டெட்பூல் (வரைகதை)

டெட்பூல் (வேட் வின்ஸ்டன் வில்சன்) (ஆங்கில மொழி: Deadpool) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இக்கதாபாத்திரத்தின் கதையை எழுத்தாளர் பேபியன் நிசீசா மற்றும் எழுத்தாளர் ராப் லிபெல்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் பிப்ரவரி 1991 இல் தி நியூ மியூடன்ட்ஸ் #98 இருந்து முதன் முதலில் தோன்றியது. ஆரம்பத்தில் டெட்பூல் ஒரு சூப்பர்வில்லனாக சித்தரிக்கப்பட்டது. டெட்பூலின் உண்மையான பெயர் வேட் வில்சன் என மார்வெல் காமிக்ஸ் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெட்பூல்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுதி நியூ மியூடன்ட்ஸ் #98 (பிப்ரவரி 1991)
உருவாக்கப்பட்டதுபேபியன் நிசீசா
ராப் லிபெல்ட்
கதை தகவல்கள்
திறன்கள்
  • மீளுருவாகும் உடல் அமைப்பு
  • நீண்ட ஆயுள் மற்றும் சுறுசுறுப்பு
  • போர்களை கையாளும் திறன்
  • தொலைத்தொடர்பு திறன்

டெட்பூல்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் என்பவர் நடித்துள்ளார்.[1] இந்த கதாபாத்திரம் முதலில் எக்ஸ்-மென் திரைப்படத் தொடர்களான வோல்வரின் (2009), டெட்பூல் (2016), மற்றும் அதன் தொடர்சியான டெட்பூல் 2 (2018) போன்ற திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டது.[2][3][4] இவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்பட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.[5]

வரவேற்பு தொகு

டெட்பூல், விசார்டு பத்திரிக்கையின் பட்டியலான சிறந்த 200 காமிக்ஸ் கதாப்பாத்திரங்களில் 182 ஆவது இடம் பெற்றது. [6] எம்பையர் புத்தகத்தில் 50 சிறந்த காமிக்ஸ் கதாப்பாத்திரத்தில் இது 45 ஆவது இடம் பெற்றது. [7] ஐஜிஎன் சிறந்த 100 காமிக்ஸ் கதாப்பாத்திரத்தில் இது 31 ஆவது இடம் பெற்றது. [8]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்பூல்_(வரைகதை)&oldid=3687737" இருந்து மீள்விக்கப்பட்டது