சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்

சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (ஆங்கில மொழி: Shang-Chi and the Legend of the Ten Rings) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது 'சாங்க்-சி'[2] என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது.[3] இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஐந்தாவது திரைப்படம் ஆகும்.

சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்
இயக்கம்டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[1]
தயாரிப்புகேவின் பிகே
திரைக்கதைடேவிட் கால்ஹாம்
நடிப்பு
ஒளிப்பதிவுபில் போப்
படத்தொகுப்பு
  • நாட் சாண்டர்ஸ்
  • எலிசாபெட் ரொனால்ட்ஸ்டாட்டிர்
  • ஹாரி யூன்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 16, 2021 (2021-08-16)(லாஸ் ஏஞ்சல்ஸ்)
செப்டம்பர் 3, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$146.2 மில்லியன்

இந்த திரைப்படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[4] என்பவர் இயக்க, 'டேவிட் கால்ஹாம்'[5] என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார்.கேவின் பிகே தயாரிக்கும் இந்த படத்தில் சிமு லியு, அக்வாபினா, ரொனி லியோங்,[6] பலா சென், மெங்கர் ஜாங், புளோரியன் முண்டேனு, ரோனி சியெங், பெனடிக்ட் வோங், பென் கிங்ஸ்லி மற்றும் மிசெல் இயோ[7] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 3 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு வெளியாகி, உலகளவில் $431 மில்லியனுக்கும் மேல் வசூலித்து, 2021 ஆம் ஆண்டில் எட்டாவது அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

கதைச்சுருக்கம்தொகு

இந்த திரைப்படத்தின் கதை அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தொடர்சியாக நகர்கிறது. வென்வூ என்ற பத்து வளைய (ரிங்ஸ்) அமைப்பின் தலைவர் தன்னிடம் உள்ள வளையங்களின் சக்தியால் உலகை கட்டியாள்கிறான். அதன் நடுவில் ட லோவின் பாதுகாவலரான யிங் லீ என்ற பெண்ணை சந்திக்கின்றார், அவரின் சண்டையின் திறனை பார்த்து அவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவர் வென்வூவின் எதிரிகளால் கொல்லப்படுகிறார். ஆனால் மனைவி ட லோ இடத்தில் அவரின் இனமக்களால் அடைபட்டுக் கிடப்பதாகக் கருதும் வென்வூ, அந்த இடத்தை திறந்து மனைவியை விடுவிக்க நினைக்கிறான். இதற்காக, தன்னிடமிருந்து பிரிந்துசென்றுவிட்ட மகன் சாங்க்-சியையும் மகள் ஜியோலிங்கையும் தன்னிடம் வரவழைக்கிறான். ஆனால், வென்வூவின் மனைவி அடைபட்டுக் கிடப்பதாகக் கருதும் இடத்தைத் திறந்தால், அதில் உள்ள ஒரு சக்தி உலகையே அழித்துவிடும். இருந்தபோதும், மனைவி மீது இருந்த அதித காதலால் தனது மனைவிக்காக மகன் மற்றும் மகளுடன் சண்டை போட்டு அந்த இடத்தில உள்ள கதவை தனது சக்திகள் மூலம் திறக்கிறார். அதில் இருந்து வெளிய வந்த கருப்பு உருவ விலங்கு மூலம் அவர் இறக்கிறார். கடைசியில் அந்த பத்து வளையமும் சாங்க்-சியிடம் சென்று அவன் மூலம் அடைந்து கிடத்த கருப்பு மாயை அழிக்கப்ப்பட்டு உலகம் காப்பாற்றப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. Goldberg, Matt (October 14, 2019). "'Shang-Chi' Director Destin Daniel Cretton on His Vision for the New Marvel Film". Collider. October 14, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 27, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. Vincent, Rodger (September 6, 2005). "Marvel to Make Movies Based on Comic Books". Los Angeles Times. April 16, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 18, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Newby, Richard (December 4, 2018). "How 'Shang-Chi' Could Be Marvel's Next 'Black Panther'". The Hollywood Reporter. டிசம்பர் 12, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 12, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Couch, Aaron; Kit, Borys (March 13, 2019). "Marvel's 'Shang-Chi' Sets Director Destin Daniel Cretton". The Hollywood Reporter. March 20, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 13, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. Fleming Jr., Mike (December 3, 2018). "'Shang-Chi' Marvel's First Asian Film Superhero Franchise; Dave Callaham Scripting, Search On For Director Of Asian Descent". Deadline Hollywood. December 3, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 3, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. Fisher, Jacob (April 7, 2020). "Ronny Chieng Joins 'Shang Chi And The Legend Of The Ten Rings' (Exclusive)". Discussing Film. April 7, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 7, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  7. Davis, Brandon (January 21, 2020). "Michelle Yeoh In Talks For Marvel's Shang-Chi". Comicbook.com. January 21, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 21, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு