டிராக்சு (ஆங்கில மொழி: Drax the Destroyer) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாப்பாத்திரத்தை இசுடாலின் என்பவர் தி இன்வின்சிபிள் அயர்ன் மேன் #55 என்ற கதையில் தோற்றுவித்தார்.

டிராக்சு
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுஅயன் மேன் #55 (பிப்ரவரி 1973)
உருவாக்கப்பட்டதுஜிம் இசுடாலின்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஆர்தர் சாம்ப்சன் டக்ளசு
இனங்கள்மனித விகாரி
பிறப்பிடம்பர்பாங்க், கலிபோர்னியா
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
திறன்கள்
  • மனிதாபிமானமற்ற வலிமை, சகிப்புத்தன்மை, வேகம்
  • திறமையான வாள்வீரன் மற்றும் கைகோர்த்து போராடுபவர்
  • மீளுருவாக்கம்
  • வரையறுக்கப்பட்ட அண்ட விழிப்புணர்வு

இவர் ஆர்தர் டக்ளசு என்ற ஒரு மனிதர் ஆவார், இவரது குடும்பம் தானோசு என்ற சூப்பர்வில்லனால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதனால் தானோசை எதிர்த்துப் போராட கிரோனோசு என்று அழைக்கப்படுபவர் ஆர்தரின் ஆவியை எடுத்து ஒரு சக்திவாய்ந்த புதிய உடலில் வைத்து டிராக்சு என்ற புதிய உருவில் பிறந்தார். இவரின் கதாபாத்திரம் அடிக்கடி கேப்டன் மார்வெல், ஆடம் வார்லாக் மற்றும் தானோசுடன் சண்டையிடுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர் இன்பினிட்டி வாட்ச் எனப்படும் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் மீண்டும் தொடங்கப்பட்ட கார்டியன்சு ஒப் த கலக்சி குழுவிலும் உறுப்பினரானார்.[1]

இவரின் கதாபாத்திரம் இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வரை கதையை அடிப்படையாகக் கொண்ட நிகழ்பட ஆட்டகங்கள் உட்பட பல்வேறு மார்வெல் தொடர்புடைய வணிகப் பொருட்களில் தோற்றுவிக்கட்டது. இவருக்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் டேவ் பாடிஸ்டா என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018),[2] அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[3] போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Richards, Dave (14 October 2012). "NYCC: Bendis, McNiven & Wacker Relaunch the "Guardians of the Galaxy"". Comic Book Resources. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  2. Strom, Marc (அக்டோபர் 28, 2014). "Marvel Pits Captain America & Iron Man in a Cinematic Civil War". Marvel.com. Archived from the original on அக்டோபர் 28, 2014. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 28, 2014.
  3. Debruge, Peter (September 8, 2019). "Toronto Film Review: 'Endings, Beginnings'". Variety. Archived from the original on September 10, 2019. பார்க்கப்பட்ட நாள் September 13, 2019.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராக்சு&oldid=3328356" இலிருந்து மீள்விக்கப்பட்டது