காவர்ட் இசுடார்க்கு

காவர்ட் இசுடார்க்கு (ஆங்கில மொழி: Howard Stark) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஆர்ச்சி குட்வின் மற்றும் டான் ஹெக் ஆகியோரால், ஆகஸ்ட் 1970 இல் வெளியான அயன் மேன் #28 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[1][2]

காவர்ட் இசுடார்க்கு
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுஅயன் மேன் #28 (ஆகஸ்ட் 1970)
உருவாக்கப்பட்டதுஆர்ச்சி குட்வின்
டான் ஹெக்
கதை தகவல்கள்
முழுப் பெயர்ஹோவர்ட் அந்தோனி வால்டர் இசுடார்க்
இனங்கள்மனிதன்
பிறப்பிடம்பூமி
குழு இணைப்புஇசுடார்க் இண்டஸ்ட்ரீஸ்
உதவி செய்யப்படும் பாத்திரம்அயன் மேன்
கேப்டன் அமெரிக்கா
திறன்கள்
  • மேதை நிலை அறிவுத்திறன்
  • அதிக திறமையான விஞ்ஞானி, பொறியாளர் மற்றும் தொழிலதிபர்

இந்த பாத்திரம் பொதுவாக அவரது மகன் டோனியின் கதைகளிலும், கேப்டன் அமெரிக்கா கதைகளிலும் பின்னணி கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. அவர் இசுடார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ஆவார். இந்த கதாபாத்திரம் இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள் உட்பட பிற ஊடகங்களில் தோன்றியுள்ளது.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர்களான 'ஜான் இஸ்லேட்டரி' மற்றும் டோமினிக் கூப்பர் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Goodwin, Archie (w), Heck, Don (p), Craig, Johnny (i). "The Controller Lives!" Iron Man 28 (August 1970)
  2. "Stark, Howard – Marvel Universe Archive". Marvel Comics. பார்க்கப்பட்ட நாள் August 17, 2014.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவர்ட்_இசுடார்க்கு&oldid=3324703" இலிருந்து மீள்விக்கப்பட்டது