மன் என்பவரால் வால்வரின் முக்கிய கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்டான். 2008-ஆம் ஆண்டு மே மாதம் "விசார்ட் மேகஸின்" காலத்தில் மிகச் சிறந்த முதல் 200 மாயாஜாலக் கதாப்பாத்திரங்கள் என்ற அட்டவணையில் வால்வரின் முதல் இடத்தைப் பிடித்தான். 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்பயர் மேகஸின் வெளியிட்ட "முதல் 50 புத்தகக் கதாபாத்திரங்கள் தொகுப்பில்" வால்வரின் நான்காவது இடத்தைக் கைப்பற்றினான்.
பிரசுரித்தல் வரலாறு
தொகுலென் வெயின் எழுதிய ஹெர்ப் ட்டரிம்ப்ன் வால்வரின் ஓவியத்தில் தி இன்கிரிடிப்ளே ஹல்கின் #180 (1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாத அட்டைப் பதிப்பு) வெளியிட்ட குறும்புத்தனமான குழுவின் மதிப்பீட்டில் கடைசி இடத்தில் முதன் முதலில் வால்வரின் பதிவு செய்யப்பட்டான். 1974-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் வெயின், ட்ரிம்ப் இவர்களின் ஹல்க் #181 இதழில் மிகப் பெரிய அளவில் அச்சாவதற்கு முன், ஜூலை மாதம் மார்வல் காமிக்ஸ் வெளியிட்ட பல விளம்பரங்களில் இந்த கதாப்பாத்திரம் வெளியானது. ஜான் ரோமிடா சீனியர் என்பவர் வால்வரினின் மஞ்சளும், நீளமும் கலந்த ஆடை, ஆபரணங்களை வடிவமைத்தார். இவ்வாறாக கனடா அரசின் ஒரு மாயாஜால மனித ஏஜென்ட்டாகவும், அதற்கும் சற்று மேலான கதாப்பாத்திரமாகவும், சற்று தெளிவில்லாத ஒரு கதாப்பாத்திரமாக வால்வரின் அறிமுகப்படுத்தப்பட்டான். இந்தத் தோற்றங்களில் தனது நகங்களை உள்ளிழுத்துக் கொள்ளாதவனாகக் காணப்பட்டாலும், லென் வெயின் மட்டும் நகங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் கதாபாத்திரம் என்று கூறி வந்தார். ஹல்க் #182-ல் வெளியான கடைசி பகுதியில் சிறு குறிப்பாகத் தோன்றினான்.
கதாசிரியர் வெயினும், ஓவியர் தவே காக்ரும் இணைந்து எழுதி 1975-ஆம் ஆண்டு வெளியான மிகப் பெரிய x மென்னின் (ஜெயன்ட் சைஸ் x மென்) #1 என்ற பதிப்பில் வால்வரின் ஒரு புதிய படைப்பிற்குத் தேர்தெடுக்கப்பட்டான். ஜில் கானே என்ற ஓவியர் வால்வரினின் முகமூடியை மிகப்பெரிய முகப்புகளுடன் தலைப்புப் பக்கத்தில் தவறாக எழுதிவிட்டார். தவே காக்ரும், கேனின் இந்த தவறுதலான தோற்றத்தை (வௌவால் மனிதனின் தோற்றத்துக்கு ஒப்பானது என்று எண்ணிக் கொண்டு விரும்பி) தன்னுடைய சொந்த ஓவியங்களிலும், கதைகளிலும் இந்த மாற்றத்தைப் புகுத்தினார். வால்வரினை முகமூடி இல்லாத உருவத்தை வரைந்து காட்டுவதில் காக்ரும் முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்த சிறப்பான தலைமுடி ஒப்பனை, இந்த கதாபாத்திரத்தின் வியாபாரக் குறியீடாக மாறியது.
காக்ரும், கிரிஸ் க்ளேர்மாண்டும் இணைந்து மேற்கொண்ட வெளியீட்டின் மூலம் (1975 ஆண்டு ஆகஸ்ட் மாதம்) முதல், X-மென் #94 என்ற வெளியீட்டின் மூலமாக, X-மென் னின் கதைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. X-மெனின் , அன்கேனி X-மெனின் வெளியீடுகளில், சைக்ளோப்சின் காதலி ஜீன்கிரேனின் காதல் பார்வை வால்வரின் மீது படவே, பிற கதாபாதிரங்களினால் சற்று ஓரம் கட்டப்பட்டு, அதனால் படைப்பு ஆசிரியர்களிடையே சற்று கருத்து வேறுபாடுகளும் தோன்றியது. இந்தத் தொடர் மேலும் தொடர்ந்து முன்னேறும் சமயத்தில், வால்வரினை இத்தொடரிலிருந்தே முழுமையாகக் கைவிட்டுவிடலாம் என்றும், அதற்குப் பதில் நைட் கிராவ்லர் என்ற பாத்திரத்தைச் சேர்த்துவிடவும் முயற்சித்தனர். ஆனால் காக்ருனுக்குப் பிறகு காக்ரமனுக்குப் பின் வந்த கனடா நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜான் பைரன் தனது நாட்டு கதாபாத்திரமான வால்வரினை இழக்க விரும்பவில்லை. பைரன் ஆல்பா ப்ளைட் என்ற புதியதொரு கனடா நாட்டைச் சேர்ந்த சூப்பர் ஹீரோ குழுக்களை உருவாக்கி வால்வரினைப் பயிற்றுவித்து செலவை ஈடுகட்ட முயற்சித்தார். பின்னர் வந்த கதைகள் வால்வரினின் இருண்டகால, முற்காலம் ஸ்தரமற்ற தன்மை ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டின. இதன் மூலம் வால்வரின் தனது புகழை நிலைநாட்ட அதிகம் போராட வேண்டியதாயிற்று. காக்ரும் உருவாக்கிய அணிகலனை நிலைநாட்டினாலும், பைரன் புதியதொரு பழுப்பு நிற ஆடை அணிகலன்களை வால்வரினுக்காக தயாரித்தார்.
பைரனின் வெளியேற்றத்தால், வால்வரின் தொடர்ந்து x-மென் கதைகளில் நீடித்தார். இந்தக் கதப்பாத்திரத்தின் புகழ் பரவிய காரணத்தால் (1982 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்- டிசம்பர் வரை) வால்வரின் என்ற நான்கு பாகம் கொண்ட தனி பதிப்பு வெளியானது. கிளேர்மான்ட்டும், அல் மில்க்றோம், பிராங்க் மில்லரும் (1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் – 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை) கிட்டி பிரைட் மற்றும் வால்வரின் 6 தொடர் வெளியீட்டையும் தந்தார்கள். மார்வல் என்பவரோ, ஜான் புசிமாவின் ஓவியத்தில், கிளேர்மான்ட்டின் எழுத்தில், ஒரு தனி இதழையே 1988-ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிட்டார். இத்துடன் 189 பதிப்புகளாக வந்து வெற்றி கண்டது. லாரி ஹமா என்பவர் தொடர்ந்து இந்த இதழை எடுத்து நீண்ட நாள் நடத்தினார். பிறகு மார்க் மில்லர், கிரெக் ரூக்கா, ப்ராங்க் டியரி, எரிக் லார்சன், ஆர்ச்சிகுட்வின், பீட்டர் டேவிட் என்பவர்கள் வால்வரினின் இரண்டு தொடர்களுக்கு எழுத்தாளரானார்கள். மிகப் பிரசித்தி பெற்ற ஓவியர்களான, ஜான் பைரன், மார்க் சில்வெஸ்டரி, மார்க் டெக்ஸ்சீரா, ஆடம் கூபர்ட், லெனின் பிரான்சிஸ் யூ, ராப் லிபீல்ட், சீன் சென், டாரிக் ராபட்சென், ஜான் ரோமிட்டோ ஜூனியர் மற்றும் ஹம்பெர்ட்டோ ராமோஸ் ஆகியோர் இந்த வெளியீடுகளில் உழைத்தார்கள். x-மென்னின் #25 என்ற பதிப்புகளில் 1990-ஆம் ஆண்டில் வால்வரின் கதாப்பாத்திரமானது, எலும்பில் உள்ள அடமாண்டியம் என்பது மக்னேடோ என்ற கருப்பு வைரம் போன்ற வஸ்துகளின் உதவியால், வெளியே எடுக்கப்பட்ட பின்பும், எலும்பு நகங்கள் உள்ளது போல் சித்தரிக்கப்படவே, இதுவும் பீட்டர் டேவிட் போன்றவரின் நகைச்சுவையின் தாக்கம் தான் என்று அறியப்பட்டது.
