ரையன் ரெனால்ட்சு

(ரியான் ரெனால்ட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரையன் ரோட்னி ரெனால்ட்சு (ஆங்கில மொழி: Ryan Rodney Reynolds) (பிறப்பு: அக்டோபர் 23, 1976) என்பவர் கனடிய நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் கனேடிய நாட்டு விடலைப்பருவ தொலைக்காட்சி தொடரான 'பிப்டீன்' (1991-1993) என்ற தொடர் மூலம் நடிப்புத்திரையில் அறிமுகமானார்.[1] 1998 முதல் 2001 வரை 'டூ கைஸ் அண்ட் எ கேர்ள்' என்ற தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு சிறிய வேடங்களில் சில தொடர்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பிளேடு 3 (2004),[2] வோல்வரின் (2009),[3][4] ஆர்.ஐ.பி.டி. (2013), வுமன் இன் கோல்ட் (2015), லைப் (2017), பிரீ காய் (2021), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ரையன் ரெனால்ட்சு
Deadpool 2 Japan Premiere Red Carpet Ryan Reynolds (cropped).jpg
பிறப்புரியான் ரோட்னி ரெனால்ட்ஸ்
அக்டோபர் 23, 1976 ( 1976 -10-23) (அகவை 45)
வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்கார்லெட் ஜோஹான்சன் (செப்டம்பர் 27, 2008-ஜூலை 1, 2011)
பிளேக் லைவ்லி (செப்டம்பர் 9, 2012)
பிள்ளைகள்3

இவர் டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான மிகப்பெரிய வணிக வெற்றி மீநாயகன் படங்களான டெட்பூல் (2016) மற்றும் டெட்பூல் 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பு திறனுக்காக விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்றவற்றிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்தொகு

  1. "A Look Back at Ryan Reynolds' Weird and Wonderful TV Career". film.com. மூல முகவரியிலிருந்து June 14, 2015 அன்று பரணிடப்பட்டது.
  2. "Ryan Reynolds talks 'Blade: Trinity'". movieweb.com. மூல முகவரியிலிருந்து July 25, 2015 அன்று பரணிடப்பட்டது.
  3. "Ryan Reynolds Gets Deadpool Spin-off". TVGuide.com. மூல முகவரியிலிருந்து May 10, 2009 அன்று பரணிடப்பட்டது.
  4. Stax (March 21, 2005). "The Latest on The Flash & Deadpool". IGN. மூல முகவரியிலிருந்து April 15, 2009 அன்று பரணிடப்பட்டது.
  5. Brevet, Brad (February 14, 2016). "'Deadpool' Smashes Box Office Records On Way to $260 Million Worldwide Opening". மூல முகவரியிலிருந்து February 16, 2016 அன்று பரணிடப்பட்டது.
  6. "Worldwide Openings". Box Office Mojo. மூல முகவரியிலிருந்து August 10, 2019 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரையன்_ரெனால்ட்சு&oldid=3302444" இருந்து மீள்விக்கப்பட்டது