வாண்டாவிஷன்
வாண்டாவிஷன் (ஆங்கில மொழி: WandaVision) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மர்மம் காதல் மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களான ஸ்கார்லட் விட்ச் மற்றும் விஷன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக ஜாக் ஷாஃபர் என்பவர் உருவாக்கியுள்ளார்.
வாண்டாவிஷன் | |
---|---|
![]() | |
வகை | |
உருவாக்கம் | ஜாக் ஷாஃபர் |
மூலம் |
|
இயக்கம் | மாட் ஷக்மேன் |
நடிப்பு |
|
பிண்ணனி இசை | கிறிஸ்டோப் பெக் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 9 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
படப்பிடிப்பு தளங்கள் | அட்லான்டா |
ஒளிப்பதிவு | ஜெஸ் ஹால் |
ஓட்டம் | தோராயமாக அத்தியாயம் ஒன்று 29–49 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | மார்வெல் ஸ்டுடியோ |
விநியோகம் | டிஸ்னி இயங்குதள விநியோகம் |
ஆக்கச்செலவு | $150 மில்லியன் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | டிஸ்னி+ |
ஒளிபரப்பான காலம் | சனவரி 15, 2021 மார்ச்சு 5, 2021 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | மார்வெல் சினிமா யுனிவர்ஸ் தொலைக்காட்சி தொடர்கள் |
வெளியிணைப்புகள் | |
தயாரிப்பு இணையதளம் |
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்க, ஜாக் ஷாஃபர் தலைமையில், 'மாட் ஷக்மேன்' என்பவர் இயக்கியுள்ளார்.
மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படத் தொடர்களில் நடித்த எலிசபெத் ஓல்சென் மற்றும் பவுல் பெட்டனி ஆகியோர் வாண்டா மற்றும் விஷன் என்ற பாத்திரங்களை மறுபரிசீலனை செய்கிறார்கள்.[1] இவர்களுடன் தியோனா பாரிஸ், கேட் டென்னிங்ஸ், ராண்டால் பார்க், மற்றும் கேத்ரின் ஹான் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் டிஸ்னி+ க்காக பல வரையறுக்கப்பட்ட இணையத் தொடர்களை உருவாக்கி வருகிறது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் தோன்றிய ஸ்கார்லட் விட்ச் மற்றும் விஷன் போன்ற துணை கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது.
வாண்டாவிஷன் ஜனவரி 15 முதல் மார்ச்சு 5, 2021 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது, மேலும் இது ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் முதல் தொடர் ஆகும்.
கதைச் சுருக்கம்தொகு
இந்த தொடரின் கதை 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு வாண்டா மாக்சிமோஃப் (ஸ்கார்லட் விட்ச்) மற்றும் விஷன் ஆகியோர் வெஸ்ட்வியூ நகரின் புறநகரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் அடையாளங்களை மறைத்து மக்களுடன் மக்களாக சாதாரண முறையில் புதிதாக வாழ முயற்சித்து வருகின்றனர். இந்த ஜோடி கிளாசிக் தொலைக்காட்சியின் பல்வேறு காலங்களில் தெரிவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது.[2]
நடிகர்கள்தொகு
- எலிசபெத் ஓல்சென் - வாண்டா மாக்சிமோஃப் / ஸ்கார்லட் விட்ச்[3]
- பவுல் பெட்டனி - விஷன்
- தியோனா பாரிஸ்[4] - மோனிகா ராம்போ
- கேட் டென்னிங்ஸ் - டார்சி லூயிஸ்
- ராண்டால் பார்க் - ஜிம்மி வூ
- கேத்ரின் ஹான் - ஆக்னஸ்
- ஜோலீன் பூர்டி -
தயாரிப்புதொகு
2019 நவம்பரில் ஜார்ஜியாவின் அட்லான்டாவில் படப்பிடிப்பு தொடங்கியது. 2020 மார்ச்சில் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் 2020 செப்டம்பரில் லாஸ் ஏஞ்சலஸ்ஸில் உற்பத்தி மீண்டும் தொடங்கி நவம்பர் 2020 இல் நிறைவு பெற்றது.
மேற்கோள்கள்தொகு
- ↑ Kroll, Justin (September 18, 2018). "Loki, Scarlet Witch, Other Marvel Heroes to Get Own TV Series on Disney Streaming Service (Exclusive)". Variety. September 19, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 18, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Boucher, Geoff; Hipes, Patrick (October 30, 2018). "Marvel Duo Falcon & Winter Soldier Teaming For Disney Streaming Series". Deadline Hollywood. October 31, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 31, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sciretta, Peter (October 30, 2018). "Falcon/Winter Soldier TV Series Planned for Disney Streaming Service, Scarlet Witch Show May Co-Star Vision". /Film. October 31, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 1, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ramos, Dino-Ray (July 20, 2019). "Teyonah Parris Joins Elizabeth Olsen And Paul Bettany For 'WandaVision' As Monica Rambeau". Deadline Hollywood. December 9, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 3, 2020 அன்று பார்க்கப்பட்டது.