தெப்பி பெர்மன்

தெப்பி பெர்மன் (ஆங்கில மொழி: Debbie Berman) என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத் தொகுப்பாளர் ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), பிளாக் பான்தர் (2018) மற்றும் கேப்டன் மார்வெல் (2019) போன்ற திரைப்படங்களில் படத் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.[1][2]

தெப்பி பெர்மன்
பிறப்புஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா
பணிபடத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001-இன்று வரை

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

இவர் தென்னாப்பிரிக்கா நாட்டில் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்தார்.[3] கனடாவில் வான்கூவர் நகருக்கு செல்லுமுன், தென்னாப்பிரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மற்றும் திரைப்படங்களிலும் படத் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். இவர் இஸ்பேஸ் சிம்ப்ஸ் மற்றும் இன்விட்கஸ் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார். அங்கு ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), பிளாக் பான்தர் (2018) மற்றும் கேப்டன் மார்வெல் (2019) ஆகியவற்றிற்கான திரைப்படத் தொகுப்பு குழுவில் பணிபுரிந்துள்ளார்.[4][5] 2018 ஆம் ஆண்டில் அமெரிக்கே திரைப்படத் தொகுப்பாளராக கில்டில் சேர்க்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பி_பெர்மன்&oldid=3104594" இருந்து மீள்விக்கப்பட்டது