வால்வரின் தொடர்களும், x-மென் தொடர்களிலும் தொடர்ந்து பிரசுரமான வால்வரின் கதாப்பாத்திரம், மேலும் இரண்டு தொடர் கதைகளிலும் தமது பழங்காலத்தை பற்றி பறைசாற்றிக் கொண்டிருந்தது. பாரி விண்டசொர் ஸ்மித் என்ற ஓவியரின் வெப்பன்-x-லும் மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ச்சில் #72-84 (1991), வெளியீட்டிலும் தொடராக வெளிவந்தது தான் வால்வரின் என்பதுடன், ஜோ கெசடா, பால் ஜென்கின்ஸ், பில் ஜமாஸ், ஓவியர் ஆண்டி கூபார்ட் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட "ஆரிஜின்" என்ற 6 தொடர் இதழிலும் வால்வரின் வெளிவந்தது (2001-ஆம் ஆண்டு நவம்பர் முதல்-2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை). டேனியல் வே எழுதி ஸ்டீவ் தில்லான் ஓவியம் தீட்டி முழுமையான வால்வரின் 'ஆரிஜின்' என்ற இரண்டாவது தனித்தொடர் சுழன்று விற்றது மட்டுமல்லாமல், வால்வரினின் தொடரோடு தொடர் ஓட்டமிட்டது.
வால்வரின் செயல்பாட்டிற்கான முதல் தோற்றம்
தொகுதுணை தயாரிப்பாளர் லென் வெய்ன் ஆரம்பத்தில் லோகன் ஒரு மாறுப்பட்ட வளரும் தன்மைக் கொண்ட வால்வரின் குட்டியாகவே (அதாவது மாமிச பட்ஷிணியாக கருப்பு ரோமமும், வெள்ளை பட்டையான தோல் உருவமும் கொண்ட ஒரு மிருக இனம்) உருவகப்படுத்தியிருந்தாலும், பிற்காலத்தில் உயர்ந்த பரிணாம வளர்ச்சியில், இவன் ஒரு மனிதப் பண்பு மிக்க உயிர் பிராணியாக உருவெடுத்துவிட்டான்.
“ | While I readily admit that my original idea was for Wolvie's claws to extend from the backs of his gloves ... I absolutely did not ever intend to make Logan a mutated wolverine. I write stories about human beings, not evolved animals (with apologies for any story I may have written that involved the High Evolutionary). The mutated wolverine thing came about long after I was no longer involved with the book. I'm not certain if the idea was first suggested by Chris Claremont, the late, much-missed Dave Cockrum, or John Byrne when he came aboard as artist, but it most certainly did not start with me.[3] | ” |
ஸ்டான்லீ எழுதியுள்ள x-மென்னின் தோற்றம் பற்றிய கலந்துரையாடலில் வெய்னும் இதைப்பற்றிய கருத்தைக் கூறும்போது, வால்வரினின் கறைபடிந்த சிறப்பு அம்சங்களாகத் தாம் படித்த "வால்வரினைப் பற்றிய உமக்குத் தெரியாத பத்து விஷயங்கள்" என்பதில் வால்வரின் ஆரம்பத் தோற்றத்தில் மாமிச பட்ஷிணியாக உருமாறும் தன்மைக் கொண்ட மிருகமாக தான் உதித்ததாகும் என்ற கருத்துக்கள் வெய்னின் வால்வரினை அறியும் தாக்கத்தையும் தூண்டிவிட்டான். எனவே அவர் மீண்டும் "வால்வரின் ஒரு மாறுபட்ட தன்மை கொண்ட வளரும் உயிர் பிராணியாகவே என்றும் கருதப்பட்டது" என்று கூறினார்.
வால்வரினைப் பற்றிய உயிரியல் பகுப்பாய்வானது, 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான X-மென் #98 இதழில், இந்த வால்வரின், மற்ற X-மென்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் வித்தியாசமானவர் என்றும் X-மென் #103 என்ற பிரசுரத்தில், பிசாசுகளை நம்பவில்லை என்று வால்வரின் கூறவும், பிசாசுகளும் 'ஏளனமான வெட்டிப் பேச்சுக்களையும், வால்வரின்களையும் தாம் நம்புவதில்லை என்றும் பதிலளித்தார்.
தி இன்கிரிடிப்ளே ஹல்க் 180-181 என்பதின் மறுபதிப்பாக தி இன்க்கிரிடிபெல் ஹல்க் மற்றும் வால்வரின் என்று 1986-ஆம் ஆண்டு வந்த வெளியீட்டில் வால்வரினின் உயர்ந்த பரிணாம வளர்ச்சிப் பற்றிய ஒரு கட்டுரையில் வெளிப்படையான பரிணாம வளர்ச்சியில் வால்வரினை ஒரு மனித உருவமாக மாற்றிக் காட்டுவதற்கு முக்கியமான பங்கு இருப்பதை காக்ரும் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பறக்கும் ஸ்பைடர்மேன் போன்ற அசாதாரண சுறுசுறுப்புத் திறமையும், அசுரத்தனமான மனித ஆற்றலும் கொண்ட ஒரு இளைஞனின் வயதுத் தோற்றத்தில் வால்வரினைப் படைக்க வேண்டும் என்று எண்ணினார் எழுத்தாளர் வெய்ன். ஆனால் வால்வரினைப் பற்றி காக்ரும் தீட்டிய ஓவியமானது ஒரு 40 வயது முதிர்ந்த உரோமம் மிக்க முகமூடி இல்லாத வெய்னின் இந்த இளைஞன் என்ற எண்ணத்தை மாற்றியது. வால்வரினின் கையுறையும், நகங்களும் அடமான்டியம் கலந்த வலிமையுடையதாகவும், ஆனால் பின்னர் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் திறமையுடையதாகவும் இருக்க வேண்டுமென்று தான் வெய்ன் ஆரம்பத்தில் சிந்தித்து வடிமைத்தார். ஏப்ரலில் வெளியான x-மென் #98-ல், வால்வரினின் இன்றியமையாத உடற்கூருகலாகவே இந்த அம்சங்களை வெளிக்காட்டினார்.
வால்வரினின் இரண்டாம் தோற்றம்
தொகுஜான் பைரன் தனது இணையதளத்தில் பேட்டியளிக்கும்போது, வால்வரைனின் முகம் போன்ற ஒரு முகத்தை தாம் வரைந்துள்ளதாகவும், அதன் பிறகு, ஜான் ரோமிடோ சீனியர் என்பவர் ஒரு முகத்தை ஏற்கனவே வரைந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதாகவும் அந்த ஓவியமானது, பைரனின் தொடர்கள் ஓடுவதற்கு முன்பாகவே தவே காக்ரும் (1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்) x-மென் #98-ல் பயன்படுத்தபட்டுள்ளதென்றும் அறிந்த கொண்டதாகக் கூறியுள்ளார். பின்னாளில் பைரன் இந்த ஓவியத்தை சேபர்டூத் என்பவரின் முகத்துக்குப் பயன்படுத்தினார். மல்லுச் சண்டை யுத்தத்தில் சூப்பர் ஹீரோவான இரும்புக் கரத்தின் ஒரு எதிரியாவார். இலக்கியம் பற்றிய கதைகளைப் கிரிஸ் கிளேர்மான்ட் எழுதிக் கொண்டிருந்தார். இந்த சேபர்டூத் என்பவர்தான் வால்வரினின் தந்தையாக இருக்கும் என்று பைரன் கருதி இருந்தார். பைரனும், கிளேர்மான்ட்டும் இணைந்து உருவாக்கிய கற்பனையில் வால்வரின் சுமாராக 60 வயதானவனாகவும், இரண்டாம் உலகப் போரில் சண்டையிட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டான். அதாவது வால்வரினைப் பல ஆண்டுகளாக அவமதித்தவனும், சுமார் 120 வயது மதிக்கதக்கவனான சேபர்டூத்திடமிருந்து தப்பித்து வந்தவானாகவும் இவர்கள் கருதினார்கள். வால்வரின் கிட்டத்தட்ட ஒரு விபத்தில் சிக்கி நசுக்கி சாகடிக்கப்பட்டது போன்ற ஒரு திட்டம், உருவாக்கப்பட்டு நசுங்கிய விபத்தில் இருந்து தப்பி பிழைத்து மீளும் போது முதன் முறையாக எழுந்து நிற்க முயற்சிக்கையில் தமது நோயைக் குணமாக்கும் வல்லமை சக்தியை தமது எலும்புகளின் செயல்பாட்டால் கண்டறிந்தான். தமது கால்கள் உடனடியாக நொறுங்கிப்போனதையும் கண்டறிந்தான் இதன் பிறகு பல ஆண்டுகளுக்கும் மேலாக வால்வரின் ஒரு மருத்துவமனை படுக்கையிலேயே கிட்டத்தட்ட பித்துப்பிடித்து, மதிகெட்ட நிலையில் காலத்தை ஓட்டினான். அப்போது கனடா நாட்டு அரசு வால்வரினை அணுகி, இவனது எலும்புக் கூட்டை 'ஒரு சமயத்தில் ஒரு எலும்பு' என்ற கணக்கில் அடமான்டியம் என்ற உலோகத்தைச் செலுத்தி, மீண்டும் பலவானாக்க உத்தேசிப்பதாகக் கூறியது. ஆனால் நகங்களைப் பற்றிய அதிரகசியம் எதுவும் பேசப்படவில்லை. எனினும் இந்த முன் முயற்சியும் செயல்படுத்தப்படவில்லை.
