மார்டின் பிறீமன்

(மார்ட்டின் பிறீமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்[2] (Martin John Christopher Freeman, பிறப்பு: 8 செப்டம்பர் 1971) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் எம்மி விருது, பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் விருதும் வென்றுள்ளார், மேலும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

மார்டின் பிறீமன்
2018 இல் மார்டின் பிறீமன்
பிறப்புமார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்
8 செப்டம்பர் 1971 (1971-09-08) (அகவை 52)
ஆல்டர்ஷாட், ஹாம்ப்சையர்,[1] இங்கிலாந்து
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்றுவரை
துணைவர்அமண்டா அப்பிங்டன் (2000-2016)
பிள்ளைகள்2

இவர் ஆபீஸ் (2001-2003), ஷெர்லாக் (2010-2017) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் லவ் அக்சுவலி (2003), 'பில்போ பக்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் தி ஹாபிட்[3][4] என்ற திரைப்படத் தொடர்களிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) மற்றும் பிளாக் பான்தர்[5][6] (2018) போன்ற படங்களில் 'எவரெட் கே. ரோஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துளளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Larman, Alexander. "Freeman, Martin (b. 1971)". BFI Screenonline. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012.
  2. "Martin Freeman (April 2012)". Slow Boat Records. Archived from the original on 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 May 2013.
  3. "Martin Freeman to play Bilbo Baggins in The Hobbit". BBC News. 22 October 2010. https://www.bbc.co.uk/news/entertainment-arts-11604193. 
  4. Child, Ben (22 October 2010). "Martin Freeman as Bilbo Baggins, a match made in Hobbit heaven". Guardian (London). https://www.theguardian.com/culture/2010/oct/22/hobbit-martin-freeman-bilbo-baggins. 
  5. Perry, Spencer (January 2, 2018). "Black Panther Character Bios Released, New Preview Coming Next Week". ComingSoon.net. Archived from the original on January 3, 2018. பார்க்கப்பட்ட நாள் January 2, 2018.
  6. Schmidt, Joseph (November 19, 2017). "Black Panther's Martin Freeman Talks About His Character's Journey". ComicBook.com. Archived from the original on 21 November 2017. பார்க்கப்பட்ட நாள் November 20, 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டின்_பிறீமன்&oldid=3200176" இலிருந்து மீள்விக்கப்பட்டது