டெட்பூல் 2

டெட்பூல் 2 என்பது மார்வெல் காமிக்ஸ் பாத்திரத்தின் டெட்பூல் அடிப்படையிலான 2018 அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இது X- மென் திரைப்படத் தொடரில் பதினோராவது திரைப்படம் ஆகும், இது 2016 இன் டெட்பூலுக்கான தொடர்ச்சியாகும் .

டெட்பூல் 2 திரைப்பட விளம்பர பதாகை
டெட்பூல் 2 திரைப்பட விளம்பர பதாகை

ரோட் ரீஸ் , பால் வர்ரிக் , ஆகியோரால் திரைக்கதை அமைக்கப்பட்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ், ஜோஸ் ப்ரோலின் , மொரேனா பேக்கன் , ஜூலியன் டென்னிசன் , சோஸி பீட்ஜ் , டி.ஜே. மில்லர் , ப்ரையன்னா ஹில்டெப்ரண்ட்

உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இந்த திரைப்படம் டேவிட் லெய்ட்ச் இயக்கத்தில் 2018 ம் ஆண்டு வெளிவந்தது

டெட் பூலிற்கான தொடர்ச்சியான திரைப்படத்தை உருவாக்கும் திட்டம் பிப்ரவரி 2016 இல் உறுதி செய்யப்பட்டது. ரெனால்ட்ஸ், ரீஸ், வர்னிக் மற்றும் இயக்குனர் டிம் மில்லரின் அசல் படைப்பாக்க குழு இரண்டாவது படத்திற்குத் திரும்புவதற்கு விரைவாக அமைக்கப்பட்டிருந்தாலும், ரேனோல்ட்ஸ் உடன் படைப்பு வேறுபாடுகள் காரணமாக 2016 அக்டோபரில் மில்லர் அந்த திட்டத்தை விட்டு வெளியேறினார், விரைவில் லெயிச்சினால் மாற்றப்பட்டார். கேபிள் இன் பாத்திரத்தை நிரப்ப ஒரு விரிவான நடிப்பு தேடலுக்கு பின்னர் ஜோஸ் ப்ரோலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்  ஜூன் முதல் அக்டோபர் 2017 வரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் படப்பிடிப்பு நடந்தது. இந்தத் திரைப்படமானது ஸ்டண்ட் வோமன் ஜோயி "எஸ்.ஜே." ஹாரிஸ் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தார்.

டெட்பூல் 2 அமெரிக்காவில் 20 ஆம் நூற்றாண்டு ஃபாக்ஸ்நிறுவனத்தின் மூலம் மே 18, 2018 இல் வெளியிடப்பட்டது. அது $ 785 க்கும் மேல் வசூலித்தது  