ஒரு கற்பனை உருவப்படம்
தொகு2001-2002-ஆம் ஆண்டு ஆரிஜின் என்ற குறுநாவல் தொடரில், வால்வரின் என்பவன் ஜேம்ஸ் ஹவ்லெட் என்பவராக 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலான (அல்பேர்ட்டா) கனடாவில் பெரும் பணக்காரப் பண்ணைக்குச் சொந்தக்காரர்களுக்குப் பிறந்தான் என்றுக் காட்டப்பட்டுள்ளது.
வடக்கு பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள சுரங்கப் பிராந்தியத்தில் 'லோகன்' என்ற பெயரில் மனித உருவம் எடுத்து, இந்தப் பாத்திரம் வளர்ந்து வந்தது. கருப்புக்கால் இந்தியர்களுடன் தங்கி, நாகரீக வாழ்வு பெரும் வரையிலும், லோகன், இந்த சுரங்க பிராந்தியத்திலிருந்து புறப்பட்டு காடுகளில் ஓநாய் கூட்டங்களுடன் வாழ்ந்து வந்தான். பிறகு சில்வர் பாக்ஸ் என்ற தமது கருப்புக்கால் இந்தியக் கள்ளக் காதலியின் மரணத்திற்குப் பிறகு லோகன் கனடாவின் ராணுவ முகாமில் கலந்துவிட்டான். பின்னர் மட்ரிபூரில் சிலகாலம் கழிந்தபின், ஜப்பானில் நிரந்தரமாகக் குடியேறி, இட்சுவை மணந்து டாகென் என்ற மகனைப் பெற்றெடுத்து வாழலானான்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் டீவெல்ஸ் பிரிகேடில் சேர்ந்து, கேப்டன் அமெரிக்காவின் தலைமை அணியுடன் இணைந்து, புரட்சிகரமான அதிஷ்டசாலியான ராணுவ வீரனாக வாழ்ந்து வரலானான். அடுத்தடுத்து கனடாவின் முதலாம் பாரசூட் பட்டாலியனின் புகழ் காலத்திலும், டி-டே(D-Day) மற்றும் சிஐஏ என்ற உளவு நிறுவனத்திலும் பணியாற்றியபின், டீம் x என்ற ஒரு புரட்சி எதிரணியில் வேலைக்குச் சேர்ந்தான்.
டீம் X என்ற அணியின் உறுப்பினர் என்ற முறையில் லோகனுக்கு தவறான ஞாபக சக்திகளின் பதிவுகள் ஊட்டப்பட்டன. இந்த மூளையை குழப்பும் கட்டுப்பாட்டில் இருந்து விடுப்படும்வரை லோகன், டீம் X அணியில் தொடர்ந்து சேவை செய்த லோகன், பின்னர் கனடா நாட்டு அமைச்சகத்தில் பணியேற்றான். லோகன் மீண்டும் வெப்பன் x ப்ரோக்ராம் என்பவர்களால் கடத்தப்பட்டு, பிணைக்கைதியாக பரீட்சித்துப்பார்க்கும் உயிராகத் தொடர்ந்தான். பின் அங்கிருந்து தப்பித்துவிட்டான் என்பதை பேரி வின்ட்சர் ஸ்மித்தின் வெப்பன் x என்ற தொடர் கதைகள், மார்வெல் காமிக்ஸ் ப்ரசென்ட்-ல் படம்பிடித்துக் காட்டினார்கள். வெப்பன் X கூட்டத்தினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோதுதான், உடைக்க முடியாத அடமான்டியம் என்ற உலோகம், லோகனின் எலும்பு மண்டலத்திற்குள் புகுத்தித் திணிக்கப்பட்டது.
ஜேம்ஸ் மற்றும் ஹீதர் ஹட்சன் ஆகியோரால் ஒரு வழியாக லோகன் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் சுய ரூபமான மானிடத் தன்மையைப் பெற்றான். இதன்பின், கனடா அரசின் உளவுத்துறையில், H-துறையின் கண்காணிப்பில் மீண்டும் லோகன் பணியை தொடர்ந்தான். இச்சமயத்தில் தான் கனடா நாட்டின் மிகப் பெரிய புரட்சி வீரனாக லோகன் என்பவன் வால்வரின் என்பவனாக உயிர் பெற்றான். ஹல்க் மற்றும் வெண்டிகோ என்பவர்களுக்கு இடையேயான உட்பூசலினால் ஏற்பட்ட அழிவுகளை நிறுத்துவதே வால்வரினுக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலையாகும்.
கனடா அரசின் உளவுத்துறை வேலையால் மனசஞ்சலம் அடைந்த லோகன் என்ற வால்வரினை, சார்லஸ் சேவியர் என்ற பேராசிரியரின் ரகசியத் திட்டம் கவர்ந்தது. லோகன் H-துறையிலிருந்து ராஜினாமா செய்து, வெளியேறி புதியதாக அமைக்கப்பட்ட x-மென்னில் சார்லஸ் சேவியரால் வால்வரின் என்று பணியில் அமர்த்தப்பட்டான். எனினும், இந்த பேரரசிரியர் சேவியரைக் கொல்வதற்காக, வால்வரின் அனுப்பப்பட்டபோதுதான் லோகனின் ஞாபக சக்திகளை அழித்துவிட்டு, லோகனை x-மென் அணியில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கத் திட்டமிட்டவர் இந்த பேராசிரியர் x-தான் என்ற ரகசிய உண்மை தெரிய வந்தது.
1993-ஆம் ஆண்டில் X-மென் கதைத் தொடரில் "பேட்டால் அட்ராக்சன்ஸ்" என்ற மயிர் கூச்செறியும் சந்திப்பு முடியும் தருவாயில் மேக்னட்டோ என்ற சூப்பர் வில்லன், வால்வரினின் எலும்பு மண்டலத்திலிருந்து, வலுக்கட்டாயமாக அடமான்டியத்தை எடுத்து விடுவதாக காட்டப்பட்டது. இந்தக் கொடுமையான சித்ரவதைதான், வால்வரினின் குணமாக்கும் சக்தி அடியோடு எரிந்து போவதற்கும் வால்வரினின் நகங்கள் உண்மையிலேயே எலும்புதான் என்றும் கண்டறிய உதவியது. எலும்புக் கூட்டிலிருந்த அடமான்டியம்தான் வால்வரின் குணமாகும் சக்தியை சுரண்டி வந்ததால், இப்போது அடமான்டியம் வெளியேறிவிட்டதால் வால்வரினின் சுயமாக குணமாகும் சக்தி, அதிக வேகத்துடனும், திறமையுடனும் புதுபிக்கத் தொடங்கியது. இந்த சமயத்தில் வால்வரின் X-மென்னை விட்டு தற்காலிகமாக வெளியேறினார். மீண்டும் X-மென்னிடம், சேர்ந்தபொழுது, கேபுளின் மகனான ஜெனசிஸ் என்பவன், வால்வரினைக் கடத்திச் சென்று மீண்டும் அவன் எலும்பு மண்டலத்தில் அடமான்டியத்தை ஒட்ட வைக்க முயற்சித்தான். இம்முயற்சி தோல்வியடைந்ததோடு, வால்வரினின் உருமாறிய வளர்ச்சி கட்டுக்கடங்காமல் வேகமானது. இதன் காரணமாக வால்வரினின் மனிதத் தன்மையை சற்று இழந்து அரைகுறை புலன் உணர்ச்சிக் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ஒரு காட்டு மிருகமாக தற்காலிகமாக மாறினான். இந்நிலையில், அபோகலிப்ஸ் என்ற வில்லன் வால்வரினை பிடித்து மூளைச்சலவை செய்து "ஹர்ஸ்மான் டெத்" என்று உருவெடுக்கச் செய்து வெற்றிகரமாக அடமான்டியத்தை மீண்டும் எலும்பு மண்டலத்தில் ஒட்டிவைத்து விட்டான். ஆனாலும், அபோகலிப்ஸ்-ன் திட்டங்களை முறியடித்து, வால்வரின் மீண்டும் X-மென்னிடம் திரும்பினான்.
