ஜாக் பென் (பிறப்பு: மார்ச்சு 23, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்[1] மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 'இன்சிடென்ட் அட் லோச் நெஸ்' (2004) மற்றும் 'தி கிராண்டில்' (2007) போன்ற திரைப்படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான தி இன்க்ரெடிபிள் ஹல்க் என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். அதை தொடர்ந்து இணை திரைக்கதை ஆசிரியராக எக்ஸ்-மென் 2 (2004), எக்ஸ்-மென் 3 (2007) மற்றும் தி அவேஞ்சர்ஸ் (2012) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஜாக் பென்
பிறப்புமார்ச்சு 23, 1968 (1968-03-23) (அகவை 55)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைக்கதை ஆசிரியர், இயக்குநர்
பெற்றோர்ஆர்தர் பென்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

பென் மார்ச்சு 23, 1968 இல் நியூயார்க்கில் பிறந்தார். 1990 இல் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் பிரபல நியூயார்க் தொழிலதிபர் மற்றும் வழக்கறிஞர் ஆர்தர் பென்னின் மகன் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. "The New York Times". Movies & TV Dept. The New York Times. Baseline & All Movie Guide. 2008. 2008-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_பென்&oldid=3482399" இருந்து மீள்விக்கப்பட்டது