கதைசுருக்கம்தொகு

வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளுக்கு கூலிப்படையில் வேலை செய்த பிறகு வேட் வில்சன் பழிவாங்க வந்தவரின் தாக்குதலில் நேசித்த பெண்ணை இழக்கிறார் . இதனால் மனம் உடைந்து உயிர்விட துணியும்போது நண்பர் கொலஸஸால் காப்பாற்றப்படுகிறார் .சக்திவாய்ந்த மனிதர்களால் உருவான எக்ஸ் மென் அமைப்பிலும் இணைகிறார் . ஒரு கட்டத்தில் ரெசெல் காலின்ஸ் என்ற சக்திவாய்ந்த கோபக்கார சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ரெசலுக்கு துன்பத்தை கொடுத்த அமைப்பினரை கோபமாக தாக்க முயற்சிக்கிறார் , இதனால் எக்ஸ் மென் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு ஐஸ் பாக்ஸ் என்ற சிறப்பு சக்திகள் உளவர்களை அடைக்கும் சிறைச்சாலையில் வேட் வில்சனும் ரெசெல் காலின்சும் அடைக்கப்படுகின்றனர் . அங்கே கேபிள் என்ற எதிர்காலத்தில் இருந்து காலத்தை கடந்து வந்த மோசமான மனிதரின் பழிவாங்கும் முயற்சியில் இருந்து காப்பாற்றுகிறார் . இதனால் மோசமான காயங்களுடன் தப்பிச்சென்ற வேட் வில்சன்  ரெசெல் காலின்ஸை காப்பாற்ற எக்ஸ் போர்ஸ் என்ற சக்திவாய்ந்த மனிதர்களின் குழுவை உருவாக்கினாலும் வில்சன் மற்றும் அதிர்ஷ்டத்தை சக்தியாக கொண்ட டோமினோ தவிர அனைத்து உறுப்பினர்களும் விமானத்தில் இருந்து தரையில் பாரா சூட் மூலம் பறந்து வரும் இந்த முயற்சியில்  எங்காவது மோசமான முறையில் மோதிக்கொள்கின்றனர் . இறுதியில் டொமினோ மற்றும் வில்சன் ரெசலை காப்பாறினாலும் ரெசல் அவனுடைய பழிவாங்கும் குணத்தால் ஜகர்நேட் என்ற பலம்வாய்ந்த சகித்திவாய்ந்த மனிதனின் உதவியுடன் அவனை துன்பப்படுத்திய மோசமான அமைப்பினரை அவனுடைய நெருப்பு பயன்படுத்தும் சக்தியால் அழிக்க திட்டமிடுகிறான் , இந்நிலையில் இந்த முயற்சியாலும் மோசமாக காயப்பட்ட வில்சனை கேபிள் சந்திக்கிறார் , எதிர்காலத்தில் இந்த ரெசல் அவருடைய குடும்பத்தை தாக்கி அழித்ததையும் அதனால்தான் இந்த கடந்த காலத்தில் அவனை தாக்க வந்ததாகவும் சொல்கிறார் , ஆனால் வில்சன் வன்முறை சரியானது இல்லை என ரெசலுக்கு புரியவைக்க முயற்சிப்பதை சொல்கிறார் , ஆனால் கேபிள் அவருடைய முடிவை விட்டுக்கொடுக்கவில்லை , இந்நிலையில் ரெசல் தாக்கப்போகும் அந்த மோசமான அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் கேபிள் , வில்சன் , டொமினோ , கொலஸஸின் அணிக்கும் நடந்த மோதலில் ரெசலுடன் பேசும் வில்சன் வன்முறை சரியான முடிவு இல்லை என்பதை புரியவைத்தாலும் ரெசல் மறுக்கிறான் , ஆனால் அவனுக்கு புரியவைக்க சக்திகளை மறையவைக்கும் கருவி அணிந்து எந்த சக்திகளும் சாதாரண மனிதனாக மாறி ரெசலை தாக்கவந்த துப்பாக்கி குண்டை தடுக்க வில்சன் அவருடைய உயிரை தியாகம் செய்கிறார் , சம்பவத்தால் ரேசல் மனம் திருந்தி இருந்தாலும் வில்சன் மீது பரிதாபப்பட்டு கேபிள் கொஞ்சம் நேரத்துக்கு காலத்தை கடந்து அந்த பாதிப்பு வில்சனை தாக்காதவாறு சம்பவங்களை மாற்றி வில்சனை காப்பாற்றுகிறார் , பின்னர் இந்த சக்திவாய்ந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு நல்ல தோழமையான அமைப்பாக மாற முடிவு எடுக்கின்றனர்

வில்சன் கேபிளின் காலத்தை கடக்கும் கருவியுடன் கடந்த கால சம்பவங்களை மாற்றி நேசித்த பெண்ணை காப்பாற்றுகிறார் .

வெளியீடுதொகு

[1] ஜூன் 18, 2018 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது, அந்த ஆண்டு ஜூன் 1 அன்று வெளியிடப்பட்டது.[2][3]

வசூல்தொகு

டெட்பூல் 2 வசூலித்தது   அமெரிக்கா மற்றும் கனடாவில் 324.6 மில்லியன்   டாலர்கள் வசூல் செய்தது உலகளாவிய வசூலாக மொத்தம் $ 785     மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது.

  1. "Ryan Reynolds and the cast of Deadpool 2 ooze movie star glamour for London premiere of Marvel film". DailyMail (May 11, 2018). பார்த்த நாள் May 14, 2018.
  2. மெக்ளிண்டாக், பமீலா (ஏப்ரல் 22, 2017). " ' டெட்பூல் 2' நிலங்கள் ஜூன் 2018 வெளியீட்டு தேதி" . தி ஹாலிவுட் ரிப்போர்டர் . திரட்டப்பட்ட அசல் மே 24, 2017 அன்று. ஏப்ரல் 27, 2017 இல் பெறப்பட்டது .
  3. ஃப்ரீமேன், மோலி (நவம்பர் 15, 2017). "டெட்பூல் சீக்வெல் 'டெட்பூல் 2 ' என்ற தலைப்பில் பெயரிடப்படக்கூடாது . திரை ரேண்ட் . நவம்பர் 16, 2017 இல் அசல் இருந்து காப்பகப்படுத்தப்பட்டது . நவம்பர் 16, 2017 இல் பெறப்பட்டது .
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்பூல்_2&oldid=2752626" இருந்து மீள்விக்கப்பட்டது