பிரைன் மைக்கேல் பென்டிஸ் என்ற எழுத்தாளர் 2005-ஆம் ஆண்டில் வால்வரின் அவென்ஜெர்ஸ் அணியில் சேர்வதாகச் சித்தரித்தார். ஹவுஸ் ஆப் M என்ற குறுந்தொடருக்குப் பிறகு, வால்வரின் மீண்டும் தன ஞாபக சக்தியைப் பெற்றான். தனக்கு கொடுமையும், தீங்கும் செய்தவர்களை பழிவாங்கும் தேடுதல் வேட்டையில் இறங்கினான். வால்வரினை மூளைச்சலவை செய்த ரோமுலஸ் என்ற வில்லன்தான் வால்வரினின் மகனான டெகன் என்பவனையும் மூளைச்சலவை செய்து, ஒரு வாழும் அடிமையாக மாற்றியதையும், வால்வரின் கண்டுபிடித்ததாக "வால்வரினின் தோற்றங்கள்" என்ற இரண்டாவது தனிதொடர்கள் தெரிவிக்கின்றன. இனிமேலும் ரோமுலஸ் வேறு யாரையும் இவ்வாறு உருமாற்றம் செய்யாமலும், தொந்தரவு செய்யாமலும் இருக்க வேண்டும் என்று வால்வரின் விரும்பினான். தன் மகன் டெகனைக் காப்பாற்ற வால்வரின் ஒரு பிரத்தியேக முயற்சிப் பயணத்தைத் துவங்கினான்.
மெஸையா காம்ப்ளக்ஸ் என்ற கதைகளின் ஓட்டத்தினூடே, சைகோப்லஸ் என்ற ஆசிரியர், x-அணியை புனரமைக்கும் பணியை வால்வரினுக்குக் கொடுக்கிறார். இது முதலாக வார்பாத் மற்றும் வோல்சபானும், அடங்கிய ஒரு புதிய மாதந்திர வெளியீட்டைத் துவங்கிட x-23 என்ற ஆரம்ப அணியினரோடு வால்வரின் இணைந்து கொண்டான். "மெஸையா காமப்ளக்ஸ்-ன்" தொடர்ச்சியாக மெஸையா வார் என்ற கதைத் தொடரில் இந்த x கூட்டாளி தற்சமயம் மிளிர்கிறது.
வால்வரின் #66 என்று அறிமுகம் செய்த அதே மார்க் மில்லர் ஆசிரியரும், ஸ்டீவ் மிச்நிவேன் ஓவியரும் இணைந்து 2008-ஆம் ஆண்டில், 'ஓல்ட் மேன் லோகன்' என்ற தலைப்பில் எட்டு பதிப்புகள் அடங்கிய தொடரில், வால்வரினுக்கு, ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க முயற்சித்தார். இக்கதாசிரியர் மில்லர் என்பவர் "வால்வரினின் அவசியமான பழைய இருண்ட காலம் இப்போது வந்துவிட்டது. கடந்த 40 ஆண்டு காலமாக இந்த உன்னதமான அண்டங்களின் ஆரம்பத் தத்துவங்களை மறுத்தும், புரட்டியும் பேசிவந்த மார்வல் என்ற மிகப் பிரசித்திப் பெற்று, பெரிய திரைகளின், மிகப் பெரிய சாதனை ஓட்டங்களையும் நிறுத்தி சாதித்த கதாப்பாத்திரம் மீண்டும் அதன் எதிர்காலத்தை எட்டிப்பார்க்கும் ஒரு புது முயற்சி என்று கூறுகிறார்.
ஹீரோக்கள் மறைந்துவிட்டார்கள், வில்லன்கள் வெற்றி பெற்றார்கள், மார்வல் என்று நாம் அறிந்த அதிசயங்களிலிருந்து இரண்டு தலைமுறைத் தூரத்துக்கு வந்துவிட்டோம் என்று ஆசிரியர் மில்லர் குறிப்பிடுகிறார்.
சக்திகளும், திறமைகளும்
தொகுவால்வரின் தனது உடற்கூறு அமைப்பாற்றலால் இயற்கையாகவும், செயற்கை திறன்கள் கலந்த, ஒரு கலவை இனமாக மாறியிருந்தான். அவனது பிரதான வல்லமையானது, கூடுதலாகி விரைந்து குணமாகும் சக்தியாகும். ஒரு சாதாரண மனிதனுக்கு சிதைந்த திசுக்களை உருவாக்கும் திறன், உபாதையை வெற்றி கொள்ளும் திறன் எவ்வளவு உண்டோ, அதற்கு மிக மிக அதிகமான இந்த குணமாதல் சக்திதான் இந்த வால்வரினின் உருமாறும் வளர்ச்சியின் மிகக் குறிப்பிட்ட குணாதிசயமாக வர்ணிக்கப்பட்டது. இந்த விஷேச குணம்தான் வெப்பன் x-கூட்டத்தினரிடம் பிடிபட்டிருந்தபோது, இவனது எலும்பு மண்டலத்தில், என்றும் அழியாத அடமான்டியம் உலோகத்தை ஓட்ட உதவி செய்ததுடன், செயற்கையான புறத்தோற்றத்தை உருவாக்கவும் உதவியது.
வால்வரினுக்கு எவ்வளவு பெரிய காயங்கள், புண்கள் என்னென்ன வேகத்தில் இவை குணமாகும் என்பதெல்லாம் மாறுபாடுடையது. சிறு காயங்கள் வேகமாக குணமாகின்றன என்று தான் ஆரம்பக் கட்டத்தில் பேசி வந்தார்கள். பிற்காலத்தில் வந்த எழுத்தாளர்கள் இந்த வேகத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் கொடுமையான காயங்களும் கூட சில மணி நேரங்களில், சில நாட்களில் குணமாகிவிடும் விந்தையான குணமாகும் சக்தி வால்வரினுடையது என்று சித்தரிக்கப்பட்டது. வேறு சில கதாசிரியர்களோ, சிதைந்த திசுக்கள் எல்லாம் சில நொடிப்பொழுதில் இணைந்து குணமாகும் அளவிற்கு வால்வரினின் குணமாகும் சக்தி அபாரமானது என்று எழுதினார்கள். பூத உடல் எரித்துச் சாம்பலாக்கப்பட்டபின், ஒரு சில மணித்துளிகளில், சதையுடன் கூடிய முழு உடம்பும் உயிர்த்தெழுகிறதென்றும் அணு ஆயுத வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அகப்பட்டு புண்பட்டு சிதைந்த பிறகும், மிக விரைவில் பூரண குணத்துடன் மீண்டு வருகிறான் என்றும், வால்வரினின் குணமாகும் அதிசயத் திறனைப் பற்றி மிகைப்படுத்தி எழுதியவர்களும் உண்டு. பேராசிரியர் சேவியர் கணித்துள்ள அறிவியல் வடிவமைப்பில் x-மென்னின் வலிமை பற்றிய குறைபாடுகள் பல பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் வால்வரினின் குணமாகும் சக்தி நம்பமுடியாத உயர்ந்த நிலைக்கு உயர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வால்வரினின் இந்த சக்தியை நிறுத்தி வைப்பதற்கு, அவனின் தலையை துண்டித்து, பூத உடலுக்கு சற்றுத் தொலைவில் வீசிவிடுவது ஒன்றே வழி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குணமாகும் சக்தியின் திறனைக் குறைத்து ஓடுக்குவதும் சாத்தியமே என்றும் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக கார்பனேடியம் என்று ஒருவகை கருப்பு வைரக்கல் கலந்த ஒரு வஸ்துவை இவன் உடலுக்குள் புகுத்தி, நிறுத்தி வைத்துவிட்டால், இந்த குணமாகும் ஆற்றலின் வேகம் குறைந்துவிடும், ஆனால் மாயாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முரமாசா பிளேடு என்ற ஆன்மீகப் புனிதப் புதிரான ஒருப் பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், புதிய புண்களையும், வடுக்களையும் ஏற்படுத்தி, இந்த சூப்பர் மனிதனின் குணமாகும் ஆற்றலை இல்லாமல் செய்துவிடலாம் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த குணமாக்கும் ஆற்றலானது, வால்வரினின் மூப்பை, அதிரடியாகக் குறைத்து விடுகிறது. 1800-ஆம் ஆண்டுகளில் பிறந்திருந்தாலும், மஸ்தான உடற்கட்டும், உறுதியான தோற்றமும் கொண்ட இளம் வாலிபன் போல் வால்வரின் காணப்பட்டான். மாறாத துயரங்களை அனுபவித்த ஞாபகத்தை எல்லாம் மறக்கடிக்கச் செய்து, அளவுக்கதிகமான மன உளைச்சலில் இருந்து மீண்ட வரும் அளவிற்கு இந்த குணமாகும் சக்தி இவனுக்கு புதிய வல்லமையை கொடுத்துள்ளது. அதோடு எல்ல நிகழ்வுகளையும் நினைவில் வைத்துக் கொள்ளும் நினைவாற்றலும் தற்சமயம் இவனுக்குக் கிட்டியுள்ளது. உடல் உபாதைகளிலிருந்து விரைந்து குணமாகி வருவதுடன், நோய், நொடி, விஷம், மருந்துகள் இவற்றை எதிர்க்கும் சக்தியும், அசாத்தியமான அளவிற்கு வால்வரினுக்கு வழங்கி உள்ளதும் இந்த குணமாக்கும் ஆற்றலே. ஆயினும், இவன் இன்னும் இதுபோன்ற பொருள்கள், நிகழ்வுகளின் தொல்லைக்கு ஆட்படுகிறான். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்கஹால்-மது சாப்பிட்டால், மதுவின் போதைக்கு அடிமையாவதும், மருந்து, விஷப் பொருள்களிலும் பல சமயங்களிலும் நிலை தடுமாறியதும் உண்டு.
