எக்கோ (தொலைக்காட்சித் தொடர்)
எக்கோ (English: Echo) என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி குற்றப்புனைவு மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் வெளியான மார்வெல் காமிக்சு கதாபாத்தித்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக மரியன் டேயர் என்பவர் உருவாக்கியுள்ளார்.
எக்கோ | |
---|---|
வகை | |
உருவாக்கம் | மரியன் டேயர் |
நடிப்பு |
|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
அத்தியாயங்கள் | 5 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
படப்பிடிப்பு தளங்கள் | அட்லாண்டா பெருநகரப் பகுதி |
ஒளிப்பதிவு | கிரா கெல்லி |
தயாரிப்பு நிறுவனங்கள் | |
விநியோகம் | டிஸ்னி இயங்குதள விநியோகம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | டிஸ்னி+ |
ஒளிபரப்பான காலம் | சனவரி 9, 2024 |
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இந்த தொடர் மார்வெல் இசுடியோசு தயாரிப்பில் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் தொலைக்காட்சித் தொடரின் ஒரு பகுதியாகவும் 2021 ஆம் ஆண்டு வெளியான ஹாக்கி[1] என்ற தொடரின் வழித்தொடரும் ஆகும்.[2]
இது மாயா லோபஸ் தனது சொந்த ஊருக்குத் திரும்புவதையும், அங்கு அவர் தனது கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதுடன், தனது பூர்வீக அமெரிக்க குடிகளுடம் மீண்டும் இணைந்திருக்க விருபிக்கிறார், மேலும் அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் அரவணைக்க முயற்சிப்பதே சித்தரிக்கின்றது. இந்த தொடரை சிட்னி பிரீலாண்ட் என்பவர் இயக்க,[3] தலைமை எழுத்தாளராக மரியன் டேயர் என்பவர் பணியாற்றுகிறார். இந்தத் தொடரை 20வது தொலைக்காட்சியும் இணைந்து தயாரித்துள்ளது.
ஹாக்கி தொடரில் இருந்து மீண்டும் நடிகை அலகுவா காக்சு[4][5] என்பவர் மாயா லோபஸ்/எக்கோ என்ற தனது பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். இவருடன் இணைந்து சாஸ்கே இசுபென்சர், தாண்டூ கார்டினல், டெவரி ஜேக்கப்சு, கோடி லைட்னிங், கிரகாம் கிரீன், ஜான் மெக்லார்னான், வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ மற்றும் சார்லி சாக்ஸ்[6][7] போன்ற பலர் நடிக்கிறார்கள். இதன் வழித்தொடர் வளர்ச்சி மார்ச் 2021 இல் தொடங்கியது, ஈடன் மற்றும் எமிலி கோஹன் ஆகியோர் தலைமை எழுத்தாளர்களாக இணைக்கப்பட்டனர், மேலும் அலக்வா காக்சு திரும்பி வருவதை உறுதிப்படுத்தினார். நவம்பர் 2021 இல் இந்தத் தொடர் முறையாக அறிவிக்கப்பட்டது, மரியன் டேயர் தலைமை எழுத்தாளராகப் பணியாற்றுவது தெரியவந்தது, சிட்னி பிரீலாண்ட் என்பவர் மார்ச் 2022 க்குள் இயக்குநராக உறுதி செய்யப்பட்டது. இந்த தொடரின் படப்பிடிப்பு ஏப்ரல் பிற்பகுதியில் தொடங்கியது மற்றும் செப்டம்பர் 2022 வரை நீடித்ததது,
எக்கோ தொடர் டிஸ்னி+[8] குலு போன்ற ஊடகங்களில் சனவரி 9, 2024 அன்று ஐந்து அத்தியாயங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதி ஒரு பகுதியாகும் மற்றும் "மார்வெல் ஸ்பாட்லைட்" பேனரின் கீழ் முதல் தொடராகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Otterson, Joe (December 3, 2020). "'Hawkeye' Series at Disney Plus Adds Six to Cast, Including Vera Farmiga and Tony Dalton (Exclusive)". Variety. Archived from the original on December 3, 2020. Retrieved December 3, 2020.
- ↑ Moreau, Jordan (March 22, 2021). "'Hawkeye' Spinoff Series About Echo in Early Development for Disney Plus (Exclusive)". Variety. Archived from the original on March 22, 2021. Retrieved March 22, 2021.
- ↑ Barnhardt, Adam (March 19, 2022). "Marvel's Echo Adds Reservation Dogs Director". ComicBook.com. Archived from the original on March 20, 2022. Retrieved March 20, 2022.
- ↑ Paige, Rachel (May 17, 2022). "'Echo': Alaqua Cox Returns to the MCU as Maya Lopez in First-Look Image". Marvel.com. Archived from the original on May 17, 2022. Retrieved May 17, 2022.
- ↑ Flook, Ryan (August 14, 2021). "Hawkeye: Alaqua Cox Shares Casting Search Info for Echo Spinoff Series". Bleeding Cool. Archived from the original on August 14, 2021. Retrieved August 14, 2021.
- ↑ Arvedon, Jon (April 5, 2022). "Marvel Leak Spoils Daredevil and Kingpin's Next MCU Appearance". Comic Book Resources. Archived from the original on April 5, 2022. Retrieved April 5, 2022.
- ↑ Anthony, Lund (April 5, 2022). "Daredevil and Kingpin Seemingly Confirmed to Appear Together in New Disney+ Series". MovieWeb. Archived from the original on April 6, 2022. Retrieved April 6, 2022.
- ↑ Hipes, Patrick (November 12, 2021). "Disney+ Day: All The Streamer's Film & TV News From Premiere Dates To Series Orders". Deadline Hollywood. Archived from the original on November 12, 2021. Retrieved November 12, 2021.