டெட்பூல் (திரைப்படம்)

டெட்பூல் (Deadpool)[4] என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து 20ஆம் சென்சுரி பாக்ஸ், மார்வெல் மகிழ்கலை, கென்றே பிலிம்ஸ், மாக்ஸிமும் எபிபோர்ட், தி டொன்னேர்ஸ் கம்பெனி, டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது. இது எக்ஸ்-மென் திரைப்படத் தொடரின் எட்டாவது படம் ஆகும். படத்திற்கு ரிட் ரீஸ் மற்றும் பால் வர்ரிக் ஆகியோர் திரைக்கதை அமைக்க டிம் மில்லர் என்பவர் இயக்கத்தில் ரியான் ரெனால்ட்ஸ்[5] முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்க, மோரானா பேஸ்கரின், எட் ஸ்கிரீன், டி. ஜே. மில்லர், ஜினா கரோனோ, பிரையன்னா ஹில்டி பிர்பண்ட் மற்றும் ஸ்டீபன் கபிகிச் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

டெட்பூல்
இயக்கம்டிம் மில்லர்
தயாரிப்பு
மூலக்கதை
டெட்பூல்
படைத்தவர்
  • பேபியன் நிசீசா
  • ராப் லிபெல்ட்
இசைடாம் ஹோல்கன்போர்க்
நடிப்பு
  • ரையன் ரெனால்ட்சு[1]
  • மோரானா பேஸ்கரின்
  • எட் ஸ்கிரீன்
  • டி.ஜே. மில்லர்
  • கினா காரானோ
  • பிரையன்னா ஹில்ட்பிராண்ட்
  • ஸ்டீபன் கப்சிச்
ஒளிப்பதிவுகென் செங்
படத்தொகுப்புஜூலியன் கிளார்க்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுபெப்ரவரி 8, 2016 (2016-02-08)(கிறாண்டு இறெட்சு)
பெப்ரவரி 12, 2016 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்108 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$58 மில்லியன்[3]
மொத்த வருவாய்$783.1 மில்லியன்

2009 ஆம் ஆண்டில் எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்[6] படத்தில் வால்வரின் பாத்திரத்தில் நடித்ததற்கு முன்னதாக, 2004 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரேனோல்ட்ஸ் நடித்த டெட்பூல் திரைப்படத்தின் வளர்ச்சி துவங்கியது. ரீஸ் மற்றும் வெர்னிக் ஆகியோர் 2010 இல் படத்துக்காகப் பணியமர்த்தப்பட்டனர். படத்தின் இயக்குதராக மில்லர் 2011 இல் நியமிக்கப்பட்டார். அவர் ரெய்னால்டைக் கொண்டு உருவாக்கிய சோதனைக் காட்சிகளைக் கொண்டு முதன்மைப் பாத்திரத்தை ரெய்னாட்ஸ் ஏற்று நடிக்க 2014 ஆம் ஆண்டு பாக்ஸ் நிறுவனம் பச்சை கொடி காட்டியது. 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கூடுதல் படப்பிடிப்புகள் தொடங்கின. மார்ச் மற்றும் மே மாதங்களில் வான்கூவரில் படப்பிடிப்புகள் நடந்தன.

டெட்பூல் 2016 பெப்ரவரி 12 அன்று அமெரிக்காவில். வழக்கத்திற்கு மாறான தொற்று விளம்பர முறை பரப்புரைக்குப் பிறகு வெளியானது. இந்தத் திரைப்படமானது வணிகரீதியிலும், விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றது. இது $58 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட நிலையில், $58 மில்லியன் தொகையைச் சம்பாதித்து. இது முந்தைய பல பதிவுகளை உடைத்தது. மேலும் ஒட்டுமொத்தமாக மிக அதிகமாக வசூலித்த R- தரவரிசை திரைப்படமாகவும், மிக அதிக வசூல் செய்த எக்ஸ்-மென் திரைப்படம் என்ற பெருமைகளையும் பெற்றது. மேலும் 2016 ஆம் ஆண்டு திரைப்படங்களில் மிகுதியான வசூல் ஈட்டிய ஒன்பதாவது படம் என்ற சாதனையையும் செய்தது. இது பல விருதுகளையும், விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்றது. இரண்டு கிரிடிக்ஸ்' சாய்ஸ் விருதும் வென்றது. இதில் இரண்டு கோல்டன் குளோப் விருது பரிந்துரைகளும் அடங்கும். இப்படத்தின் அடுத்த பாகமான டெட்பூல் 2 என்ற படம் மே 18, 2018 அன்று வெளியிடப்பட உள்ளது.

கதை தொகு

பணத்துக்காக எதையும் செய்யலாம் என வெட் வில்சன் என்ற பெயரில் கூலிப் படையில் வேலை பார்த்து கொண்டு வருவார் கதாநாயகன் வில்சன். அப்படி இருக்கையில் தன்னுடைய நண்பன் ஒரு சண்டையில் சாக மனம் உடைந்து போய்விடுகிறார். இதன்பிறகு வில்சன் தனது காதலியினால் சற்றே மனம் மாற்றப்பட்டு, இனி இந்த வேலை வேண்டாம் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், வில்சனுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை எதிர்கொள்ளலாம் என மனதளவில் தயாராகிறார் வில்சன். என்றாலும், சாவதற்கு மனமில்லை வாழ்வதற்கு வழியில்லை என்ற நிலையில் தவிக்கிறார். இவ்வாறு இருக்கும் நிலையில் ஒரு குழு வில்சனை நோயில் இருந்து காப்பாற்றுவதாக கூறி அதற்கு ஒரு விசித்திர சோதனை செய்ய வேண்டும் என்றும், அந்தச் சோதனை செய்தால் புற்றுநோய் குணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று ஏமாற்றி சம்மதம் வாங்குகிறார்கள். இது குறித்து தன் காதலியிடம் எதுவும் கூறாமல் அக்குழுவினரிடத்தில் தன்னை ஒப்படைக்கிறார். நாட்கள் கடந்த பின்தான் தெரிய வருகிறது அதுவோர் சித்திரவதைக் கூடமென்று. வில்சன் போன்றோரை செயற்கையான முறையில் பல்வேறுபட்ட குரூரமான சிகிச்சைகளின் மூலம் விகாரிகளாக மாற்றி அவர்களை அடிமைச் சந்தையில் விற்பதுதான் இவர்களது தொழில். இவர்களது சோதனையின் மூலம் வில்சனுக்கு புற்றுநோயில் இருந்து விடுதலை கிடைக்கிறது. ஆனால் அந்த சோதனை ஏடாகூடமாக மாறிவிட, வில்சனின் தோல் முழுவதும் புண்ணாகி, உடல் விகாரமாகி விடுகின்றது. அதேசமயம் அவரது உடலுக்கு காயங்களைத் தானாகவே ஆற்றும் அபரிதமான சக்தியும், உடலின் உள் உறுப்புகள் அத்தனையும் பலம் பெற்றும் விடுகின்றன. இதன்பிறகு பரிசோதனைக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் வில்சன், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். இதற்குப் பதிலடியாக அந்தக் கும்பல் வில்சனின் காதலியைக் கடத்தி மிரட்டுகின்றனர். அவர்களிடம் வில்சன் தன் காதலியை மீட்பதுடன் தன்னை மரணத்தை விட கொடிய துன்பத்திற்கு உள்ளாக்கியவர்களைப் பழிவாங்குவதே மீதிக் கதை.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்பூல்_(திரைப்படம்)&oldid=3556722" இருந்து மீள்விக்கப்பட்டது