ஜான் பிரான்சிசு டேலி

அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்

ஜான் பிரான்சிசு டேலி (ஆங்கில மொழி: John Francis Daley) (பிறப்பு: 20 சூலை 1985) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், இசைக்கலைஞர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புரீக்ஸ் அண்ட் கீக்சு' (1999-2000) என்ற நகைச்சுவை நாடகத்தில் உயர்நிலைப் பள்ளி புதிய மாணவராக சாம் வீர் என்ற கதாபாத்திரத்திலும், 'போனசு' (2014-2017) என்ற புலன் விசாரணை குற்றவியல் தொடரில் விவரிப்பாளர் டாக்டர். லான்ஸ் ஸ்வீட்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் அறியப்படுகிறார். இதற்காக இவர் 2014 ப்ரிஸ்ம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[1] அத்துடன் இவர் டேபிளேயர் என்ற இசைக்குழுவுவில் கீபோர்டு வாசிப்பார் மற்றும் பாடகராகவும் உள்ளார்.[2]

ஜான் பிரான்சிசு டேலி
பிறப்புசூலை 20, 1985 (1985-07-20) (அகவை 39)
வீலிங், இல்லினாய்ஸ், ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1998–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கொரின் கிங்ஸ்பரி (தி. 2016)
பிள்ளைகள்1

இவர் திரைப்படத்துறையில் ஜொனாதன் கோல்ட்ஸ்டைனுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டதற்காக அறியப்படுகிறார். இந்த ஜோடி பல்வேறு திட்டங்களில் ஒன்றாக வேலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஜோன் வாட்ஸ், கிறிஸ்டோபர் போர்டு, கிறிஸ் மெக்கேனா மற்றும் எரிக் சோமர்ஸ் ஆகியோருடன் இணைந்து இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[3][4] (2017) என்ற படத்துக்காக இணை கதை எழுத்தாளர்களாக பணிபுரிந்துள்ளார், மேலும் இவர்கள் 2018 நகைச்சுவை 'கேம் நைட்' என்ற படத்தை இணைந்து இயக்கியுள்ளனர்.[5]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

டேலி 20 சூலை 1985 சிகாகோவில் உள்ள புறநகர்ப் பகுதியான வீலிங், இல்லினாய்ஸில் நடிகரான ஆர்.எஃப். டேலி என்பவருக்கும், ஒரு பியானோ ஆசிரியரான நான்சி டேலி என்பவருக்கும் மகனாக பிறந்தார். இவரது தந்தை ஐரிய கத்தோலிக்க பின்னணியை சேர்ந்தவர் மற்றும் தாயார் யூதர் ஆவார்.[6][7][8][9] இவர் நியூயார்க்கில் உள்ள நயாக்கில் வளர்ந்தார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "John Francis Daley as Lance Sweets". TV.com. Archived from the original on மே 26, 2016. பார்க்கப்பட்ட நாள் May 20, 2016.
  2. "Dayplayer", My space.
  3. "Back To Walley World: The Griswolds Go On 'Vacation' Again". NPR. July 25, 2015. Archived from the original on July 28, 2015. பார்க்கப்பட்ட நாள் July 26, 2015.
  4. Fleming, Mike Jr. (June 2, 2015). "'Spider-Man' Director Short List Topped By Ted Melfi & Jonathan Levine". Deadline Hollywood. Archived from the original on June 2, 2015. பார்க்கப்பட்ட நாள் June 2, 2015.
  5. Lee, Chris (21 June 2018). "How Game Night Broke Modern Comedy's Rules to Win at the Box Office". Vulture.com. https://www.vulture.com/2018/06/how-game-night-broke-modern-comedys-rules.html. 
  6. "Interfaith Celebrities: a Former Geek, the Equestrian Author, and an Aboriginal Jewish Doctor". InterfaithFamily.com. July 5, 2011. Archived from the original on மே 12, 2012. பார்க்கப்பட்ட நாள் March 15, 2012.
  7. "John Francis Daley". Twitter – @JohnFDaley. February 23, 2012. பார்க்கப்பட்ட நாள் March 15, 2012. For Ash Wednesday, I have my Irish Catholic dad put the ash on my forehead, then I have my Jewish mother lick her thumb and wipe it off.
  8. "John Francis Daley on co-writing tonight's episode of 'Bones' and sharing a scene with his dad for the first time. (Awww.)". Entertainment Weekly. April 14, 2011. பார்க்கப்பட்ட நாள் June 4, 2013. I have sympathy nerves for everyone. I think it's the half-Jew in me.
  9. "The Talented Mr Daley". meinmyplace.com. September 2012. பார்க்கப்பட்ட நாள் March 15, 2012. Um my mom's Jewish and my dad's Irish. I am in fact the same mix as Harrison Ford, which I like to point out as often as possible when I go on dates.
  10. Sklar, Ronald. "John Francis Daley: Cult Star Confidential". Pop Entertainment. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பிரான்சிசு_டேலி&oldid=3538877" இலிருந்து மீள்விக்கப்பட்டது