குணமாகும் ஆற்றல் இருந்தபோதிலும், அடிப்பட்ட புண்ணினால் ஏற்படும் வலி, உபாதைகளை இந்த ஆற்றல் தடுத்து நிறுத்துவதில்லை. உபாதைகளை இவன் அனுபவித்தே ஆகவேண்டிய நிலை இருந்தது. அடியும், வடுவும் விரும்பி ஏற்க பிரியப்படவில்லை என்றாலும் சில சமயங்களில், இவனே எதிர்கொண்டு அதிகமான வலி தரும் செயல்களைச் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது. பிணைப்பிலிருந்து விடுபடுவதற்காகவோ, பயத்தின் காரணமாகவோ, சதிதிட்டமாகவோ அல்லது உயிரைப் பணயம் வைக்கும் செயலாகவோ வேறு பல காரணங்களுக்காகவோ, வால்வரின் பல சமயங்களில் தன்னைத்தானே புண்படுத்திக் கொண்டோ, அல்லது புண்படுத்தப்படுவதற்கு மனமுவந்து இணங்கியோ நடந்ததும் உண்டு.
வால்வரினின் உருமாற்றும் தன்மையானது, விலங்கு போன்ற குணாதிசயங்களைக் கொண்டதாகவும், அற்பமான, ஓநாய், நாய் போன்ற பல்வரிசைகளையும், ஒவ்வொரு முன் வரிசையிலும் உள்ளுக்கு இழுத்துக் கொள்ளும் மூன்று நகங்களும் உடைய உருவத்தைத் தந்தது. வெப்பன் x நிகழ்ச்சிகளில் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டபோது இதன் உருவம், மனிதனும், விலங்கும் இணைந்த செயல்திறன் மிக்கவனாய் காட்டப்பட்டது. அப்போது இந்த நகங்கள் இவனது உடலின் இயற்கையான அவையம்-கூறு என்று பின் வெளிக்காட்டப்பட்டது. விலங்கினங்களில் உள்ளபடி கெரட்டினால் உருவானவை அல்ல. இந்த நகங்கள், மாறாக மிக அழுத்தமான எலும்பால் ஆனவையாகவும், பலவகை கற்கள், மரம், பிற உலோகங்களையும் அறுத்து முறிக்கும் ஆற்றல் பெற்ற நகங்களாக இவை இருந்தன. இந்த நகங்களின் உதவியால், வால்வரின் உயரத்தில் ஏறுவதற்குத் தேவையான பிடிமானப் பள்ளங்களை தோண்டுவதற்கும், ஏவுகனைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் கூடிய திறமையுடையவை. நகங்கள் பக்கவாட்டில் நகர்வதற்கு ஏதுவாக வால்வரினின் கைகளில் துளைகள் கிடையாது. எனினும், நகங்களை வெளிக்கொணர்ந்து நீட்டும் போதெல்லாம், வால்வரினின் தசைகள் அறுபட்டு, அந்நேரங்களில் ரணமான அதே வலியை உணர்ந்து கொண்டுள்ளான்.
வால்வரினின் நகங்கள் உள் அடங்கிய முழு எலும்புக்கூடும், அணுவின் மூலகூறுகளால் அடமான்டியத்துடன் உருக்கி ஒட்டப்பட்டுள்ளது. அந்த மேல் பூச்சின் காரணமாக, இவனது நகங்கள் கிட்டத்தட்ட எல்லாக் கடினமான திடப்போர்களையும் முறிக்கும் திறன் கொண்டவை. ஆனால் அடமான்டியம் என்ற உலோகத்தையும், கேப்டன் அமெரிக்காவின் கேடையத்தையும் மட்டுமே, முறிக்க இயலாது. ஏனென்றால், இந்த மார்வெல் யுனிவெர்ஸ் என்ற அற்புத அண்டங்களில் இந்த ஒரு கேடயம் மட்டும் தான், அடமான்டியத்தை விடவும் வலிவுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வால்வரினின் கத்திபோல் அறுத்து உட்புகும் திறமையானது, இவனது வேகம், சக்தி மற்றும் வெட்டப்படும் திடப்போருளின் கணம் இவற்றைப் பொறுத்ததே ஆகும். இவனது அதிரடியான போர்வீச்சுக்கு மேலும் வலிமையூட்டுவது இந்த அடமன்டியத்தின் கணமே. இருந்தபோதிலும், காந்த சக்தி கலந்த பொருளுடன் போரிடும்போது, வால்வரினின் ஆற்றல் மிக அதிகமாக சோதிக்கப்படுவதும் உண்டு.
