சீக்ரெட் இன்வேசன் (தொலைக்காட்சித் தொடர்)

சீக்ரெட் இன்வேசன் (ஆங்கில மொழி: Secret Invasion) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் சீக்ரெட் இன்வேசன்[2] என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+[3] என்ற ஓடிடி தளத்திற்காக கயில் பிராட்ஸ்ட்ரீட்டு என்பவர் உருவாக்கியுள்ளார்.

சீக்ரெட் இன்வேசன்
வகை
உருவாக்கம்கயில் பிராட்ஸ்ட்ரீட்டு
மூலம்
சீக்ரெட் இன்வேசன்
படைத்தவர்
  • பிரையன் மைக்கேல் பெண்டிஸ்
  • லீனில் பிரான்சிஸ் யூ
இயக்கம்அலி செலிம்
நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
அத்தியாயங்கள்6
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • கேவின் பிகே[1]
  • லூயிஸ் டி எஸ்போசிட்டோ
  • விக்டோரியா அலோன்சோ
  • கயில் பிராட்ஸ்ட்ரீட்டு
  • ஜொனாதன் இசுவார்ட்சு
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவுரெமி அடெஃபராசின்
ஓட்டம்40–50 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஆக்கச்செலவு$212 மில்லியன்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
ஒளிபரப்பான காலம்சூன் 21, 2023 (2023-06-21) –
சூலை 26, 2023 (2023-07-26)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இந்த தொடரை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக மார்வெல் ஸ்டுடியோஸ்[4] என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகர் சாமுவேல் எல். ஜாக்சன்[5] திரைப்படத் தொடரில் இருந்து நிக் ப்யூரியாக[6][7] தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க, இவருடன் பென் மெண்டல்சோன் என்பவர் மீண்டும் தாலோசு என்ற கதாபாத்திரத்திலும், இவர்களுடன் கோபி ஸ்மல்டேர்ஸ், கில்லியன் சிகாட், சாமுவேல் அடெவுன்மி, டெர்மோட் முல்ரோனி, ரிச்சர்ட் டோர்மர், எமிலியா கிளார்க், ஒலிவியா கோல்மன், டான் செடில், சார்லேன் வுடார்ட், கிறிஸ்டோபர் மெக்டொனால்ட் மற்றும் கேட்டி பின்னரன் ஆகியோர்கள் நடித்துள்ளனர்.[8]

சீக்ரெட் இன்வேசன் தொடர் ஜூன் 21, 2023 அன்று திரையிடப்பட்டது, ஜூலை 26 வரை ஆறு அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் முதல் தொடர் ஆகும். இந்தத் தொடர் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, அவர்கள் ஜாக்சன் மற்றும் மெண்டல்சோனின் நடிப்பைப் பாராட்டினர், ஆனால் எழுத்து (குறிப்பாக இறுதிப் போட்டி), வேகக்கட்டுப்பாடு மற்றும் காட்சி விளைவுகள் ஆகியவற்றை விமர்சித்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Davis, Brandon (January 10, 2021). "Secret Invasion: Kevin Feige on Adapting Major Marvel Comic Event to Disney+ Series (Exclusive)". ComicBook.com. Archived from the original on January 11, 2021. பார்க்கப்பட்ட நாள் January 10, 2021.
  2. Vincent, Rodger (September 6, 2005). "Marvel to Make Movies Based on Comic Books". Los Angeles Times. Archived from the original on April 16, 2014. பார்க்கப்பட்ட நாள் January 18, 2014.
  3. Han, Angie (December 10, 2020). "Marvel announces four new Disney+ series including 'I Am Groot' and 'Secret Invasion'". Mashable. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 11, 2020.
  4. Paige, Rachel (December 11, 2020). "All of the Marvel Studios News Coming out of The Walt Disney Company's 2020 Investor Day Presentation". Marvel.com. Archived from the original on December 13, 2020. பார்க்கப்பட்ட நாள் December 14, 2020.
  5. Paige, Rachel (December 10, 2020). "'Secret Invasion' Reunites Samuel L. Jackson and Ben Mendelsohn in New Disney+ Series". Marvel.com. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  6. Otterson, Joe (September 25, 2020). "Samuel L. Jackson to Play Nick Fury in New Marvel Disney Plus Series (Exclusive)". Variety. Archived from the original on September 25, 2020. பார்க்கப்பட்ட நாள் September 25, 2020.
  7. Newby, Richard (April 7, 2019). "Is It Time for a Nick Fury Movie?". The Hollywood Reporter. Archived from the original on June 5, 2019. பார்க்கப்பட்ட நாள் October 1, 2020.
  8. Gelman, Vlada (December 10, 2020). "Secret Invasion, Marvel Series Starring Samuel L. Jackson, Coming to Disney+". TVLine. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.

வெளிப்புற இணைப்புகள் தொகு