ஜெனிபர் லாரன்ஸ்
ஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ் (பிறப்பு: 1990, ஆகஸ்ட் 15) ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் 22 வயதில், காதல் நகைச்சுவை கலந்த சில்வர் லைனிங்சு பிளேபுக் திரைபடத்தில் நடித்து அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, சேட்டிலைட் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருது போன்ற விருதகளைப் பெற்றார்.
ஜெனிபர் லாரன்ஸ் | |
---|---|
பிறப்பு | ஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ் 1990-8-15 லூயிவில், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகை, மாடல், திரைப்பட தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்றளவும் |
இவர், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் முலம் மிகவும் பரிச்சியமான நடிகை ஆனார். இந்தப் படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. இந்த திரைப்படம் சிறந்த விற்பனை நாவலான சுசான் காலின்ஸ் தொடரின் ஒரு தழுவல் ஆகும். 2013 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் ஒருவராக இவர் தெரிவு செய்யபட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் லாரன்ஸ் லூயிவில் பிறந்து வளர்ந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். அவர் நடிப்பு தொழிலை நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 3.9 சராசரியாக உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார்.
தொலைக்காட்சி
தொகுஇவர் 2006ம் மோனக் என்ற தொலைக்காட்சி தொடரில் ஜென் (மஸ்கட்) என்ற வேடத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் 2007ம் ஆண்டு நாட் அனொதெர் ஹை ஸ்கூல் ஷோ, மீடியம், தி பில் என்க்வால் ஷோ என்ற தொடர்களில் நடித்து பல தொலைக்காட்சி விருதுகளை வென்றார்.
திரைப்படம்
தொகுஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2008 | கார்டன் பார்ட்டி | |
2008 | தி போகர் ஹவுஸ் | |
2009 | தி பர்னிங் ப்ளைன் | |
2010 | வின்டர்ஸ் போன் | பரிந்துரை: சிறந்த நடிகைக்கான அகாடமி விருது |
2011 | லைக் க்ரேஸீ | |
2011 | த பீவர் | |
2011 | எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் க்லாஸ் | |
2012 | த ஹங்கர் கேம்ஸ் | |
2012 | ஹவுஸ் அட் த என்ட் ஒஃப் ஸ்ட்ரிட் | |
2012 | சில்வர் லைனிங்சு பிளேபுக் | சிறந்த நடிகைக்கான அகாடமி விருது |
2013 | த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் | |
2013 | அமெரிக்கன் ஹஸ்ல் | |
2014 | செரினா | |
2014 | டும்ப் அண்ட் டும்பர் டு | |
2014 | எக்ஸ்-மென் 6 | |
2014 | த ஹங்கர் கேம்ஸ் – பார்ட் 1 | |
2015 | தி கிளாஸ் காஸ்ட்லே | |
2015 | த ஹங்கர் கேம்ஸ் – பார்ட் 2 | படபிடிப்பில் |