வால்வரினின் குணமாகும் ஆற்றல், இவனுடைய உடல், உருவம் மற்றும் தோற்றத்தின் அமைப்புகளில் பலவாறான மாற்றத்தைத் தந்துள்ளது. மிகச் சக்தி வாய்ந்த மயக்க மருந்துகளை உட்கொண்ட பிறகும் கூட தொடர்ந்து பலமணி நேரத்திற்குப் போரிடும் அளவிற்கு இவனது எதிர்க்கும் தன்மை, நெஞ்சுரம் கூடியுள்ளது. மிகச் சிறந்த மானிட மல்யுத்த வீரனின் உடல்வாகு திறமையையும் மீறிய ஆற்றலும், புலனுணர்வும் வால்வரின் கொண்டிருந்தான். சாதாரண மனிதனின் உடலிலுள்ள தசைகளின் நீளும் சக்தியை விட பல மடங்கு அதிகமாக நீட்ட உதவுவது, வால்வரினின் குணமாகும் சக்தியின் தொடந்த மறுபிறப்புச் சிறப்புத் தன்மையாகும். வால்வரினின் உடம்பில் ஒரு நூறு பவுண்டுக்கும் அதிகமான அடமான்டியம் இணைந்துள்ளதால், இவனது தசைகளுக்குத் தொடர்ந்து வேலைப்பளு வந்து கொண்டே இருக்கும் என்பதாலும், சூப்பர் மனிதனின் அசாத்திய வலிமை இவனிடம் தொடர்ந்து காணப்படும். சாதரணமாக ஒரு மனிதன், பளு தூக்கினால் நொறுங்கிவிடும் எலும்புக்கூடு போலல்லாமல், வால்வரினின் எலும்பில் அடமான்டியம் இசைந்துள்ளதால், அவற்றின் இயல்பான வடிவுத் திறனை நீக்கி, அதிக சக்தியைத் தருகிறது. இரும்பு சங்கிலிகளைத் தகர்த்து வீசுவது போலவும், பல மனிதர்களைத் தம் ஒரே கையால் தலைக்குமேல் தூக்குவதும், அவர்களை சுவர்களைப் பிளந்து எரிவதுமாகப் பலவாறு இவன் சித்தரிக்கப்பட்டுள்ளான். மேலும் உர்சா மேஜர் என்ற ராட்சசக் கரடியை அசாதியமாகத் தலைமேல் தூக்கி அறைக்குக் குறுக்கே விசிறியடிப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
வால்வரினின் பார்க்கும் திறமை, கேட்கும் திறமை, நுகரும் திறமை இவை எல்லாம் சூப்பர் மனிதனின் ஆற்றலைவிட மிகக் கூர்மையானவை. ஆழ்ந்த இருட்டிலும், நீண்ட தூரத்திலும்கூட சாதாரண மனிதனை விடவும் துல்லியமாகவும், தெளிவாகவும் வால்வரினால் பார்க்க முடிந்தது. சாதாரண மனிதன் செவிமடுக்கும் தூரத்தை விடவும், அதிக தூரத்திலும் குறைந்த நுட்பமான ஒலிகளை இவன் காதுகள் உணர்ந்தன. வால்வரினின் நுகரும் சக்தியோ, மிகவும் அபாரமானது. இயற்கைக் காரணிகளால், வலுவிழந்த, செயலிழந்த, மணம், வாசனைகளையும் மணத்தைக் நுகர்ந்து பார்த்தல் மட்டுமே எதிரிகளைக் குறிப்பிட்டு இழுக்கும் சக்தியும் ஒருங்கிணைந்தது நுகரும் திறமை. இந்த அபரிமிதமான நுகரும் சக்தியால் மாயாவி போல உடல் உருவம் மாற்றம் பெறும் ஜீவன்களையும் வால்வரினில் கண்டுகொள்ளமுடிந்தது. ஒருவன் பொய்கூறும் சமயத்தில் வெளிப்படும் நறுமண வாசத்தையும், வலுவற்ற இதயத் துடிப்பையும், தமது கேட்கும், நுகரும் சக்தியால் பொய்கூறுவதைக் கண்டறிந்து பிரயோகிக்கமுடிந்தது.
பேராசிரியர் சார்லஸ் சேவியர் என்பவரால், மிக அதிக சக்தி வாய்ந்த புலனுக்குப் புரியாத இயற்கை சக்திகள், வால்வரினின் மனதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டதால், வால்வரினின் மனம், இந்த ஸ்பரிச உணர்வு இயற்கை சக்திகளின் உந்து சக்தி ஆகியவற்றிற்கும் எதிர்பார்ப்புத் தன்மையைப் பெற்றிருந்தது. வால்வரினின் வாழ்வில் நிகழ்ந்த பல துயரமான விபத்தான சம்பவங்களால் வால்வரினின் மனதுக்குள் மனவடுத் திசுக்கள் உருவாகி இருப்பதாக அவன் நம்புகிறான். இந்த மனவடுத் திசுக்கலானது, ஒரு தடுப்பணையாக, அதுவும் அதிக மனோதத்துவ சக்தி வாய்ந்த எம்மா ப்ரோஸ்ட் போன்றதற்கும் எதிர்ப்பாகச் செயல்படுவதாக எண்ணினான்.
திறமைகளும், தனிமனித ஆளுமையும்
தொகுபூமியில் உள்ள அநேகமாக எல்லாவித மல்யுத்த முறைகளில் சுய அனுபவமும், தேர்ச்சியும் பெற்றதோடு, பல வித்யாசமான போர் முறைகளிலும், நிபுணத்துவம் பெற்றவனாக, ஜப்பான் மற்றும் பிற நாடுகளில் கடந்த காலகட்டங்களில் வால்வரின் தன்னிகரில்லா வீரனாக திகழ்ந்தான். கத்திமுனை ஆயுதங்களில் சுமாராக இருந்தாலும், துப்பாக்கி மற்றும் இதர ஆயுதங்களை உபயோகிப்பதில் திறமை மிக்கவனாகக் கருதப்பட்டான். கேப்டன் அமெரிக்கா, சேங்சி போன்ற மாவீரர்களை ஒரே நேரடி மோதல்களில் வெற்றிக் கொள்ளும் அளவிற்குத் திறமையை நிரூபித்துக் காட்டினான். மேலும் மனித உடலில் உள்ள நாடிகளையும், முடிச்சிகளையும் பற்றிய தெளிந்த அறிவும் பெற்றிருந்தான். வேவு பார்க்கும் உளவுத் துறையிலும், மாறு வேடத்தில் சென்று சாதனை புரிவதிலும், அளவறிந்த திறமை கொண்டதோடு ஒரு விமான ஓட்டியாகவும் பிரகாசித்தார்.
மிக நெருக்கமான மோதலின்போது, வால்வரின் திடீரென்று கட்டுக்கடங்காத புரட்சிக்காரனாக மாறிவிடுவான். அந்த மனநிலையில், இவன் முரட்டுதனமான மிருகமாகவோ, மானிட மிருகத் தூண்டுதலாலான ஆபத்துக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டவனாக மாறிவிடுவான். இது போன்ற நடவடிக்கைகள் பலமுறை இவரது உயிரை காப்பற்றி உள்ளது. ஒரு சாதாரண சாந்தமான வாழ்க்கை முறையிலும்கூட பிறரைச் சாகடிப்பதிலோ, புரட்சிகமாக மிரண்டுவிடுவதிலோ இவனுக்கு ஆனந்தம் கிடையாது. தன்னுடைய சொந்த மதிப்பு, கௌரவத்திற்காக லோகன் உறுதியை கடைப்பிடித்தான்.
முரட்டுக் குணத்திற்கு நேர் எதிர்மாறாக வால்வரின் அதிகப் புத்திசாலியாக இருக்கிறான். நீண்ட ஆண்டுகளாக, உலகின் பல தேசங்களில் பயணித்தும், பல அந்நிய மொழிகளையும், நாகரீகங்களையும் சம்பாதித்திருக்கிறான். லகோடா, அரபிக், ஸ்பானிஷ், சைனீஸ், ரஷ்யன், ஜப்பானீஸ், சேயீன் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பேசும் வல்லமை படைத்தவனாகவும் இருந்தான். பிரெஞ்சு, தாய், வியத்னாமீஸ், ஜெர்மன், லத்தின், போர்ச்சுக்கீஸ், கொரியன், ஹிந்தி மொழியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தான்.
வால்வரினின் அத்தியாவசியத் திறமையை எச்சரிக்கை முறை பயிற்சி முகாமில் எடைப்போட்ட போர்ஜ் என்பவர், லோகனின் மூலத்திறனையும், தேகவலிமையையும் கண்டு வியந்து, இவன், ஒரே சமயத்தில் நான்கு சதுரங்க வீரர்களைத் தோற்கடிக்கும் முளைத்திரனும், அதேசமயம் ஒலிம்பிக், ஜிம்னாஸ்டிக், செஸ் போட்டிகளில் சர்வ சாதாரணமாகத் தங்கப் பதக்கம் பெறுவான் போன்ற தேகத் திறனுக்கு நிகரான வல்லமையும் கொண்டவன் என்று கணித்திருக்கிறார்.
தன சொந்த பிரச்சனைகளைச் சமாளிப்பதற்காக, அடிக்கடி x-மென்களிடம் இருந்து விடுமுறை எடுப்பவன் என்றும், தனிமையில் வாழும் முரட்டு சுபாவம் கொண்டவன் என்றும் வால்வரின் சித்தரிக்கப்படுகிறான். ஒரு சிறந்த தலைவன், நம்பகமான கூட்டாளி என்ற குணாதிசயம் கொண்டவன் என்றாலும் கொத்தடிமை அடக்குமுறை ஆட்சிமுறைக்குப் பணிந்துபோகாத ஒரு போராளியாகத் தென்பட்டான். இளம் பெண்கள் பலருக்கு குறிப்பாக ஜுபிலி, கிட்டி பிரய்டுக்கெல்லாம் ஒரு தந்தை போலவும், வழிகாட்டியாகவும் விளங்கிய வால்வரின், எண்னற்ற பல பெண்களுடன் அதுவும் குறிப்பாக மரிக்கோ யாசிடா போன்ற பிரபலங்களுடன் காமக்களியாட்டம் ஆடியும் இருக்கிறான். கூடவே, ஜீன் கிரேவுடன் பரஸ்பர மற்றும் ஒருதலை காதலும் வளர்த்துக் கொண்டதால், அவனது உற்ற நண்பனும், பின்னலின் கணவனுமான ஸ்காட் சம்மர்ஸ்வுடன் பொறுமை கலந்த உரசல்களும் ஏற்பட்டன. வைப்பரை மணந்து பின்பு அவளை விவாகரத்தும் செய்தான்.
