நியா டகோஸ்டா

அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்

நியா டகோஸ்டா (ஆங்கில மொழி: Nia DaCosta) (பிறப்பு: நவம்பர் 8, 1989) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் எழுதி மற்றும் இயக்கிய குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான லிட்டில் வூட்ஸ் என்ற படம் டிரிபெகா[1] திரைப்பட விழாவில் நோரா எஃப்ரான் பரிசை வென்றுள்ளது.[2] அதை தொடர்ந்து 2021 இல் கேண்டிமேன் என்ற திகில் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

நியா டகோஸ்டா
பிறப்புநவம்பர் 8, 1989 (1989-11-08) (அகவை 34)
புரூக்ளின், நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

இவர் 2020 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப்படமான தி மார்வெல்ஸ்[3] என்று படத்தை இயக்க பணியமர்த்தப்பட்டார். அத்துடன் இயக்குனர் ரையன் கூக்லர் சாதனையை முறியடித்து, மார்வெல் திரைப்படத்தை இயக்கிய இளைய திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Schillaci, Sophie (April 16, 2013). "Tribeca Announces Nora Ephron Award". The Hollywood Reporter.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. Obenson, Tambay (April 18, 2019). "How Nia DaCosta Went From Wide-Eyed NYU Film Grad to Hollywood Director on the Rise". IndieWire (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 10, 2020.
  3. Newby, Richard (August 6, 2020). "The New Possibilities for 'Captain Marvel 2'". The Hollywood Reporter.
  4. Vary, Adam B. (August 6, 2020). "'Captain Marvel 2' Lands Nia DaCosta as Director".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியா_டகோஸ்டா&oldid=3327713" இலிருந்து மீள்விக்கப்பட்டது