பிளாக் பான்தர்
பிளாக் பான்தர் (English: Black Panther) என்பது 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான பிளாக் பாந்தர் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
பிளாக் பான்தர் | |
---|---|
![]() | |
இயக்கம் | ரையன் கூக்லர்[1] |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | |
திரைக்கதை | |
இசை | லுட்விக் கர்ரான்சன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ரேச்சல் மோரிசன் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 29, 2018(டால்பி திரையரங்கம்) பெப்ரவரி 16, 2018 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200 மில்லியன் |
மொத்த வருவாய் | $1.348 மில்லியன் |
இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினெட்டாவது திரைப்படம் ஆகும். கேவின் பிகே[4] என்பவர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ரையன் கூக்லர் என்பவர் இயக்க,[5] ரையன் கூக்லர் மற்றும் 'ஜோ ராபர்ட் கோல்'[6] ஆகியோர் கதை எழுதியுள்ளார்கள். இப்படத்தில் சட்விக் போஸ்மேன்,[7] மைக்கேல் பி. ஜோர்டான்,[8] லுபிடா நியாங்கோ, டானாய் குரைரா, மார்ட்டின் பிறீமன்,[9] தானியேல் கலுயா, லெட்டிடியா ரைட், வின்ஸ்டன் துயூக், அங்கெலா பாசெட், பாரஸ்ட் விடேக்கர், மற்றும் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பிளாக் பாந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 29, 2018 அன்று ஒளிபரப்பப்பட்டது, பிப்ரவரி 16, 2018 இல் அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[10] இப்படம் விமர்சகர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது. பல விமர்சகர்கள் இது மார்வலின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது. சிறந்த திரைப்படம் , சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவு உட்பட 91 வது அகாடமி விருதுகளில் ஏழு பரிந்துரைகள் கிடைத்தன. 'பிளாக் பாந்தர்' சிறந்த படம் என்று பரிந்துரைக்கப்பட்ட முதல் மீநாயகன் படம், அத்துடன் அகாதமி விருதை வென்ற முதல் மார்வல் படம் ஆகும். இத்திரைப்படம் 76 வது கோல்டன் குளோப் விருதுகளில் மூன்று பரிந்துரைகள், 25 வது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் 24 வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளில் (மூன்று வெற்றி பெற்றது) பன்னிரண்டு பரிந்துரைகளும் பெற்றன.
கதாப்பாத்திரங்கள்
தொகு- சட்விக் போஸ்மேன் - பிளாக் பாந்தர்
- மைக்கேல் பி. ஜோர்டான் - எரிக் ஸ்டீவன்ஸ்
- லுபிடா நியாங்கோ - நாக்கியா
- டானாய் குரைரா - ஒக்கொய்
- மார்ட்டின் பிறீமன் - எவரட் கே. ராஸ்
- தானியேல் கலுயா - வ'காபி
- லெட்டிடியா ரைட் - ஷூரி
- வின்ஸ்டன் துயூக் - ம'பாக்கூ
- அங்கெலா பாசெட் - ரமோன்டா
- பாரஸ்ட் விடேக்கர் - சூரி
- ஆண்டி செர்கிஸ் - உலிசஸ் கிளாவ்
திரையிடல் மற்றும் வரவேற்பு
தொகுபிளாக் பாந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 29, 2018 அன்று ஒளிபரப்பப்பட்டது, பிப்ரவரி 16, 2018 இல், 2டி, 3டி, இமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில், அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் இயக்கம், திரைக்கதை, நடிப்பு (குறிப்பாக போஸ்மேன், ஜோர்டான் மற்றும் ரைட்), ஆடை வடிவமைப்பு, மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றிற்காக விமர்சகர்களிடமிருந்து வரவேற்பை பெற்றது. பல விமர்சகர்கள் இது மார்வலின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர். அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்பதாவது இடத்தை பிளாக் பன்தர் பெற்றது. இது உலகளவில் 1.35 பில்லியன் டாலர் வசூலித்து பெரும் சாதனையை செய்தது.