பிற விமர்சனங்கள்
தொகுமார்வல் x-மென்களின் ஸ்தாபகனாகவே வால்வரின் வடிவமைக்கப்பட்டான். உதாரணமாக வால்வரினின் உலகை எக்சைல்ஸ் படம்பிடித்து காட்டியது. மார்வெல் மேன்கோவெர்ஸ் வால்வரின் x-மென் நிறுவனராக தோன்றுகிறார். மார்வல் ஜோம்பிஸ் வெளியீட்டில், மார்வலின் பிரதான கதாபாத்திரங்களுடன், வால்வரின் ஒரு ஆன்மீகச் சக்தி கொண்ட நடமாடும் பிணம் என்றளவுக்கு படைக்கப்பட்டிருந்தான். தி அல்டிமேட் மார்வலின் மாயாஜால பதிப்புகளில், துவக்கத்திலிருந்தே, x-மென்னின் தலைசிறந்த தானைத் தலைவன் என்று ஆழமாக அனைவர் மனதிலும் பதியுமாறு சித்தரிக்கப்பட்டான். கடைசியாக வெளியாகும் பதிப்புகளில், இன்னும் வரவிருக்கும் 50 ஆண்டு எதிர்காலத்தில், உலகத்திலுள்ள எல்லா சூப்பர்மேன் ஹீரோக்களும் அழிந்துவிடுவார்கள் என்ற கற்பனைக் கதைகளிலும் ஓல்ட்மேன் லோகன் பெயர் அடிபடுகிறது. இந்தக் கற்பனை நவீனங்களில் வால்வரின் ஒரு வயது முதிர்ந்த, அமைதியான சாதுவாக சித்தரிக்கப்படுகிறான்.
பிற ஊடகங்களில்
தொகு'x-மென் கதாப்பத்திரங்களில், வால்வரின் மட்டுமே விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரில் ஒருவனாக திரைப்படம், டெலிவிசன், கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என்று எல்ல ஊடகங்களிலும் வியாபித்திருந்தான். மேலும் தன்னுடைய சொந்தத் தயாரிப்பான வீடியோ கேம்ஸ்களிலும் நடித்திருந்தான். (உ.ம்) x-மென்னின் தோற்றம் வால்வரின்)
மார்வலின் மிகைப்படுத்திய ஒட்டுப் படத்தின் முதல் பருவகாலத் தொடரான "வால்வரினும் x-மென்னும்" படத்தில், சார்லஸ் சேவியரும், ஜீன் கிரேயும் காணவில்லை, வால்வரினே x-மென்னை தலைமையேற்று வழிநடத்துகிறான். மே 2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான "நிக்கோலோடியோன் நிச்டுன்ஸ் சேனலில்" அமெரிக்காவில், பாதி சீசனிலும், ஒரு முழு சீசனிலும் இத்தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது சீசன் தொடர் கடைசி நேர நளினமாக்கும் முயற்சியில் உள்ளது. மூன்றாவது சீசன் தொடர் 26 காட்சிகளாகக் கையொப்பமாகியுள்ளது. இந்த தொடர்கள் எல்லாம் x-மென்னில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருடன், வால்வரின் ஒரு பகடையாட்டு வீரன் போல் வர்ணிக்கப்பட்டுள்ளான்.
ட்வென்டியெத் செஞ்சுரி பாக்ஸூம், மார்வெல் ஸ்டுடியோவும் இணைந்து, வால்வரினின் தலைப்பில் புதியதொரு x-மென் என்ற புதிர் படத்தை வெளியிட்டார்கள். இப்படத்தில் ஹக் ஜாக்மன்தான் தலைப்பு ஹீரோ வேடத்தில் நடித்தார். கோவின்ஹூட் இயக்கிய இப்படம், 2009 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி வட அமெரிக்காவிலும், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பிரான்சிலும் வெளியிடப்பட்டது.
வால்வரினின் இளமைப் பருவத்தை ட்ரோய் மெல்லிட் என்பவர் நடித்துக் காட்டினார். இப்படம், வால்வரின் ராணுவத்தில் பணி செய்யும்போது விக்டர் க்ரீட் சேபர்டூத் உடன் கலந்து பழகி பணிசெய்தது, பிறகு எவ்வாறு அவர்கள் பகைவர்களாக மாறினார்கள் என்பதைப் பற்றியது. வில்லியம் ஸ்ட்ரைக்கரும், விக்டர் க்ரீட்டும்தான் பிரதான எதிரணிப் போரளிகளராகி இப்படத்தில் தோன்றுகிறார்கள். டானி ஹாஷ்டனும் லைவ் ஸ்ரைபரும் மேற்கண்ட பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
மார்வெல் அல்டிமேட் அலையன்ஸ் என்ற விளையாட்டுத் தொடரில், நான்கு ஹீரோக்களில் ஒருவனாக வால்வரின் நடிக்கிறார். இவருடன், ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா மற்றும் தோர் ஆகிய மூன்று ஹீரோக்களும் நடிக்கிறார்கள்.
x-மென்னின் வீரச் சாகசச் செயல்கள் என்ற தொடரிலும் மற்றும் பல தொடர்களிலும் நல்ல விறுவிறுப்பான கதாபாத்திரமாக பிரகாசிக்கிறார். (x-மென் என்ற வீடியோ கேம்ஸ் தொகுப்பில் மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்).
வழிகாட்டி நூல் பட்டியல்
தொகுமுக்கியமான தொடர்கள் (இவற்றில் சில காலக்கிரம முறையில் இல்லாதவைகள்)
- தி இன்க்கிரிடிபெல் ஹல்க் #180-182 (அக்டோபர்-டிசம்பர். 1974 ஆம் ஆண்டு)
- ஜெயன்ட் சைஸ் x-மென் #1 (மே 1975 ஆம் ஆண்டு)
- x-மென் #94-91, அன்கேனி x-மென் #142-ஆன்
- வால்வரின் #1-4 (செப்டம்பர்-டிசம்பர் 1982 ஆம் ஆண்டு)
- கிட்டி பிரைட் மற்றும் வால்வரின் #1-6 (நவம்பர் 1984 ஆம் ஆண்டு முதல் - ஏப்ரல் 1985 ஆம் ஆண்டு வரை)
- வால்வரின் வால். 2, #1-1888 நவம்பர் 1988 ஆம் ஆண்டு முதல்-ஜூன் 2003 ஆம் ஆண்டு வரை)
- மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ் #10, 38-142, 150-155
- ஆரிஜின் #1-6 (நவம்பர் 2001 ஆம் ஆண்டு முதல் - ஜூலை 2002 ஆம் ஆண்டு வரை)
- ஸ்பைடர் மேனும் வால்வரினும் #1 (பிப்ரவரி 1987 ஆம் ஆண்டு)
- ஸ்பைடர் மேனும் வால்வரினும் தொகுப்பு 2, #1-4 (ஆகஸ்ட்-நவம்பர் 2003 ஆம் ஆண்டு)
- வால்வரின்: ஆரிஜின்ஸ் #1-ஆனுவல் #1, 2006 ஆம் ஆண்டு)
- வால்வரின் தொகுப்பு. 3, #1- (ஜூலை 2003 ஆம் ஆண்டு)
- ஆஷ்டோநிஷிங் x-மென் #3 (மே 1995 ஆம் ஆண்டு)
- ஆஷ்டோநிஷிங் x-மென் தொகுப்பு. 2, #1-3 (செப்டம்பர்-நவம்பர் 1999 ஆம் ஆண்டு)
- ஆஷ்டோநிஷிங் x-மென் தொகுப்பு. 3, #1- (மே 2004 ஆம் ஆண்டு)
- வெப்பன் x #1-4 (மார்ச் - ஜூன் 1995 ஆம் ஆண்டு)
- வெப்பன் x 2, தொகுப்பு #1-28
- x-மென் தொகுப்பு.2, #1-113, 157-207
- நியூ x-மென் #114-156
- X-Men: Legacy #212, 216–218, 220
- நியூ அவென்ஜெர்ஸ் #4-(மார்ச் 2005 ஆம் ஆண்டு)
