வோல்வரின்-2

வோல்வரின் (The Wolverine) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான வால்வரின் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் மகிழ்கலை, டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

வோல்வரின் 2
தமிழ் திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ஜேம்ஸ் மங்கோல்ட்
தயாரிப்புலாரன் ஷுலர் டோனர்
ஹட்ச் பார்க்கர்
மூலக்கதை
வால்வரின்
படைத்தவர்
  • கிரிஸ் கிளேர்மான்ட்
  • பிராங்க் மில்லர்
திரைக்கதைமார்க் பாம்பேக்
ஸ்காட் பிராங்க்
இசைமார்கோ பெல்ட்ராமி
நடிப்பு
ஒளிப்பதிவுரோஸ் எமெரி
படத்தொகுப்புமைக்கேல் மெக்கஸ்கர்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூலை 26, 2013 (2013-07-26)(அமெரிக்கா)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடு
மொழிஆங்கிலம்
சப்பானியம்
ஆக்கச்செலவு$100–132 மில்லியன்[4][5][6]
மொத்த வருவாய்$414.8 மில்லியன்[7]

இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியான வோல்வரின் என்ற திரைப்படத்தின் தொடர்சியாக வெளியானது. ஜேம்ஸ் மங்கோல்ட் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஹியூ ஜேக்மன், ஹிரோயுகி சனாடா, தாவோ ஒகமோட்டோ, ரிலா புகுஷிமா, பாம்கே ஜான்சென், வில் யூன் லீ மற்றும் ஸ்வெட்லானா கோட்செங்கோவா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

வால்வரின் என்ற படம் 24 ஜூலை 2013 அன்று வெளியாகி விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் 414 மில்லியன் வசூலித்தது. இது படம் எக்ஸ்-மென் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த ஐந்தாவது படம் ஆகும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகன் என்ற படம் 3 மார்ச் 2017 அன்று வெளியானது.

தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்தொகு

லோகன் (2017)தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Jackman, Hugh. "The Wolverine Featurette – "Logan"". Youtube.
  2. Newman, Kim (July 18, 2013). "The Wolverine". Screen Daily. December 31, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The Wolverine". American Film Institute. August 12, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. FilmL.A. (March 1, 2014). "2013 Feature Film Study". Archived from the original on ஏப்ரல் 21, 2018. https://web.archive.org/web/20180421215304/https://www.hollywoodreporter.com/sites/default/files/custom/Embeds/2013%20Feature%20Study%20Corrected%20no%20Watermark%5B2%5D.pdf. 
  5. "Hugh Jackman's 'The Wolverine' to Stop the Bleeding at the Box Office". July 25, 2013. July 26, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. Mendelson, Scott (May 16, 2019). "Box Office: 'Dark Phoenix' Tracking For $50 Million As 'Secret Life Of Pets 2' Aims For $65 Million". Forbes. https://www.forbes.com/sites/scottmendelson/2019/05/16/x-men-dark-phoenix-sophie-turner-game-of-thrones-deadpool-secret-life-of-pets-2-box-office/#6b5a2b0479a9. 
  7. "The Wolverine (2013)". Box Office Mojo. December 7, 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்வரின்-2&oldid=3477566" இருந்து மீள்விக்கப்பட்டது