வசூல்
தொகுபிளாக் பாந்தர் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் 700.1 மில்லியன் டாலர்கள் மற்றும் பிற நாடுகளில் 646.9 மில்லியன் டாலர்கள் என உலகளாவிய மொத்தமாக $1.347 பில்லியன் வசூலை ஈட்டியது. அதன் திரையரங்கு ஓட்டத்தின் போது, அது மிக அதிக வசூல் செய்த தனி சூப்பர்ஹீரோ வெற்றிப்படமாக அமைந்து, மூன்றாவது அதிகமான வசூல் செய்த எம்.சி.யு. படமாகவும் அமைந்தது. எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஒரு கருப்பு இயக்குநர் இயக்கத்தில் மிக அதிக வசூல் ஈட்டிய படமாக இது அமைந்தது. இப்படம் $1 பில்லியனைத் தாண்டிய ஐந்தாவது மார்வெல் ஸ்டுடியோஸ் படம். டெட்லைன் ஹாலிவுட் இப்படத்தின் நிகர லாபத்தை $476.8 மில்லியன் டாலர் என கணக்கிட்டுள்ளது. இது 2018ன் அதிக மதிப்புள்ள திரைப்படத்தின் பட்டியலில் பிளாக் பான்தருக்கு இரண்டாம் இடத்தை அளித்தது.
விருதுகள்
தொகுபிளாக் பாந்தர் படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் பல விருதுகளை வென்றுக் குவித்தது. பிளாக் பாந்தர் அகாதமி விருதுகளில் சிறந்த படம் என்று பரிந்துரைக்கப்பட்ட முதல் சூப்பர் ஹீரோ படம், அத்துடன் அகாதமி விருதை வென்ற முதல் மார்வல் படம் ஆகும். பிளாக் பந்தர் பரிந்துரைக்கப்பட்ட விருதுகளின் பட்டியல்:
- சிறந்த படம் உட்பட ஏழு அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்றில் வென்றது.
- ஒரு அமெரிக்க இசை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் வென்றது.
- ஒன்பது பிளாக் எண்டர்டெய்ன்மென்ட் டிவி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதிலஇரண்டில் வென்றது .
- ஒரு பில்போர்டு இசை விருதுக்கு பரிந்த்ரைக்கப்பட்டது.
- ஒரு பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் வென்றது.
- பன்னிரண்டு விமர்சகர்கள் 'சாய்ஸ் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் மூன்றில் வென்றது.
- மூன்று தங்க குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
- எட்டு கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டில் வென்றது.
- ஏழு எம் டிவி மூவி & டிவி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு நான்கில் வெற்றியடைந்தது.
- பதினாறு NAACP பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு பத்தில் வெற்றியடைந்தது.
- ஐந்து மக்கள் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டில் வென்றது.
- பதினான்கு சனி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஐந்தில் வென்றது.
- இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவ்விரண்டிலும் வென்றது.
- பதினோரு டீன் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்றில் வென்றது.
- எம் டிவி வீடியோ மியூசிக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் வென்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Solomon, Dan (May 16, 2016). "How 'Creed' Auteur Ryan Coogler Punches Through The Hollywood Mold". Fast Company. Archived from the original on May 18, 2016. Retrieved May 17, 2016.
- ↑ Strom, Marc (January 11, 2016). "Ryan Coogler to Direct Marvel's 'Black Panther'". Marvel.com. Archived from the original on January 13, 2016. Retrieved January 11, 2016.
- ↑ Rosen, Christopher (September 10, 2016). "Chadwick Boseman teases Black Panther as the 'anti-hero' superhero". Entertainment Weekly. Archived from the original on September 11, 2016. Retrieved September 12, 2016.
- ↑ Lussier, Germain (April 12, 2015). "Kevin Feige Phase 3 Updates: 'Thor: Ragnarok,' 'Black Panther,' 'Inhumans' and 'Captain Marvel'". Film. Archived from the original on April 14, 2015. Retrieved April 12, 2015.
- ↑ Kit, Borys; Ford, Rebecca (December 4, 2015). "'Creed' Director Ryan Coogler in Talks to Direct Marvel's 'Black Panther'". The Hollywood Reporter. Archived from the original on December 5, 2015. Retrieved December 4, 2015.
- ↑ Sneider, Jeff (October 6, 2015). "Joe Robert Cole Nearing Deal to Write 'Black Panther' for Marvel (Exclusive)". TheWrap. Archived from the original on October 8, 2015. Retrieved October 6, 2015.
- ↑ Strom, Marc (October 28, 2014). "Chadwick Boseman to Star in Marvel's Black Panther". Marvel.com. Archived from the original on October 28, 2014. Retrieved October 28, 2014.
- ↑ Kit, Borys (May 13, 2016). "Michael B. Jordan Joins Marvel's 'Black Panther' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on May 14, 2016. Retrieved May 13, 2016.
- ↑ Schmidt, Joseph (November 19, 2017). "'Black Panther's Martin Freeman Talks About His Character's Journey". ComicBook.com. Archived from the original on November 21, 2017. Retrieved November 20, 2017.
- ↑ Strom, Marc (February 10, 2015). "Marvel Studios Schedules New Release Dates for 4 Films". Marvel Comic. Archived from the original on February 13, 2015. Retrieved February 9, 2015.