- x போர்ஸ் தொகுப்பு. 2, #4-6 (2002 ஆம் ஆண்டு)
- 'x போர்ஸ் தொகுப்பு. 3, #1- (பிப். 2008 ஆம் ஆண்டு)
- வால்வரின்: முதல் வகுப்பு #1- (மார்ச் 2008 ஆம் ஆண்டு)
- x-மென் டிவைடெட் வீ ஸ்டாண்டட் #2 (ஆப் 2)
- x-மென் மேனிபெஸ்ட் டெஸ்டினி #2-3, 5
- x-ட்ரீம் x-மென் #20-25, 29
- வால்வரின்: வெப்பன் x #1- (ஜூன் 2009 ஆம் ஆண்டு)
சேகரிக்கப்பட்ட பதிப்புகள்
தொகு- மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ்: வால்வரின் தொகுப்பு 1 #1-10)
- மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ்: வால்வரின் தொகுப்பு 2 (தொகுப்பு 1 #39-50)
- மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ்: வால்வரின் தொகுப்பு 3 (தொகுப்பு 1 #51-61)
- மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ்: வால்வரின் தொகுப்பு 4 (தொகுப்பு 1 #62-71)
- வால்வரின்: வெப்பன் x (மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ் தொகுப்பு 1 #72-84)
- வால்வரின்: ப்ளட் ஹங்க்ரி (மார்வல் காமிக்ஸ் ப்ரசென்ட்ஸ்: தொகுப்பு 1 #85-92)
- வால்வரின் (தொகுப்பு 1 #1-4)
- எசன்சியல் வால்வரின் தொகுப்பு 1 (தொகுப்பு 2 #1-23)
- எசன்சியல் வால்வரின் தொகுப்பு 2 (தொகுப்பு 2 #24-47)
- எசன்சியல் வால்வரின் தொகுப்பு 3 (தொகுப்பு 2 #48-69)
- எசன்சியல் வால்வரின் தொகுப்பு 4 (தொகுப்பு 2 #70-90)
- எசன்சியல் வால்வரின் தொகுப்பு 5 (தொகுப்பு 2 #91-110) ஆனுவல் '96 & அன்கேனி x-மென் #332)
- வால்வரின் கிளாசிக் தொகுப்பு 1 தொகுப்பு 2 #1-5)
- வால்வரின் கிளாசிக் தொகுப்பு 2 தொகுப்பு 2 #6-10)
- வால்வரின் கிளாசிக் தொகுப்பு 3 தொகுப்பு 2 #11-16)
- வால்வரின் கிளாசிக் தொகுப்பு 4 தொகுப்பு 2 #17-23)
- வால்வரின் கிளாசிக் தொகுப்பு 5 தொகுப்பு 2 #24-30)
- வால்வரின் லெஜெண்ட்ஸ் தொகுப்பு 6 மார்க் சில்வெஸ்ட்ரி 2 #31-34, 41-42, 48-50)
- வால்வரின்: நாட் டெட் எட் (தொகுப்பு 2 #199-122)
- x-மென் அபோகலிப்ஸ் தொகுப்பு 1 தி டுவல் (தொகுப்பு 2 #146-147)
- x-மென்னும் அபோகலிப்ஸ்ம் தொகுப்பு 2 தி டுவல் (தொகுப்பு 2 #148)
- வால்வரின் லெஜெண்ட்ஸ் தொகுப்பு 3: லாவ் ஆப் தி ஜன்குல் 2 #181-186)
- வால்வரின் தொகுப்பு 1: தி ப்ரதர்வுட் (தொகுப்பு 3 #1-6)
- வால்வரின் தொகுப்பு 2: கோயோட் குரோசிங் (தொகுப்பு 3 #7-11)
- வால்வரின் தொகுப்பு 3 ரிடர்ன் ஆப் தி நேடிவ் (தொகுப்பு 3 #12-19)
- வால்வரின்: எனிமி ஆப் தி ஸ்டேட் தொகுப்பு 1 (தொகுப்பு 3 #20-25)
- வால்வரின்: எனிமி ஆப் தி ஸ்டேட் தொகுப்பு 2 (தொகுப்பு 3 #26-31)
- ஹவுஸ் ஆப் எம்: வோல்ட் ஆப் எம் பிவ்ச்சரிங் வால்வரின் (தொகுப்பு 3 #33-35)
- வால்வரின்: ஆரிஜின்ஸ் அன்ட் என்டிங்க்ஸ் (தொகுப்பு 3 #36-40)
- வால்வரின்: ப்ளட் அன்ட் சாரோ (தொகுப்பு 3 #41, 49 & ஜெயின்ட் சைஸ் வால்வரின் #1)
- வால்வரின்: சிவில் 1 வார் தொகுப்பு 3 #42-48)
- வால்வரின்: எவோல்யுசன் (தொகுப்பு 3 #50-55)
- வால்வரின்: தி டெத் ஆப் வால்வரின் (தொகுப்பு. 3 #56-61)
- வால்வரின்: கெட் ம்ய்ச்டிகு (தொகுப்பு 3 #62-65)
- வால்வரின்: ஆர்ஜின்ஸ் தொகுப்பு 1 - பார்ன் இன் ப்ளட் (வால்வரின்: ஆர்ஜின்ஸ் #1-5)
- வால்வரின்: ஆர்ஜின்ஸ் தொகுப்பு 2 - சாவீயர் (வால்வரின்: ஆர்ஜின்ஸ்#6-10)
- வால்வரின்: ஆர்ஜின்ஸ் தொகுப்பு 3 - ஸ்விப்ட் அன்ட் டெரிபல் (வால்வரின்: ஆர்ஜின்ஸ்#11-15)
- வால்வரின்: ஆர்ஜின்ஸ் தொகுப்பு 4 - அவர் வார் (வால்வரின்: ஆர்ஜின்ஸ் #16-20, ஆனுவல் #1)
- வால்வரின்: ஆர்ஜின்ஸ் தொகுப்பு 5 - டெட்பூல் (வால்வரின்: ஆர்ஜின்ஸ் #21-27)
- X-மென்: ஆர்ஜின்ஸ் சின் (வால்வரின்: ஆர்ஜின்ஸ் #28-30, X-மென்: ஆர்ஜின்ஸ் சின் ஒன்-சாட், & X-மென்: லெகசி #217-218)
- வால்வரின்: ஆரிஜின்ஸ் டார்க் ரிஜின் (வால்வரின்: ஆரிஜின்ஸ் #31-36)
- வால்வரின்: முதல் வகுப்பு - தி ரூகி (வால்வரின்: முதல் வகுப்பு #1-4, தி இன்க்கிரிடிபெல் ஹல்க் #181)
- வால்வரின்: முதல் வகுப்பு - டூ ரஷ்யா வித் லவ் (வால்வரின்: முதல் வகுப்பு #5-8)
- வால்வரின்: முதல் வகுப்பு - வால்வரின் பை நைட் (வால்வரின்: முதல் வகுப்பு #9-12)
- வால்வரின் லெஜெண்ட்ஸ் தொகுப்பு 2: மெல்ட்டவ்ன் (ஹவாக் & வால்வரின்: மெல்ட்டவ்ன் #1-4)
மேற்கோள்கள்
தொகு- ↑ Kreps, Daniel (September 11, 2017). "Len Wein, Comic Book Writer and Wolverine Co-Creator, Dead at 69". Rolling Stone இம் மூலத்தில் இருந்து ஜனவரி 3, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180103133343/https://www.rollingstone.com/culture/news/len-wein-comics-writer-and-wolverine-co-creator-dead-at-69-w502170.
- ↑ Locke, Kaitlyn (October 27, 2017). "Waltham eighth grader gets artwork published in national comics magazine". Boston Globe. https://www.bostonglobe.com/lifestyle/names/2017/10/27/waltham-eighth-grader-gets-artwork-published-national-comics-magazine/mhrfqCupKR0ZqdHVQGhgFL/story.html.
- ↑ WeinWords (Len Wein blog), "Say What?", February 24, 2009
வெளியிணைப்புகள்
தொகு- Wolverine at the Comic Book DB
- Wolverine at the Marvel Universe wiki
- Wolverine குர்லியில்
- UncannyXmen.net Spotlight on Wolverine at UncannyXMen.net
- James Howlett at Spider-Man Wiki