ஜோ கார்னிசு

ஜோசப் முர்ரே கார்னிசு (ஆங்கில மொழி: Joseph Murray Cornish) (பிறப்பு: திசம்பர் 20, 1968) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வானொலிகளில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

ஜோ கார்னிசு
பிறப்புஜோசப் முர்ரே கார்னிசு
திசம்பர் 20, 1968 (1968-12-20) (அகவை 55)
வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
அறியப்படுவது

இவர் தனது நீண்டகால நகைச்சுவை கூட்டாளியான ஆடம் பக்ஸ்டனுடன்[1] இணைந்து 'ஆடம் மற்றும் ஜோ'[2] என்ற நகைச்சுவை வானொலி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 2011 ஆம் ஆண்டில் 'அட்டாக் தி பிளாக்'[3] என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து எட்கர் ரைட், ஆடம் மெக்கே மற்றும் பால் ருத் ஆகியோருடன் இணைந்து ஆன்ட்-மேன் என்ற திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_கார்னிசு&oldid=3302277" இலிருந்து மீள்விக்கப்பட்டது